Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இயக்குநரும் நடிகருமான‌ மணிவண்ண‍ன், மாரடைப்பால் மரணம்

த‌மிழ் திரைப்பட உலகின் முன்ன‍ணி இயக்குனரும் குணச்சித்திர நடிகருமான மணிவண்ணன், இன்று சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பகல் 12 மணி அளவில் திடீரென்று ஏற்பட்ட‍ மாரப் டைப்பின் காரணமாக‌ மரணம் அடைந் தார். அவரது உடலுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகி றார்கள்.

இவர் இயக்கிய‌ முதல் திரைப்படம் கோபுரங்கள் சாய்வதில்லை அதனை தொடர்ந்து, நூறாவது நாள், கொடி பறக்குது, ஜல்லிக் கட்டு உட்பட‌ 50 படங்களை இயக்கி, அதை வெற்றி பெற்றுள்ள‍து. இவர் இயக்கத் தில் வெளிவந்த‌ அமைதிப்படை திரைப்படம் மாபெ ரும் வெற்றி பெற்று தமிழ்திரையுலகின் அதிமுக்கிய இயக்குனர் என்ற அந்தஸ் தினை பெற்றுக்கொடுத்த‍து.  படையப்பா, முதல்வ ன், காதலு க்கு மரியாதை, ரெட் உள்பட 400க்கும் மேற்பட்ட‍ திரைப் பட ங்களில் பல்வேறு குணச்  சித்திர வேடங்களிலும் நடித்து மக்க‍ளி ன் ஏகோபித்த‍ பாராட்டை பெற் றவர். மேலும் இவர், தனது கல் லூரி நன்பரான நடிகர் சத்திய ராஜ் அவர்களை வைத்து, சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக் க‍து.

சமீபத்தில், மேடையில் பேசியபோது, தான் இறந்தால் புலிக் கொடியை தன்மீது போர்த்த‍ வேண்டும் என்று சீமானிடம் கேட்டு க்கொண்டார் என்பது குறிப்பிட த்தக்க‍து.

இவர், தனது 59 ஆவது வயதில் மரணமடைந்த‌ மணிவண்ண‍ன் அவர்கள், 1979-ம் ஆண்டு, உதவி இயக்குநராக  பாரதி ராஜா விடம் இருந்து அவரிடம் தொழில் கற்றார். அதன்பின் படிப்படியாக உயர்ந்து இயக்கு னராக அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிட த்தக்க‍து. ச‌மீபத்தில் இவரது இயக்க‍த்தில் இவரது 50-வது படமாக வெளிவந்த‌ ராஜ ராஜ சோழன் எம்.ஏ.ஆகும் ஆனால். இதுவே கடை சிப் படமாகவும் அமைந்துவிட்டது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: