ஜூன் 2013 (இந்த) மே மாத நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
கண்ணியவான்களின் விளையாட் டு என்று பெருமையுடன் அழைக் கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு இன்று களவானி களின் வியாபார விளையாட்டு என்று அழைக்கப் பட இந்தியா காரணமாயிருக்கிற து என்பது இந்த தேசத்திற்கு ஏற் பட்டிருக்கிற பெருத்த அவமானம், T20 என்று அழைப்பதை இனி 420 என்று அழைப்பதே இனி சாலப் பொருந்தும்.
11முட்டாள்கள் விளையா டுவதை 11,000 முட்டாள் கள் வேடிக்கை பார்க்கு ம் விளையாட்டு என்று பெர்னாட்ஷா அன்று சொன்னார். ஆனால் இன்றோ பல வியாபாரி கள்… பல பண முதலை கள் சூதாடுவதை பல கோடி அப்பாவி மக்கள் கைதட்டி ஊக்குவிக்கும் விளையாட்டாக கிரிக் கெட் உருமாறியிருக்கிறது.
ஆடுமாடுகளை ஏலத்தில் எடுப்பதுபோல் என்றைக்கு வீரர்களை ஏலத்தில் விலைக்கு எடுத்தார்களோ, அன்றைக்கே ஆரம்பித்து விட்டது விபரீதம்! வேறு எந்த விளை யாட்டுக்கும் தனி சேனல் இல்லை. ஆனால் கிரிக்கெட்டுக்கென்று 24 மணி நேரமும் ஓடக் கூடிய 10 சேனல்கள், எல்லாவற்றிலும் விளையாட்டுக்கே சம்பந்தமில்லாத விளம்பரங்கள், குத் தாட்டங்கள், குடியாட்டங்கள், இப்படி விளையாட்டு வியாபாரமா னால் அங்கே சூழு கவ்வும்தானே!
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் நாடுக ளில் கிரிக்கெட் விளையாட்டு இல் லை. காரணம் அவர்கள் உழைப்பாளி கள். நேரத்தை வீணடிக்க விரும்பாத வர்கள். ஆனால் வளர்கிறோம் என்று சொல்லிக்கொண்டே தேய்ந்துகொண்டிரு க்கும் நம் தேசத்திலோ கிரிக்கெட் தேசிய விளையாட்டு, சம்பக். . சம்பக்கும், கிலிகிலியும் தேசிய கீதம். உருப்படுமா இந்த தேசம் ?
கிரிக்கெட் இப்படி தறிக்கெட்டு போனதற்கு யார் காரணம்? அரசி யல் விளையாட்டானதும், விளை யாட்டு அரசியலானதும் தான் முக்கிய காரணம். இத்தனைக் கோடி ஊழல் நடந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ம், இந்திய அரசுக்கும் சம்பந்தமே இல்லையாம். அடப்பாவிகளா!
இந்திய அரசு உடனடியாக அனைத்து கிரிக்கெட் வாரியங்க ளையும் கலைக்க வேண்டும். இந்த ஊழலின் உண்மைகள் வெளிப்பட்டு, தவறு செய்தவர் கள், தண்டனை அனுபவிக்கும் வரை கிரிக்கெட் விளையாட் டிற்கு நம் நாட்டில் தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் தறிகெட்டிருக்கும் கிரிக்கெட்டு நெறிப்பட்டு நிமிர்ந்து நிற்கும்.
இந்த வைர வரிகளின் உரிமையாளர்
உதயம் ராம் (நம் உரத்த சிந்தனை) => கைபேசி 94440 11105