Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உறவுக்கு முன்னும் பின்னும் தம்பதியர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இன்றைக்கு ஏதாவது ஸ்பெசல் இருக்கா? இப்படி கணவர் மனைவி யைப் பார்த்து கேட்டால் அன்றைக்கு இரவு வீட்ல விசேசம் என்று அர்த்தம். பாதம், முந்திரி போட்டு பாயசமோ, கேசரியோ செய்தால் நிச்சயம் விசேசம் தான் என்பதை புரிந்து கொள்வார்களாம் கணவர் கள்.

உணவில் மட்டுமல்ல தலையில் வைக்கும் பூவின்மூலம் கூட தங்களின் காதலை, தேவை யை பெண்கள் உணர்த்துவார்களாம். வாச னை நிறைந்த மல்லி, முல்லை, சாதிமல்லி சூடினால் அன்றைக்கு இரவு படுக்கை அறை யில் காதல் மழை இருக்கிறது என்று அர்த்தம். அதே சமயம் வாசமில் லாத கனகாம்பரம் சூடினாலோ, அல்லது பூக்கள் வைக்காமல் இருந் தாலே வேறு எதுவும் விசேசமில்லை பேசாமல் படுத்து தூங்குங்க என்று குறிப்பால் உணர்த்துவதில் பெண்கள் கில்லாடிகளாம்.

இதுபோன்ற சில பல சமாச்சாரங்களை சொல்லி காமசூத்திரக் கலையை குறிப்பால் உணர்த்தியு ள்ளது ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’. முன்குறிப்பு மட்டுமல்லாது உறவுக்கு முன்னும் பின்னும் தம் பதியர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் கிளு கிளு சமாச்சாரங் களை அள்ளித்தெளித்து ள்ளது அந்த ஆய்வுப் புத்தகம்.

சலிக்க சலிக்க முத்தமழை

உறவின் தொடக்கத்தில் முன்விளையாட்டு க்கள் களைகட்டும். சலிக்க சலிக்க (சலிக் குமா என்ன?) முத்தமழைதான். ஆனால் முடிந்த பின்னரோ துணையை கண்டுகொ ள்ளாமல் விட்டுவிடுவார்கள். இதுவே பெண்களுக்கு உளவியல் ரீதியான சிக் கலை ஏற்படுத்தி விடுமாம். உறவின் முன்பு எப்படி துணையை தயார் படுத்துகிறோ மோ அதேபோல உறவிற்குப் பின்னும் அன்பாய் தலை வருடி ஆறுதலாய் அணைத்தபடி படுக்க வேண்டும் என்கின்ற னர் ஆய்வாளர்கள்.

வெட்கத்தில் சிவக்கும் முகம்

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 170 பேர் பங்கேற்றனர். உறவின்போது அவர்க ளின் தேவைகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. உறவின் முன் செக்ஸியான பேச்சு, முத்தம், போன்ற முன் விளையாட்டை விரும்புவதாக கூறியுள்ளனர். அதேபோல் உறவுக்கு பின் அன்பான அரவணைப் பை விரும்புவதாக கூறியுள்ளனர்.

மெதுவாய் வருடிக்கொடுக்க ஆசை

அதேபோல் உறவு முடிந்து, சோர்ந்து போய் படுத்திருக்கும் ஆண்களை பின்பக் கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம். அதே போ ல் உறவின் போது நடந்த ரொமான்ஸ் நிகழ்வுகளை கதோரம் கிசுகிசுப்பாய் பேச விரும்புகின்ற னராம்.

காதல் வெளிப்படும் தருணம்

உறவின் தொடக்கத்தில் ஐ லவ் யூ கூறுவதைப்போல உறவு முடிந்த பின் அதற்கு நன்றி கூறும் விதமாக ஐ லவ் யூ சொல்லுங்களேன். அதுவே அடுத்த ரவுண்டுக்கு வழி ஏற்படுத்தி தரும். ஆனால் பெரும் பாலான ஆண்கள் உறவு முடிந்த உதறிவிட்டு வெளியேறத்தான் நினைக்கின் றனர். சட்டென்று குளிக்கபோகின்றனர். ஆனால் தம் அடிக்கப் போய் விடுகின்றனர். ஒரு சிலர் மட்டுமே மனைவியை பூவாய் தாங்கி அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டு, காதோரம் ஐ லவ் யூ சொல்கின்றனராம்.

தம்பதியரிடையேயான தாம்பத்ய உறவு

தம்பதியரிடையேயான தாம்பத்ய உறவு என்பது உடலின் சங்கமம் மட்டுமல்ல அது இரு மனங்களின் சங்கமம் கூடத் தான். எனவேதான் மனமொத்து உறவில் ஈடுபடும்போது அது எண்ணற்ற ஹார் மோன்களை சுரக்கின்றன. இந்த ஹார் மோன் காதலின் ஆழத்தை அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு நூலில் தெரிவித்துள்ளது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply