Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சூரியனை பற்றி ஆராய செயற்கைக்கோளை, நாசா விரைவில் அனுப்புகிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனின் அடிப்பகுதி குறித்து விரிவான விவரங்களை பெற நவீன அறிவியல் செயற்கைக்கோள் (ஐரிஸ்) ஒன்றை இந்த மாதம் 26-ம் தேதி ஏவ முடிவு செய்து ள்ளது.இதில் இயங்கும் ஐரிஸ் டெலஸ் கோப், சூரியனின் அடிப்பகுதியில் இருந்து வெளி யேறும் புற ஊதா க்கதிர்கள் (அல்ட்ராவயலெட்) குறித்து ஆராய்ந்து மிக துல்லியமான புகைப்படங்களை அனுப்பி வைக்கும்.

இது குறித்த கண்காணிப்பில் ஈடுபடும் ஐரிஸ் குழுவானது, சூரிய னில் உள்ள பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன, அது எவ்வாறு சக்தியை பெறுகின்றது, மேலும் சூரியனின் சுற்றுப்புறத்தில் எவ் வாறு வெப்பம் வெளியேறி பரவி செல்கின்றது என்பது குறித்தும் கண்காணிக்கும்.
 
சூரியனின் மேற்பரப்பு மற்று ம் சுற்றுப்புறம் ஆகியவற்றி ன் இடைப்பட்ட பகுதி இவற் றில் எங்கிருந்து புற ஊதாக் கதிர்கள் (அல்ட்ரா வயலெட்) உருவாகின்றன என்றும் ஆராயும். இந்த புற ஊதாக் கதிர்கள்தான் பூமியின் காலநிலை மற்றும் பூமியின் காற்று மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
 
இந்த கண்டுபிடிப்புகள் சூரியனை பற்றி மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply