Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாலியல் கல்வியின் அவசியமும் அதன் முக்கியத்துவமும்!

க‌டந்த‌ (மே 2013 – இதழில் பக்க‍ எண். 16-ல்) மாதத்தில்- புது வரவுன்ற மாத இதழில் “பாதை மாறா பயணம்” என்ற தலைப்பில் “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமு ம்” என்ற கட்டுரையை உங்கள் நண்பன் விதை2விருட்சம் ரா. சத்திய மூர்த்தி ஆகிய நான், எழுதியுள்ளேன். (கத்த‍ரி கோலுக்கு வேலை கொடுக்க‍ப்பட்டு) பிரசுரமாகி உள்ள‍து. நான் எழுதிய இக் கட்டுரையை விதை 2விருட்சம் வாசகர் களுகளான உங்களுக்காக‌, விதை2விருட்சம் இணையத்தில் வெளியிடுகிறேன். படித்து உங்களது கருத்துக்களையும் விமர்சன ங்களையும் தெரிவிக்குமாறு விதை2விருட்சம் இணையம் சார்பா க கேட்டுக்கொள்கிறேன். இதோ எனது முழு கட்டுரை! (இதழில் வெளி வந்த பக்க‍ங்களை, இக்கட்டுரையின் முடிவில் இணைத்துள் ளேன்)

பாதை மாறா பயணம்

“பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”

எழுதியவர் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

பாலியல் கல்வி என்றதும் பெரும்பாலானவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ள‍னர். அவர்கள் கேட்கும் கேள்வி, “ஆ அது எப்ப‍டி குழந்தைகளுக்கு செக்ஸை எப்ப‍டி சொல்லிக் கொடுப்ப‍து, அப்ப‍டி சொல்லிக் கொடுத்தால், அவர்கள், வழி தவறியும் தரங் கெட்டும் போவார்களே!” என்று சொல்பவர் களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான். இனச் சேர்க்கை என்ற ஒரு நிகழ்வை தவிர் த்து அவர்களது உடற் கூறுகளை அவர்களே அறியும் வண்ண‍ம் சொல்லி புரிய வைத்து அவர்களை விழிப்புடன் இருக்க‍ வைப்பதே! பாலியல் கல்வி!. அத்தகைய பாலியல் கல்வியின் அவசியத்தை யும் முக்கியத்து வத்தையும் பற்றியது தான் இந்தக் கட்டுரை!

பிறப்பு என்ற ஒன்றின் மூலம் மனிதன் உட்பட பல உயிரினங்கள் இப்பூவுலகில் புது வரவு-ஆக வந்து, தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும் போதே இறப்பு என்ற ஒன்றும் நிச்ச‍யிக்கப்பட்டு விடுகிறது. இந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்ட‍ வாழ்க்கையில் தான் அவன் எத்த‍னை எத்தனை பிரச்சனைகளை எதிர் கொள்கிறான்.

ஒரு ஆணோ பெண்ணோ சிறுவயதிலே யே எதிர்கொள்ளும் பிரச்ச‍னைகளில் மிகபயங்கரமான‌ பிரச்ச‍னை இந்த பாலியல் ரீதி யான தொந்தரவுகள் !

முன்பெல்லாம், ஒரு பெண் பருவமடைந்தபின்தான் அவளுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகம் இருக்கும். ஆனால் இக்காலத்தி ல், மழலை மொழி மாறாத குழந்தைகள் கூட பாலியல் தொந்தரவுக்கு ஆட்படுவ துதான் வேதனைக்குரிய செய்தியாக இருக்கிறது.

பள்ளிப்பருவத்தில் ஆணாக இருந்தாலு ம் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, இயல்பாகவே தனது உடலில் நடக்கும் பாலியல் ரீதியான மாற்ற‍ங்களை கண் டு, அவர்களின் மனம் ஒருவித குற்ற உணர்வுக்கு ஆட்பட்டு, பல தவறான வழிகளுக்கு சென்று விடுகின்றனர். இன்னும் சிலரோ தனக்கு ஏதோ ஒரு பெரிய குறை வந்துவிட்ட‍து என்று எண்ணி இதை தனது தாய் தந்தையரிடம் கேட்க‌ அச்ச‍ப்பட்டு, தனது நண்பர்களிடம் கேட்கின் றனர். அந்த நண்பர்களோ,  இவர்களை தவறான வழி களுக்கும் அணுகுமுறைகளு க்கும் ஆட்படுத்தி விடுகின்றனர்.  
இதில் கொடுமை என்ன‍வென் றால், காமவெறி பிடித்த‍வர்களி டம் அக்குழந்தைகள் சிக்குண்டு, அவர்களது மிரட்ட‍லுக்கு பயந்து, தத்தமது அந்தரங்க உறுப்பு களை அவர்கள் தொடுவதற்கும், நாச வேலை செய்வதற்கு அடி பணிந்து தங்களது வாழ்க்கையையே தொலைக்கும் அவலம் ஆங்காங் கே நிகழ்ந்து கொண்டிருப்ப‍தை செய்தித் தாள்களின் வாயிலாக நான் அறி வோம். இத்த‍கை பாலியல் தொந்தர வுகள் பெண் குழந்தைகளுக்கு மட்டும் நிகழவில்லை. ஆண் குழந்தை களுக்கும் இவர்களது கோரப் பிடிக்கு ஆளாகிவருகின்றனர்.

இதற்கெல்லாம் என்ன‍ காரணம்?

குழந்தைகளுக்கு, ஆரம்ப கல்வியை சொல்லித்தரும்போது, ஒரு மனித‌னின் புகைப்படத்தை காண்பித்து, கண், காது, வாய், நாக்கு, தலை, முடி, கால், முட்டி, கை, மணிக் கட்டு, கைவிரல்கள், கால் விரல்கள், கழுத்து போன்ற வற்றை சுட்டிக்காட்டி, மனிதன் வெளி உறுப்புக்களின் பெயர்க ளை அறிய வைத்து, அது எவ்வாறு செயல் படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டுவோம்.

இன்னும் கொஞ்சம் வளர்ந்த குழந்தைக்கு த‌னது உடலில் இயங் கும் இதயம், சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை போன்ற பல உள் உறுப்புக்களின் இயக்க‍த்தை மேலோட்ட‍மாக சொல்லிக் கொடுப்போம்.

ஆனால் அவர்களது பிறப்புறுப்பின் இயக்க‍ம் பற்றியும், அதன் தனித் தன்மை பற்றியும் சொல்லிக் கொடுக் கிறோமா என்று கேட்டால்,

“இல்லை” என்று தான் பதில் வரும்.

பள்ளிப்பருவத்திலேயே குழந்தைகளுக்கு தங்களது உடற்கூறுக ளை பற்றி அடிப்ப‌டைகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க‍ வேண்டும். குழந்தைகளிடம், யாராவது உனது அந்தரங்க உறுப்புக்களை தொட் டாலோ, அல்ல‍து அவர்களது அந்தரங்க உறுப்புக் களை தொடச் சொன்னாலோ, அவர்களது சொல்லுக்கு அடிபணிந்து அங்கேயே இருக்காமல் இது மாதிரி எல்லாம் என்னை செய்யச் சொன்னா நான் எங்க அப்பா அம்மாக்கிட்டே சொல் லிடுவேன் என்று அவர்ளை மிரட்டும் மனோதிடத்தையும் வளர்க்க‍ வேண்டும். அதை பெற்றோர்களான உங்களிடம் மறைக்காமல் தெரிவிக் கும்படியும் மனதில் ஆழ பதியும்படி சொல்லி புரியவையுங்கள்.

பெண்குழந்தையாக இருந்தால் . . .

அந்தந்த வயது வரும்போது, அதன் உடலில் ஏற்படப்போகும், பாலியல் ரீதியான மாற்றங்களை அக்குழந்தையின் தாயோ, மூத்த‍ சகோதரியோ, அத்தையோ, பாட்டி யோ, சொல்லி விளங்க வைக்க‍ வேண்டும். அதாவது அந்த மாற்ற‍ங் கள் உடலில் இருக்கும் ஹார்மோன் களால்தான் இந்த மாதிரியான மாற்ற‍ங்கள் நிக ழும் என்பதையும்  இந்த மாற்ற‍ங்கள் நிகழ்ந்தால், நீ சிறுமி என்ற அந்தஸ்த்தில் இருந்து பெண் என்ற நிலைக்கு உயர்கிறாய்! என்பதையும் சொல்லி அக்குழந்தை யின் மனதில் பயத்தை போக்குவதன் மூலம், அக்குழந்தைக்கு தைரியத்தையும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அக்குழந்தை பூப் பெய்தும்போது தனது உடலில் ஏற்படும் மாற்ற‍ங்களை  சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனப் பக்குவத்தையும், மனோ திடத்தையும் ஏற் படுத்த‍ வேண்டும்.

அப்ப‍டி உங்களுக்கு சொல்ல‍த் தெரியவி ல்லை என்றால், தகுதியான பெண் மருத் துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அவரு ம் உங்கள் முன்னிலையிலேயே அக்குழந்தையின் உடலில் ஏற்படும் மாற் ற‍ங்களை தெரியப்படுத்தி, அக்குழந்தையி ன் மனதை பக்குவப் படுத்த‍லாம்.

பெண்ணுக்கு ஏற்படக்கூடிய பொதுவான பாலியல் மாற்ற‍ங்கள்

மார்பகங்களில் ஏற்படக்கூடிய மாற்ற‍ங்கள்

பெண் உறுப்பில் ஏற்படக்கூடிய மாற்ற‍ங்கள் (முடி வளர்தல் உட் பட‌)

மாத விடாய் வருவதால் உடலில் ஏற்படும் மாற்ற‍ங்கள்

1. எத்தனை நாளைக்கு இரத்தப் போக்கு இருக்கும்?

2.மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படுமா?

3.மாதவிடாய் காலத்தில் தான் தலைக்கு குளிக்கலாமா?

4.மாதவிடாய் காலத்தில் தான் விளையாடலாமா?

5.மாதவிடாய் காலத்தில் மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச‍ரிக் கைகள் என்னென்ன?

ஆண் குழந்தையாக இருந்தால் . . .

ஆண் குழந்தையாக இருந்தால், அந்தந்த வயதில் ஏற்படவிருக்கு ம் பாலியல் ரீதியான மாற்றங்களை அக்குழந்தையின் தந்தை யோ, மூத்த‍ சகோதரனோ, சித்தப்பா, பெரியபபா வோ, பாட்ட‍னோ, சொல்லி விளங்க வைக்க‍ வேண்டும். அதாவது அந்த மாற்ற‍ங்கள் உடலில் இருக்கும் ஹார் மோன்களால் தான் நிகழ்கிறது என்பதையும் இது போன்ற மாற்ற‍ங்களால், சிறுவன் என்ற அந்தஸ்த் தில் இருந்து வாலிபன் என்ற பதவி உயர்வு உனக்கு கிடைக்கிறது என்று சொல்லி அக் குழந்தையின் மனதில், தோன்றும் பயத்தை போக்குவ தன் மூலம், அக்குழந்தைக்கு தைரியத் தையும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்நிகழ்வினை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்த‍ வேண்டும்.

ஆணுக்கு ஏற்படக்கூடிய பொதுவான பாலியல் மாற்ற‍ங்கள்

முகத்தில் ஏற்படும் மாறுதல்கள் அதாவது மீசை, தாடி, வளர்தல்
கை, கால், மார்பு போன்ற பகுதிகளில் முடி வளர்தல்.

ஆண் உறுப்பில் ஏற்படும் மாற்ற‍ங்கள் (முடி வளர்தல் உட்பட‌)

விந்துப்பையின் தனித்தன்மை என்ன?

விந்து வெளியேறுவது அல்ல‍து வெளி யேற்றுவது குறித்த தகவல்கள் மற்றும் விழிப்புணர்வுகள்

குரலில் ஏற்படும் மாற்ற‍ங்கள்  (மழலைக்குரல் அல்ல‍து பெண் குரலில் இருந்து கட்டைக் குரலாக மாறுவது)

திருநங்கைகளாக‌ திருநம்பிகளாக மாறுவதற்கான பாலியல் காரணங்கள்

(திருநங்கையர் பற்றி, ம‌னநல மருத்துவர் ஷாலினி அவர்கள் விகடனில் எழுதிய‌ கட்டுரை ஒன்றிலிருந்து சில வரிகள் . . .)

திருநங்கைகள் / திருநம்பிகள் யார் என்றும், அடிப்படையில் அவர்கள் ஏன் இப்படி மாறினர் என்பதன் காரணம் பலருக்குத் தெரியாது என்பதுதான் அவர்கள் கேலியாகப் பார்க்கப்படுவதன் காரணம். ‘கருவறையி ல் ஓர் உயிர் ஜனிக்கும்போது முதலில் அது பெண் குழந்தையாக வே உருவாகிறது. ஆறு வாரங்கள் கழித்தே, அதன் நிரந்தரப் பாலின அடை யாளத்தை இயற்கை தீர்மானிக்கிறது. அந்தக் குழந் தை நிரந்தரமாகப் பெண்ணாகவே இருக் கும் பட்சத்தில், அதன் உடற் கூறுகளும் மனக்கூறுகளும் அப்படியே எந்த மாற்றமும் இன்றித் தொடரும். அந்தக் குழந்தையும் பெண் ணாகப்பிறக்கும். அதன் உடற்கூறும் மனக்கூறும் ஆணாக மாற்றம் அடையும் பட்சத்தில், அது ஆண் குழந்தை ஆகிறது. எதிர்காலத்தில் ஆண் தன் குழந்தைக்குப் பாலூட்டப் போவது இல்லை என்றாலும், அவனுக்குப் பயன் படாத, முதிர்ச்சி யடையாத மார்புக் காம்பு கள் இருப்பதே அவன் ஒரு காலத்தில் பெண்ணாகவே இருந்தான் என்பதற்கு ஆதாரம்.

பெண்ணில் இருந்து ஆணாக உடற்கூறு மாற்றம்கொள்ளும் வேளையில், மனக் கூறும் அதேபோல ஆணாக மாற வேண் டும். பெரும்பான்மையான ஆண் குழந் தைகளுக்கு இப்படியான மாற்றம் நிகழ் ந்துவிடும். ஆனால், இயற்கையின் விளையாட்டை யார் அறிவார்? ஒரு சில ஆண் குழந்தைகளுக்கு மட்டும் மனரீதியான மாற்றம் நிகழாமல், உடல் மட்டுமே மாற்றம் அடைந்துவிடுவது உண்டு. முறையான மாற்றம் இன்றிப் பிறக்கும் குழந்தை, உடலால் ஆணாகவும் மனதால் பெண்ணாகவுமே பிறக்கிறது. உலகம் இவர்களின் தோற்றத்தை வைத்து ஆணாகப் பார்க்க, இந்தக் குழந்தைகளோ, தங்களைப் பெண்ணாகவே உணர்வார் கள். இவர்களே, திருநங்கைகள். இதன் நேர் எதிர்த் தன்மையோடு பிறக்கும் குழந்தைகள், திருநம்பிகள்.  என்று ம‌ன நல மருத்துவர் ஷாலினி அவர்கள், விகடனில் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள் ளார்.

இதுபோன்ற மூன்றாவது பாலினக் குழந்தைகளுக்கு, அவர்களது உடலில் ஏற்படும் அசாதாரண மாற்ற‍ங்களுக்கு அவர்கள் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களது மனம் புண்படும்படியான வார்த்தை களோ அல்ல‍து செயல்களோ எதையும் செய்யாமல், ஆண் பெண் இன்ற இரு பாலினம் போன்றே இந்த திருநங்கை என்பதும் மூன்றாவது பாலினம்தான் என்பதில் அவர்களுக்கு தெள்ள‍த் தெளிவாக உணர்த்தி அவர்களை முழுமையாக அரவணைத்து செல்ல‍ வேண்டும். பெற்றோர்களும் உறவினர்களும் அரவணைத்து அவர்களுக்கு பாது காப்பு அரணாக விளங்கும் பட்சத்தில் திருநங்கைகளும் சமுதாயத்தில் தானும் ஒரு அங்கத் தினர்தான் என்ற எழுச்சியை மன தளவில் பெறுவர் அதுபோன்ற சமுதாயமும் அவர்களை கேலிப்பொருளாக பாவிக்காமல், அவர் களுடன் நட்பு பாராட்டும் என்பது திண்ண‍ம்.

இளவயது பாலினத் தொல்லைகளிலிருந்து குழந்தைகளை காப்போம்! திருநங்கையர்களை அரவணைப்போம்!

விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

*-*-*

புது வரவு இதழில் எனது கட்டுரை வெளிவந்த பக்க‍ங்கள் (வெட்டியவை போக எஞ்சியவை)

Pudu Varavu 01

Pudu Varavu 02

Pudu Varavu 03விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: