Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நடிகை அஞ்சலியும் அவரது சித்தியும் . . .”! – மீண்டும் தொற்றிக்கொண்டது பரபரப்பு!

கடந்த ஏப்ரல் மாதம், நடிகை அஞ்சலி, தனது  வீட்டைவிட்டு வெளியேறி, தலைமறைவாக இருந்து வந் தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட‍து. டைரக்டர் களஞ்சியமும் சித்தி பாரதி தேவியும் தன்னை கொடுமை படுத்துவதா கவும் நடிகை அஞ்சலி, பத்தி ரிகைகளில் செய்தி வெளியானது. நடிகை அஞ்சலியை யாரோ கடத்தி போய் தனக்கு எதிராக பேச வைப்பதாகவும் அவரை கண்டு பிடித்து தரும்படியும் பாரதிதேவி சென்னை போலீஸ் கமிஷனரி டம் புகார் அளித்தார்.

கோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனுவும் தாக்கல் செய்தார். அஞ்ச லிமீது களஞ்சியமும் அவதூறு புகார் அளித்தார். இதையடுத்து ஐதராபாத் போலீசில் அஞ்சலி திடீரென ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

சித்தி மீதான கோபத்தில் சென்னை க்கு வரமாட்டேன் என்றும் தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்று ம் அறிவித்து இருந்தார். இதனால் களஞ்சியம் இயக்கத்தில் அவர் நடித்து வந்த ஊர் சுற்றி புராணம் படம் பாதியில் நிற்கிறது. சொத் துக்களை அஞ்சலியிடம் திருப்பி கொடு த்து விடுவதாக சித்தி கூறி வந்தார். இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சி யில் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். அதில் வெற்றி கிட்டியுள்ளது.

பாரத்தேவி ஐதராபாத் சென்று அஞ்சலி யை சந்தித்து பேசியதாக வும் பகையை இருவரும் மறந்து விட்டு பாசமாக பேசிக் கொண்ட தாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. அத்துடன் ஐதராபாத்தில் நடந்த பட விழாவுக்கு சித்தியையும் உடன் அழைத்து சென்று கூட்டத்தினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தினார். மாலைமலர்

Leave a Reply