குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக் குருவி வாழ்ந்து வந்தது. இலை யுதிர் கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசை யை நோக்கிப்பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாதெனத் தீர்மானித்துவிட் டது.
குளிர்காலம் வந்தது . குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக் குருவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இரு ந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்க விடாமல் செய்ததோட் அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது.
அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக் குருவி மீது சாணம் போட்டு விட்டுச் சென்றுவிட்டது.
சிட்டு குருவிக்கு மூச்சு திணறினாலும் அந்த சாண்த்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. சூட்டினாலும் , மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பி த்தது.
அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையை கண்டது. சாணத்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் மகிழ்ச் சியோடு அதை விழுங்கிவிட்டது.
ஓஷோ சொல்கிறார் . . .
இந்த கதையில் மூன்று கருத்துக்களை காண லாம்.
ஒன்று: உன்மீது சாணம் போடுபவன் உன் எதிரி யாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டு: உன்னை சாணத்திலிருந்து அகற்று பவன் உன் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை
மூன்று: நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால், உன் வாயை மூடிக் கொண்டிரு.
(ஓஷோ சொன்ன கதை இது)
– முகநூல்
such a wonderful story…
story is very nice….
Super and really true