Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண் வயிற்றில் கர்பப் பை – அதிர்ச்சி தரும் உண்மை!

கடந்த 66 வருடங்களாக தன்னை ஆண் என்று நினைத்துக்கொண்டு வாழ்ந்தவர் தனக்கு வந்த வயிற்றுவலியை செக்கப்செய்ய போன போது அங்கிருந்த மருத்துவர்கள் – இவர் ஒரு பெண்ணாக்கும் என்று கூறி யதால் பலத்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார் அந்நபர்.  வியட் நாமில் பிறந்த சீனரான 66 வயது நபர், வயிறு வீக்கமாக இருப்பது குறித்து, டாக் டரிடம் பரிசோதிக்க சென்றார். அவ ரை நன்றாக பரிசோதித்த மருத்துவர் கள், அவரது கருப்பையில் கட்டி இருப் பதாக தெரிவித்தனர். இதை கேட்ட அந்நபருக்கு பெரிய அதிர்ச்சி. இதுநாள் வரை அவர் தன்னை, ஆண் என, நினைத்து கொண்டிருந்தார். ஆனால், அவர் பெண் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுவரை மருத்துவ உலகில் 6 நபர்கள் மட்டுமே இதுபோன்று ஆண் பாதி, பெண் பாதி உடல் அமைப்புடன் இருந்தது கண்டறியப்பட்டுள்ள து. யுவாங்ஷூ உடலில் ஆண் சுரப்பிகளும் இருந்துள்ளதால், அவர் பெண்களுக்குரிய உடல்வாகுடன் இல்லாமல் ஆணாக உள்ளார். இதுபோன்ற நபர்கள், ஏதாவது ஒரு பாலினத்துக்கான சுரப்பி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து யுவாங்ஷூவிடம் கேட்ட போ து, அவர் ஆண் சுரப்பிக்குரிய சிகிச் சையையே எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். இந்த வகை குறைபாடு க்கு டர்னர் சிண்ட்ரோம் என்று அழை க்கப்படுகிறது. 2,500 முதல் 3,000 பெண்களில் ஒருவருக்கு இந்த சிண்ட்ரோம் காணப்படுகிறது. இவர் கள் ஆண் தன் மையுடன் இருப்பார்கள்.

இதற்கு காரணம், பெற்றோரிடம் இருந்து எக்ஸ் குரோமோசோம் வந்தால், அது பெண் குழந்தையாக இரு க்கும். ஒரு எக்ஸ் மற்றும் ஒரு ஒய் குரோ மோசோம் வந்தால், அது ஆண் குழந்தை யாக இருக்கும். டர்னர் சிண்ட்ரோம் என்பது வெறுமனே எக்ஸ் குரோமோசோம் மட்டு மே இருப்பது. யுவாங் ஷூவிடம் டாக்டர் கள் துருவித் துருவி விசாரித்ததில், தனக்கு சிறுநீர் தானாக வெளியேறும் பிரச்னை இருப் பதாகவும், உயரமாக வளர்வது 10 வயதிலேயே நின்று விட்டதாகவும் கூறினா ர். யுவாங்ஷூக்கு பெண் உடலுக்குரிய அமைப்பு இருந்தாலும், அவ ரால் கர்ப்பம் தரிக்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய உலகம் சென்றபோது. . .

Leave a Reply