வருங்காலத்தில் ஆளில்லா போர் முறைதான் பின்பற்றப்படும். அதற்காக ரோபோ வீரர்களை உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட போகிறோம். மிகவும் புத்திசாலி த்தனமாக செயல்படும் விதத்தில் ரோ போ வீரர்களை உருவாக்குவது பற்றி ஆய்வுசெய்து வருகிறோம். இது புது திட்டம். இதற்காக பல ஆய்வகங்கள் ஏற்கனவே பெரியளவில் இயங்கி வரு கின்றன. தொடக்கத்தில் ரோபோ வீரர், மனித வீரருக்கு உதவியாக செயல்படு வார். எதிரியை அடையாளம் காணும் விதம் குறித்து ரோபோ வீர ருக்கு, மனித வீரர் அறிவுறுத்துவார். பின் படிப்படியாக, எல்லை யில் ரோபோ வீரரை நிறுத்தும் அளவுக்கு தொழில்நுட்பம் மேம் படுத்தப்படும். மனிதர்கள் பிறப்பிக்கும் உத்தரவுக்கு தகுந்தபடி ரோபோ வீரர் செயல்படுவார். போரில் மனித உயிரிழப்பை தவிர்ப் பதற்கு ரோபோ வீரர்களை உருவாக்குவது அவசியம். வெடி குண்டு செயல் இழக்கச் செய்யும் பணி, கதிரியக்க பாதிப்பு உள்ள ப
குதிகளுக்கு செல்வது போன்றவற்றில் ரோ போ ஏற்கனவே பயன்படுத்தப்படுகிறது. ரோ போ வீரர் என்பது ஒருபடி மேலானது. எதிரி யை அடை யாளம் காணும் விதத்தில் தகவல் தொடர்பு உட்பட பலவித தொழில்நுட்பங்கள் அதில் இருக்கும். ரோபோ வீரர்களை உருவா க்கி அவர்களை எல்லை கட்டுப்பாட்டு பகுதி க்கு அனுப்ப குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும். ஏற்கனவே 6 நாடுகள் ரோபோ வீரர்க ளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றன. என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் புதிய தலைவர் அவினாஸ் சந்தர் டெல்லியில் நேற்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
Enthiran padam pathutingalaaaa… appana unga mudivu sariyaa thaan erukkum.