Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!

பொதுவாக பற்களுக்கு வரும் பிரச்சனைகளில் அனைவருக்கும் வருவது சொத்தைப்பற்கள் தான். இதற்கு எந்த ஒரு வயதும் இல்லை. சிறு குழந்தைகளிலிருந் து, பெரியவர்கள் வரை இந்த பிரச் சனைக்கு பெரிதும் ஆளாவார்கள். இவ்வாறு சொத்தைப்பற்கள் வரு வதற்கு பல காரணங்கள் இருக்கி ன்றன. அதில் முக்கியமானது என்னவென்றால் அதிகளவில் இனிப்புகளை சாப்பிடுவது.

அதுமட்டுமின்றி சில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டு, நீண்ட நாட்கள் அவை பற்களில் இருப்பதால், பாக்டீரி யாக்கள் பற்களை அரிக்க ஆரம்பிக்கும். அவ்வாறு அரிக்க ஆரம்பிக்கும் போது, பற்களில் துவாரங்கள் ஏற்பட்டு, பின் அதனுள் நாம் உண்ணும் உணவுகள் சிக்கிக் கொண்டு, வாயில் நாற்றத்தை ஏற்படு த்தும்

ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கிய மாக இருப்பதற்கு தினமும் இரண்டு முறை பற்களை துலக்குவ தோடு, எதை சாப்பிட்ட பின்னரும் வாயை நீரினால் கொப்பளி க்க வேண்டும்.

அனைவருக்குமே சில உணவுகள் பற்களுக்கு நல்லது மற்றும் சில உணவுகள்கெட்டது என்பதுதெரியும் . அதிலும் பற்களுக்கு போதிய சத்து க்கள் இல்லையெனில் பற்களை கிருமிகள் எளிதில் தாக்கும். ஆகவே அவற்றிற்கு பலத்தை கொடுக்கும் வகையில், நார்ச்சத்து, கால்சியம் போன்றவை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இப்போது பற்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாமல், கிருமிகளை எதிர்த்துப்போடும் சில உணவுகளைப்பற்றிப் பார்ப் போமா!!!

இனிப்பில்லாத பழங்கள்

திராட்சை மற்றும் பீச் போன்ற பழங்க ளை சாப்பிட்டால், அவை பற்களின் துவார ங்களில் சிக்கிக் கொண்டு, அதில் உள்ள இனிப்புகள் துவாரங்களில் தங்கி கேடு விளைவிக்கும். ஆகவே அப்போது இனிப்பு கள் குறைவாக உள்ள பழங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப் பிட வேண்டும். இதனால் பற்கள் ஆரோக்கி யமாக இருக்கும். உதாரணமாக வெள்ளரிக்காயை சாப்பிடலாம்.

நார்ச்சத்துள்ள காய்கறிகள்

மற்ற உணவுப்பொருட்களை விட சில காய்கறிகளில் நார்ச் சத்துக்கள் அதிகம் இருக்கும். அதிலும் கேரட், பச்சை இலைக் காய்கறிகள் போன் றவற்றில் அதிக அளவில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சொத்தைப் பற்கள் ஏற்படாமல் தடு க்கும்.

தானியங்கள்

சுத்திகரிக்கப்படாமல் இருக்கும் தானியங்கள் கூட பற்களுக்கு சிறந்தது. அதிலும் சொரசொரப்பா ன தானியங்களான கம்பு, சோளம் மற்றும் ப்ரௌன் அரிசி போன்ற வை கூட பற்களில் ஏற்படும் சொத்தை களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.

உலர் திராட்சைகள்

லர் திராட்சைகளில் ஒரு சில ப்ளேவோனா ய்டுகள் மற்றும் போட்டோபீனால் இருப்பதா ல், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமி களை கட்டுப்படுத்தும். இறுதியில் எந்த சொத் தைப் பற்கள் வராமல் இருக்கும்.

கடல் உணவுகள்

கடல் உணவுகளான இறால், கடல் சிப்பிகள் போன்றவற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் நிறைந் துள்ளது. இவை பற்களை வலுவாக்கி, கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கின் றன.

இனிப்பில்லாத சூயிங் கம்

சாதாரணமாக சூயிங் கம் பற்களு க்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத் தும். ஆனால் அவ்வா று அவற்றை மெல்லும் போது வாயில் ஒருசில அமிலங்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அவை பற்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பு படலத்தை உண் டாக்குகின்றன. ஆகவே அதற்கு இனிப்பில்லாத சூயிங் கம்மை சாப்பிட்டால் நல்லது.

புதினா இலைகள்

பொதுவாக புதினா ஒரு இயற்கை கிருமி நாசினி. ஆகவே எந்த ஒரு இனிப்புகளை சாப்பிட்டாலும், உடனே சில புதினா இலை களை வாயில்போட்டு மென்று சாப்பிட்டா ல், பற்களில் கிருமிகள் தங்காமல் இருக் கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: