Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – குபுஸ் பூரி

பூரி தெரியும். இது என்ன‍? “குபுஸ் பூரி”ன்னு யோசிக்கிறீங்களா, கீழே உள்ள‍ செய்முறையை படித்துவிட்டு, இந்த குபுஸ் பூரியை, செய்து சாப்பிட் டுப் பாருங்க, ஜோரான ஜோருங்க . . .

தேவையான பொருட்கள்

மைதா – 1 கப்,
தயிர் – கால் கப்,
சர்க்கரை – கால் கப் மற்றும் 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
ஆப்பசோடா – கால் டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிப்பதற்கு.

செய்முறை

தயிரில் சர்க்கரை, உப்பு, ஆப்பசோடா சேர்த்துக் கலந்து, மைதா வில் சேர்த்துப் பிசைந்து, 6 மணி நேரம் ஊற விட்டு, பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரிக்கவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: