Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – வாழைப்பழ போண்டா

மா, பலா, வாழை இந்த மூன்று கனிகளில் முக்கிய பங்காற்றுவ தும், எல்லா நாட்களிலும் கிடைக்க‍ கூடியதுமான வாழைப்பழத்தை பயன் படுத்தி, போண்டா செய்து சாப்பிட்டால் எப்ப‍டி இருக்கும். சரி அந்த வாழைப் பழ போண்டாவை எப்படி செய்வ தென்று பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்:
 
வாழைப்பழம் – 2
மைதா மாவு – 1 1/2 கப்
சர்க்கரை – 1/4 கப்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் அந்த மசித்த வாழைப்பழம், மைதா மாவு, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, சற்று கெட்டியாக போண்டா மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவை யான எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பிறகு கலந்து வைத் துள்ள மாவை சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது இனிப்பா ன வாழைப்பழ போண்டா ரெடி!!!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply