Wednesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களை அச்சுறுத்தும் பிராஸ்ட்டேட் புற்றுநோய் – விரிவான பார்வை

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மாதிரி ஆண்களுக்கு ! ‘சிவப்பு மாமிசம், தக்காளி, தர்பூசணி ஆகிய உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கிற ஆண் களுக்கு பிராஸ்ட்டேட் (prostate) சுரப்பு புற்றுநோய் தாக்கும் அபாயம் குறைவு’ என எச்சரிக்கின்ற னர் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுண ர்கள்.

பிராஸ்ட்டேட் சுரப்பி என்றால் என்ன? அதில் உண்டாகக்கூடிய பிரச்சனைக ள் என்ன? தீர்வுகள், சிகிச்சைகள் ஆகிய வற்றை தெரிந்து கொள்வோம்..

‘பிராஸ்ட்டேட் சுரப்பி என்பது, சிறுநீர் பைக்குக்கீழே, மலம் செல் லும் பாதைக்கு சற்று முன்னால் இருக்கக்கூடிய ஒரு சுரப்பி. இத ன் வழியேதான் சிறுநீரானது வெளி யேறும். ஆண்களின் உடலில் மிக முக்கிய உறுப்பான இதில் 50 வயதுக் குப் பிறகு பரவலான பிரச்னைகள் ஆரம்பிக் கின்றன. சிறுநீர் பாதையில் அடைப்பு, சிறு நீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் பையில் எரிச்சல் போன்ற பிரச்னை களுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய உணர்வு, அவசரமா கக் கழிக்கவேண்டிய உணர்வு, சிறுநீர் கழிக்கத்தொடங்கும் போது தாமதம் உண்டாவது, முழுக்க வெளியேற்றாத உணர்வு போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.

இதற்குச் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காதவர்களுக்கு, அடி க்கடி சிறுநீரகத்தொற்றும், சிறுநீர்பையில் கல் உருவாவதும், சிறுநீர் வெளியேறாமல் அடைப்பு உண்டாவதும், கடைசியாக சிறுநீர கமே பழுதடைவதும் நேரலாம்.

மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவப்பரிசோதனை அவசிய ம். முதல் வேலையாக ரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால், இதயநோய் போன்றவை உள்ளனவா எனப் பார்த்துவிட்டு, மற்ற சோதனைகளைத் தொடங்க வேண் டும். சிறுநீர் பையில் சிறுநீர் மிச்சமிருக்கிறதா, பிராஸ்ட்டேட் சுரப்பியி ல் ஏதேனும் கட்டிக ளோ, வீக்கமோ இருக்கின்ற னவா, அதன் அமைப்பு மாறியிருக்கி றதா, சிறுநீரகம் சரியாக இயங்குகிறதா, பிராஸ் ட்டேட் சுரப்பியின் அளவு எப்படியி ருக்கிறது, சிறுநீரக த்தில் வீக்கமி ருக்கிறதா என் கிற எல்லாவற்றையும் சோதிக்கவேண்டும். அபூர்வமாக சிலரு க்கு பிராஸ்ட்டேட் சுரப்பி யில் புற்றுநோய் வரலாம். இதை எளிய ரத்தப்பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பிரத்யேகக் கருவியின் மூலம் சிறுநீர் கழிக்கிற வேகம், அதற்கா ன நேரம், அளவு ஆகியவற்றைக் கண்டறி யலாம். பிரச்னைகள் இருப்பது உறுதி செய் யப்பட்டால், உடனடியாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும்’ என்கின்றனர் மருத்து வர்கள்..

‘பாதிக்கப்பட்டவர்கள் எப்போது, எவ்வள வு தண்ணீர் குடிக்கலாம் என்கிற ஆலோசனை யுடன் தொடங்கும் சிகிச்சை. 70 சதவிகிதத் தினருக்கு மாத்திரைகளின் மூலமே குணப் படுத்த முடியும். அது பலனளிக்காதவர்களுக்கு அறுவை சிகிச் சை தேவைப்படும். என்டோஸ்கோப்பிமூலம் கத்தியின்றி, வடுவின்றி செய்யலாம்.

தயக் கோளாறு உள்ளவர்கள், ஆஸ்பி ரின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வோர் ஆகியோருக்கு லேசர் மூலமும் இந்த அறுவை யை செய்ய லாம்.

50 பிளஸ் வயதுள்ள ஆண்கள், வருடம் ஒரு முறை மாஸ்டர் ஹெல்த்செக்கப்பி ல், இந்த பிராஸ்ட்டேட் சுரப்பிகளுக்கான சோத னையையும் சேர்த்துச் செய்வது பல ஆபத் துகளில் இருந்து காப்பாற்றும்’’ என்கின்றன ர் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள்..

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: