வாழ வழியின்றி 92 வயதுள்ள ஒரு தாய், தனது மகன்கள் தன் னை வைத்து பாதுகாக்காமல், வீட்டை விட்டே விரட்டி விட்டதாக வும், அதுமட்டுமின்றி தனது ஓய்வூதியப் பணத்தையும், தனது கணவரது ஓய்வூ தியப் பணத்தையும், என்னை ஏமாற்றி, அவர்களே எடுத்துக்கொண்டு, என்னையு ம் வீட்டைவிட்டே விரட்டி விட்டதாகவும், தனது மருமகள் தன்னை அடித்து காயப் படுத்தி இருப்பதாகவும், சொல்வதெல் லாம் உண்மைக் குழு நடுவர் திருமதி லஷ்மி ராம கிருஷ்ணன் அவர்களிடம் முறையிட்டுள்ளார்.
இது குறித்து, திருமதி லஷ்மி ராம கிருஷ்ணன் அத்தாயின் மகன் களிடம் கேட்டபோது, மனசாட்சியே இல்லாமல் பேசி இணைப்பை துண்டித்து விட்டனர். அதிலும் அத் தாயின் மூன்றாவது மகனிடம் தொ டர்பு கொண்ட போது, அந்த மூன்றா வது மகனோ, கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி, உயிருடன் இருக்கும் தனது தாயை இறந்து விட்டதாகச் சொல்லி இணைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்த காட்சிகளை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்
இத்தாயை கவனிக்கும் பொறுப்பை இவரது மகளும் மருமகனும் ஏற்று க்கொண்டுள்ளனர். இவர்களுக்கு உறுதுணையாக ஜி தொலைக் காட்சியின் சொல்வதெல்லாம் உண்மைக்குழு இருந்து வேண்டிய உதவிகளை செய்வதாக திருமதி லஷ்மி ராம கிருஷ்ணன் உறுதி யளித்துள்ளார்.