Thursday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சண்டையில் பிரிந்த நடிகை திவ்யாவும், நான் ஈ சுதீப்பும், மீண்டும் இணைவதால் பரபரப்பு

அடிக்கடி சின்ன‍ பசங்க மாதிரி சண்டை போட்டு பிரிந்த நடிகை திவ்யாவும், நான் ஈ சுதீப்பும், தற்போது ஒரு திரைப்படத்தில் மீண் டும் இணைந்து நடிக்க‍ உள்ள‍தால் பரபரப்பு தொற்றிக் கொண்டு ள்ள‍து.

4 கன்னட படங்களில் சுதீப்பும் திவ்யாவும் இணைந்து நடித்துள்ளனர். இதில் நடித்த தை விட படப்பிடிப்புகளின்போது இவர்க ளுக்கு இடையே  ஏற்பட்ட சண்டைகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்ட‍து. இதனால் இந்த ஜோடி, சண்டைக்கோழிகள் என்று அழை க்க‍ப்பட்டது.

2004 ஆம் ஆண்டில், ‘ரங்கா எஸ்.எஸ். எல்.சி’ என்ற திரைப்படத் தில் நடித்த போ து, அதில் இடம்பெற்ற‍  நடன காட்சியில் ஏற்பட்ட‍ பிரச்னைக்கு  பிறகு, திவ்யா, சுதீப்புடன், ஒரு போதும் நடிக்க மாட்டேன் என்று பேட்டி கொடுத்தார்.

பின்பு 2008 ஆம் ஆண்டு ‘முசஞ்சே மது’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இவர்களுக்கு இடை யே ஏற்கெனவே முன் விரோதம் இருந் ததால், இதில் அதிக கவனமாக இருந்து நடித்துக் கொடுத்த‍னர்.

பின்பு அடுத்த திரைப்படமான, ‘ஜஸ்ட் மாத் மத்தாலி’ படப்பிடிப்பின்போது, இவர்களு க்கு இடையேயான மோதல் வெடிக்க‍த் தொடங்கியது. இவர்கள் இருவரும் ஒருவ ர் மீது ஒருவர் பரபரப்பு புகார் களை கூறி வந்தனர். அதனால், திவ்யா இல்லாமல் மற்ற காட்சி கள் முடிக்கப்பட்டது.

முந்தைய படப்பிடிப்பின்போது நடந்த சண்டை, ‘கிச்சா ஹுச்சா’ படப்பிடிப்பின்போதும் தொடர்ந்தது. திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி யில் இருவரும் தனித்தனியாகக் கலந்து கொண்ட போதும், இருவரும் சேர்ந் து நடிக்க வாய்ப்பில்லை என்று பேச ப்பட்ட‍து. ஆனால் தற்போது இந்த இவ ர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதாக செய்தி வெளியானதுழ‌

இதுபற்றி திவ்யா கூறும்போது, ‘சுதீப்பி டம் இருந்து அழைப்பு வந்தது. முதல் கோரிக்கையாக, சண்டை யை தவிர்க்க வேண்டும் என்றார். பிறகு படத்தில் நடிக்க கேட்டா ர். அவர் இயக்கும் படம் என்பதால் சம்மதித்தேன்’ என்றார்.

சுதீப் கூறும்போது, ‘இந்த கதையை உருவா க்கியதுமே திவ்யாதா ன் மனதில் வந்தார். அவரைத் தவிர வேறு யாரும் பொருத்த மாக இருக்க மாட்டார்கள் என்பதால் நடிக்க அழைத்தேன். மீண்டும் எங்களுக்குள் சண் டை வராது என்பதற்கு உத்தரவாதம் ஏதுமி ல்லை. அப்படி வந்தால் ஆரோக்கியமா னதுதான்’ என்றார்.

Leave a Reply