Saturday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மரணத் தருவாயில், ஒரு மனிதனுக்கு தெளிவு வரும்போது அவன் புலம்புவது எப்படி தெரியுமா?

மரணத் தருவாயில், ஒரு மனிதனுக்கு தெளிவு வந்தால் அவன் எப்ப‍டி புலம்புவான்? என்பதை பட்டினத்தார் தனது பாடலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பாடலை விதை2விருட்சம் இங்கே பகிர்கிறது. இதோ அந்த பாடல் . . .
“வார்த்தைத் திறமில்லா மனிதருக்குப் புன் சொல்லாம்
சாத்திரங்கள் சொல்லிச் சதுர் இழந்து கெட்டேனே! – 1
 .
மெத்த மெத்தச் செல்வாக்கில் வேறு மருள் எடுத்துத்
தத்தித் தலை கீழாய்த் தான் நடந்து கெட்டேனே! – 2
 .
வழக்கத் தலங்களினும் மண் பெண் பொன் ஆசையினும்
பழக்கம் தவராமல் பதி இழந்து கெட்டேனே! – 3
 .
ஆணி பொருந்தும் அரும்பூமி அத்தனையும்
காணில் நமது என்று கனம் பேசிக் கொண்டேனே! – 4
 .
ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிப்
பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே! – 5
 .
குருமார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே! – 6
 .
ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல்
பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே! -7
 .
பிணவாசம் உற்ற பெரும்காயம் மெய் என்று
பண ஆசையாலே பதி இழந்து கெட்டேனே! – 8
 .
கண்ட புலவர் கனக்கவே தான் புகழ
உண்ட உடம்பெல்லாம் உப்பரித்துக் கெட்டேனே! – 9
 .
எண்ணிறந்த சென்மம் எடுத்துச் சிவபூசை
பண்ணிப் பிழையாமல் பதி இழந்து கெட்டேனே! – 10
 .
சிற்றெறும்பு சற்றும் தீண்டப் பொறா உடம்மை
உற்றுருக்கவும் சுடவும் ஒப்பித்து மாண்டேனே! – 11
 .
தன் உடம்பு தானே தனக்கும் பகையாம் என்று
எண்ணும் உணர்வு இல்லாமல் இன்பம் என்று மாண்டேனே! – 12
 .
தோல் எலும்பு மாமிசமும் தொல் அன்னத்தால் வளரும்
மேல் எலும்பும் சுத்தமென்று வீறாப்பாய் மாண்டேனே! – 13
 .
போக்குவரத்தும் பொருள்வரத்தும் காணாமல்
வாக்கழிவு சொல்லி மனம் மறுகிக் கெட்டேனே!” – 14
 .
ஆஹா! என்ன‍ ஒரு அருமையான வரிகள், ஒரு மனிதன், தான் மரணத்தில் இருக்கும்போது, அவன் எப்ப‍டி புலம்புவான் என்பதை , பட்டினத்தார் அருமையாக சித்தரித்து பாடியுள்ளார்.
.
பட்டினத்தாரைப் போற்றுவோம், அவர் சொன்ன‍ ஞானத்தை பெற முயற்சிப்போம்.
– விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: