Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“பதில் அளிக்க வேண்டிய அவசியம், எனக்கு இல்லை!” – நடிகை தீபிகா படுகோனே

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. ரஜினி ஜோடி யாக ராணா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்தார். ஆனால் ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்து வ மனையில் சிகிச்சை பெற்ற தால் ராணா படம் டிராப் ஆனது. ஆன போதும் தனது இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்கிய கோச் சடையான் படத்தில் தீபிகாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் ரஜினி. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளி யாக இருக்கிறது. இந்நிலையில் தீபிகா படுகோனே தினமலருக் கு அளித்த சிறப்பு பேட்டி இதோ…

* ஷாரூக் கானுடன், மீண்டும் ஜோடி சேர்ந்தது பற்றி?

ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது. எனக்குள்ள மிக நெருக்கமான ஒரு சில நண்பர்களில், ஷாரூக்கும் ஒரு வர். நான், பெரிதும் நம்பி க்கை வைத்துள்ள மனிதர்களில், அவருக் கு முக்கிய இடம் உண்டு. அவருக்கு ஜோடியாக, எப்போதெல்லாம் என்னை நடிக்க தேடு கிறாரோ, அப்போதெல்லாம், அவர் முன், ஆஜராகி விடுவேன்.

* “சென்னை எக்ஸ்பிரஸ் படம் குறித்து?

இதில், தமிழகத்தை சேர்ந்த பெண்ணாக நடிக்கிறேன். இதற்காக, கொஞ்சம், “ஹோம் ஒர்க்செய்தேன். நான், தென் மாநிலத்தை சேர்ந்த பெண் என்பதால், இந்த ரோலில் நடிப்பதற்கு, ரொம்ப சிரமப் படவில்லை. மும்பையிலிருந்து, ராமேஸ்வ ரத்துக்கு வரும் ரயிலில் நடக்கும் சம்பவங் களின் தொகுப்பு தான், இந்த படத்தின் கதை. ரசிகர்களை, 100 சதவீதம் மகிழ்விக்கும், பொழுது போக்கு படமாக, இது இருக்கும்.

* சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிக்கிறீர்களாமே?

ரோமியோ – ஜூலியட் காதல் கதை யை அடிப்படையாக வைத்து, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படத்தில் நடிக்கிறேன்.சஞ்சய் லீலா பன்சாலி மட்டுமல்ல; என்னை வைத்து இயக்கும் அனைத்து இயக்கு னர்களையும், எனக்கு பிடிக்கும். எனக்குள் மறைந்திருக்கும் ஒவ் வொரு திறமையையும், வெளிக் கொண்டு வருபவர்கள், இந்த இயக்குனர்கள் தான். இதில், பன் சாலிக்கு முக்கிய பங்கு உள்ளது.

* உங்களைப் பற்றி தொடர்ந்து,  கிசு கிசுக்கள் வெளியாகிறதே?

ஜாலியான மூடில் வந்த என்னை, காலியாக்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே. ஒவ்வொரு படமு ம், வெளியாகும்போதுதான், இதுபோ ன்ற கிசு கிசுக்கள் வருகின்றன. படம் வெளியானதும், இதை, அனைவரு மே மறந்து விடுகிறீர்கள். எனவே, இது போன்ற வதந்திகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம், எனக்கு இல்லை.

* ரன்வீர் சிங்குடன்  “கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதாக…?

கெமிஸ்ட்ரியாவது; பிசிக்ஸாவது. கடுப்பை கிளப்பாதீர்கள். ரன் வீர் சிங், மிகச் சிறந்த நடிகர். அவருட ன் பணியாற்றுவது, இனி மையான அனுபவமாக இருக்கும். உடன் பணி யாற்றும் நடிகர் என்பதை தவிர, அவருக்கும், எனக்கும் இடையே, வேறு எதுவும் இல்லை.

Leave a Reply