Thursday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொல்லிமலை – போலி சித்த‍ர்களால் சுரண்டப்படும் இயற்கை வளங்கள் – அதிர்ச்சி தகவல்கள் – வீடியோ

தென்னிந்தியாவில் உள்ள நமது தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள‍ நாமக்கல் மாவட்டத்திற்கு அருகே உள்ள‍ ஒரு சிறிய மலைத்தொடராகும். இந்த மலைத் தொடருக்குத்தான் கொல்லி மலை என்று பெயர். இம்மலையின் உயரம் சுமார் 1000 முதல் 1300மீ வரை இருக்கும் இதன் பரப் பளவு 280 சதுர கிமீ. பரப்பளவுக்கு பரந்து விரிந்து கிடக்கிறது இம்மலைத் தொடர்ச்சி.

இந்த கொல்லிமலையில் தீராத பலவேறு நோய்களை தீர்க்கும் அற்புத மூலிகைகளும்,  ஆகாய கங்கை என்றழைக்க‍ப்படும் நீர் வீழ்ச்சியும் இதன் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிற‌து. இந்த கொல்லிமலையில் சித்த‍ர்கள் பலர் ஆங்காங்கே காணப் படுகின்றனர். இவர் கள் தியானத்திலும், பல அற்புத மூலிகை களை தேடுவதிலுமே தங்களை ஈடுபடு த்திக் கொண்டு, வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால்  இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையில் குறைவாக வே இருக்கிறது. இதுவும் நல்ல‍துதான் அதனால் தான் என்ன‍வோ கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்கு கிறது.

இந்நிலையில், இங்கு வருகைதரும் சில போலி சித்த‍ர்களால் கொல்லி மலையின் வளங்கள் கொள்ளை அடிக்க‍ப்படுகின்றன• இது குறித்த செய்திக ளை சேகரிக்க‍ ராஜ் தொலைக் காட்சியில் கோப்பியம் நிகழ்ச்சி குழுவினர் கொல்லி மலைக்கு பயணம் மேற் கொண்டனர். அந்தக் குழுவிற்கு நேர்ந்த அனுபவத்தை இதோ அவர் களே விவரிக்கிறார்கள். (கீழுள்ள‍ வீடியோவில் காணலாம்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: