Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (08/06/13): “நான், அதுபோல் ஓர் இளைஞரை தேடலாமா?”

அன்புள்ள அம்மா—

நான் எம்.பி.ஏ., பட்டம் பெற்ற இளம்பெண். ஒரு வங்கியில் அதிகாரி யாகப் பணியாற்றுகிறேன். நல்ல சம்பளம்; எதிர்காலத்தில் மிகப் பெரிய பதவி கிடைக்கும் வாய்ப்புள்ள து. என் திருமணத்தை உடனே நடத்தி விட வேண்டுமென்று பெற்றோருக்கு ஆசை; பெரிய பதவி வகிக்கும் ஒரு மாப்பிள்ளையைத் தான் அவர்கள் தேடு கின்றனர்.

ஆனால், என் மனதில் கவலை. திருமண த்திற்கு பிறகு ஒரு பெண், தன் சுதந்திரத் தையும், பெர்சனாலிட்டியையு ம் இழந்து, கணவனுக்கு அடிமைப்படு வதைத்தான் பார்க்கிறேன். திருமணம் செய்து கொண்ட என் சக பெண் ஊழியர்க ளுக்கு அலுவலகத்திலும் வேலை; வீட்டிற்குத் திரும்பினால் அங்கே யும் வேலை. ஓய்வே இல்லை! இரண்டு “ரோல்’களிலும் – கடும் முயற்சி எடுத்தும் திறமையாகச் செயல்பட முடியவில் லை; இரண்டு இடத்திலும் அதிருப்திதான். பதவியில் தேக்கம்; குடு ம்ப வாழ்க்கையில் கசப்பு.

என் வேலையை நான் மிகவும் விரும்புகிறேன். வேலையில் உயர்வு அடைந்து, பெரிய வங்கித் தலைவராவது என் கனவு. இந்தக் கனவை நனவாக்க வேண்டுமேயானால், திருமணம் செய்யா மலேயே இருப்பது நல்லது என்று கருதினேன். ஆனால், அதே நேரம், ஒரு புருஷனின் அன்பையும், அணைப்பையும், உறவையும், குடும்ப பாசத்தையும், தாய்மையின் பூரிப்பையும் பெரிதாக நினைக்கிறவள் நான். கல்யா ணம் செய்யாமல், அந்த சுகங்களை இழப்பதற்கு நான் தயாராக இல் லை.

இந்தப் பிரச்னையைப்பற்றி என்கூட வேலை செய்யும் தோழி ஒருத்தியிடம் மனம் விட்டுப்பேசி னேன்; கருத்துப்பரிமாறினேன். ஒரு புதிய யோசனை இப் போது என் மனதில் உருவாகியுள்ளது. அதை இங்கே விளக்குகிறேன். என்னைப்போல் கை நிறைய சம்பா திக்கும் பெண்ணின் வருமானம், ஒரு குடும்பத்தைக்காப்பாற்ற போதுமானதே.

பட்டப்படிப்பு படித்தும் வேலையில்லாத ஓர் இளைஞரைத் திருமண ம் செய்து, அவரிடம் வீட்டுப் பொறுப்பை முழுவதுமாக ஒப்படைத்து, வீட்டைப் பற்றிக் கவலைப்படாமல், நான் அலுவ லக வேலைகளில் தீவிரம் காட்டலாமே… அவர் ஒரு, “ஹவுஸ் ஹஸ்பண்ட்’ ஆக செயல் பட, நான் சம்பாதித்து அவரையும், குழந்தைகளையும் காப்பா ற்றும், “பிரெட் வின்னர்’ ஆகப் பணியாற்றலாமே…

என் தோழியின் உறவு பெண் இப்படி, திருமணம் செய்து மகிழச்சிகர மாக வாழ்க்கையை நடத்துகிறாள். அவளை காலையில் எழுப்பி, “பெட் காபி’ போட்டு கொடுப்பது அவள் புருஷன். வீட்டு வேலைகள், சமையல் போன்றவற்றை அவன் கவனிக்க, அவள் அலுவலக வேலைகளை மட்டும் பார்க்கிறாள். நிம்மதியான வாழ்க்கை.

நான், அதுபோல் ஓர் இளைஞரை தேடலாமா?

பெற்றோரிடம் இந்த யோசனை பற்றி சொல்லக் கூச்சமாக இருக் கிறது. உங்கள் அறிவுரைகளை எதிர்பார்க்கிறேன்.

— இப்படிக்கு,
அன்பு சிநேகிதி.

அன்பான சினேகிதி —

உன் கடிதம் கண்டேன். ஆணுக்கு சமமாக படித்து, நல்ல உத்தியோ கத்திலும் இருக்கும் உன்னைப் போன்ற பெண்களுக்கு, சாதாரண மாய் ஏற்படக்கூடிய பயம்தான் உனக்கும் ஏற்பட்டிருக்கிறது; நியாய மான பயமும் கூட…

ஆபீசிலும் உழைத்து, வீட்டையும் கவனித்து, குழந்தை பெற்று, அவர் களை வளர்த்து ஆளாக்கி, மாமியார், மாமனார் உறவுகளைத் திருப் திப்படுத்தி கடன் வாங்கி, வீடுகட்டி, வாழ்க்கையில் ஒருபெண்ணுக் கு படிப்பும், பதவியும் கூடக்கூட- இன்னும் கழுத்தை நெறிக்கும் சுமைகள் தான் அதிகம். ஒரே சமயத்தில் ஏழெட்டு குதிரைகளை ஓட்ட வேண்டிய நிர்ப்பந்தம்.

இதுபோன்ற சமயங்களில் வேலைக்குப்போகாத வீட்டைக்கவனித்துக் கொள்ளக்கூடிய, படித்த, பட்டதாரி கணவன் கிடைத்தால் மண முடிக்கலாம் என, நீ நினைப்பதில் தவறே இல்லை.

எத்தனையோ ஆண்கள் படித்த பட்டதாரிப் பெண் களை, “நீ ஒண்ணு ம் வேலைக்குப் போகணும் கற அவசியமில்லே… நான் சம்பாதிக்கற தை வச்சுட்டு குடும்பத்தைக் கவனிச்சிட்டாப் போதும்…’ என்று சொல் வதில்லையா? அது போலத் தான் இதுவும்!

ஆனால், ஒரு விஷயம்… மேலைநாடுகளில் இது போன்ற விஷயங்க ள் சர்வ சாதாரணமாக நடை முறையில் இருப்பதுபோல, இன்னும் இங்கே புழக்கத்தில் இல்லை.

இப்போது அமெரிக்காவில் இன்னொரு புதிய யுக்தி யைக் கூடக் கை யாளுகின்றனர்…

அதாவது, ஆறு மாதங்கள் கணவன் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும். மனைவி, வீடு, குழந்தைகளை கவனித்துக் கொள்ள வே ண்டும்… அடுத்த ஆறு மாதம் மனைவி உத்தியோகத்துக்குப் போக, கணவன் குடும்பத்தை கவனிக்க வேண்டும். இதனால், இருவருக்கு மே பொறுப்பும் அடுத்தவர்களின் சிரமமும் புரியுமாம்.

அங்கே ஒரு வேலையை உதறுவதும், அடுத்த வேலையைத் தேடிக் கொள்வதும் சுலபம். இந்தியாவில் அப்படி இல்லை…

ஆரம்பத்தில் இந்த முறை சரியானதாகத் தோன்றி னாலும், நாளடை வில் கணவனுக்கு ஒரு விதமான காம்ப்ளக்ஸ்சும், அண்டை அயலாரின் கேலிப் பேச்சும் எரிச்சலையூட்டி, மண வாழ்க்கையில் விரி சல் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

வேலைக்குப் போகும் மனைவி என்ற பட்டப் பெயர் உனக்கு ஒட்டிக் கொண்டிருப்பதால், நீ சாதாரண மாக எதைச் சொன்னாலும், கணவனுக்கும், கணவ னைச் சார்ந்தவர்களுக்கும் தப்பாகவே படும்.

உதாரணத்துக்கு, உன் கணவர், தன் தங்கையின் திருமணத்துக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக உன் கையை எதிர் பார்த்து, நீ வெகு யதார்த்தமாக, “இப்ப இவ்வளவு பணம் அவசியமா?’ என்று கேட்டால் கூட விபரீதம் தான்.

இதே போன்ற சந்தர்ப்பங்கள் பெண்ணுக்கு வரும்போது, அவள் அட ங்கிப் போவாள் அல்லது அழுது ரகளை செய்வாள். ஆண் அழ முடி யாது. “ஈகோ’ தடுக்கும், அநாவசிய சண்டைதான் வலுப்பெறும்.

நீ இப்படிச் செய்யலாமே…

திருமணத்துக்கு முன்பே, தீர்மானமாய் மணக்கப் போகிறவனிடம் இப்படிச் சொல்லி விடு: எனக்கு என் உத்தியோகம் எத்தனை முக்கிய மோ அதே போல குடும்ப சந்தோஷமும் முக்கியம்… வக்கணையாக சாதம், பருப்பு, சாம்பார், பொரியல் என்று சமைத்துப் போட்டு விட்டு, ஆபீசுக்கும் ஓட முடியாது!

எளிமையான உணவு. அதையும் இரண்டு பேருமாகப் பகிர்ந்து தான் செய்ய வேண்டும். காலையி ல் காபி நீங்கள் தயாரித்தால், நான் இட்லியைக் குக்கரில் வைத்து, குளிக்கப் போவேன்…

சட்னியை நீங்கள் மிக்சியில் அரைத்து எடுத்து வைத்தால், நீங்கள் குளித்து விட்டு வருவதற்குள் டிபன் பாக்ஸ் ரெடியாகி விடும்.

இன்று நீங்கள் ஆபீசில் உங்களது ஸ்கூட்டரில் என்னை கொண்டு விடுங்கள். மாலையில் நான் பஸ்சில் வந்து விடுவேன்…

நீங்கள் மார்க்கெட்டிலிருந்து காய்கறி வாங்கி வந்தால், இரவு சப்பா த்தி நான்… சமையல் மேடையைக்கழுவி சுத்தம் செய்ய வேண்டியது நீங்கள்…

இது விளையாட்டில்லை. எப்போதும் பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் பெற்றோர் வந்தால், நான் லீவு போட்டு அவர்களை டாக்டரி டமோ, கோவிலுக்கோ அழைத்துப் போவேன்.

அதுபோல என் பெற்றோரை, அவர்கள் இங்கே வந்தால், கவனித்துக் கொள்ள வேண்டியது உங்க ள் பொறுப்பு…

— இப்படி ஒருவரையொருவர் புரிந்து, ஒத்துப் போ கிற புருஷனாகப் பார்.

ஒன்றைமட்டும் நினைவில் வைத்துக்கொள் சகோ தரி, வெறும், “பிரெட் வின்னர்’ (சம்பாதிப்பவர்) ஆக இருப்பதிலோ அல்லது ஹவு ஸ் ஹஸ்பண்ட் (வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவி போல, குடும்பத் தலைவன்) இருப்பதிலோ மட்டும் சுகமில் லை… எல்லாவற் றையும் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும்… இதில் தான் சுகம்!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: