இந்திய தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் சகலமானவர் களுக்கும் தெரிவிப்பது யாதெனின்…..
1. கரீனா கபூருக்கு தலைல பொடுகு தொல்லை, காத்ரீனாவிற்கு வறண்ட முடி,ஷில்பா ஷெட்டிக்கு முடி கொட்டுது,
2. நீங்க வீட்ல இல்லாம உங்க பெண்டாட்டி மட்டும் தனியா இருக் கும்போது உங்க பக்கத்துவீட்டு ஆசாமி டியோடரன்ட் உபயோகிக்கா ம பார்த்துக்கணும்.
3. இன்டர்வூக்கு போறவங்களுக்கு படிப்பு தகுதி வேண்டாம் நல்ல சிவப் பழகு இருந்தால் மட்டும் போதும்.
4. உங்க சமயலறையில் உப்பு இல்லாட்டி உங்க பாத்ரூம் அலமாரியில் இருக்கும் டூத் பேஸ்ட்ல உப்பு கண்டிப்பா இருக்கும்.
5. உங்க பெண் திருமணம் செஞ்சுக்க மறுப்பு சொன்னா அவளை ஒரு நகைக் கடைக்கோ ,புடவைக் கடைக்கோ அழைத்து சென்றால் உடனே சம்மதம் சொல்லிடுவா எப்படிப்பட்ட பேரழகன் சூர்யாவாக இருந்தாலும்.
6. எல்லா பெரிய நடிகர்களும் பரம ஏழைகள் ஒரு பத்து ரூபா கூல் ட்ரின்கைக் கூட காசு குடுத்து வாங்க முடியாதவர்கள் உயி ரையே பணயம் வைத்து போராடிக் கண்டு பிடித்து குடிப்பவர்கள.
7. ஷாம்பூக்களில் இருக்கும் அளவு பழச் சாறு பழங்களில்கூட இல்லை,
8. பாத்திரம் கழுவுவதற்கு எலுமிச்சம் பழம், ஜூஸ் தயாரிக்க ஆர்டிஃபிசியல் லெமன் பவுடர்.தேவை.
9. முக்காவாசி மக்கள் கரடு முரடான சாலைகளில் ஓட்டவே வாகனங்களை வாங்குகிறார்கள்.. அப்புறம் ஏன் ரோடு சரி இல்லை என்று புலம்புகிறார்கள்?
10. காட்பரீஸ் டெயிரி ஸில்க் சாக்லெ ட்டை முகத்தில் ஈஷிக் கொள்ளாமல் சாப்பிடவே முடியாது.
11. மோட்டார் பைக்குகளை ஃபிகர்க ளை ஏற்றிக் கொள்ளவே வாங்குகிறார்கள்.
12. எல்லா சோப்புகளும் 99.9 % பாக்டீரியா க்களைக் கொன்று விடும்.
13. அம்மாவும் பொண்ணும் பேசிகிட்டா மயிர பத்தி மட்டும் தான் பேசுவார்கள்.
14.எந்த துறையில் எக்ஸ்பெர்டா இருந்தா லும் வெள்ளை கோட்தான் அணிய வேண் டும்.
– Chelli Sreenivasan, facebook
Reblogged this on Manikandan.Durai.