Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்பமாக இருக்கும் பெண்களே! “உங்கள் குழந்தை . . .”

கர்பமாக இருக்கும் பெண்கள் உங்கள் குழந்தை கருவில் தங்கி யுள்ளதா அல்லது ஃபெலோப்பியன் குழாயிலேயே தங்கியிருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர் கள். அப்பொழுதுதான் ஆரோக்கிய மான குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பது குழந்தைநல மருத்துவர்களின் அறிவுரையாகும் . கருவின் வளர்ச்சி குறித்தும் அதை பாதுகாப்பது குறித்தும் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைக ளை படியு ங்களேன்.

விந்தணு உடன் இணைந்த கரு முதலில் ஒரேயொரு முழு ‘செல் ’லாக இருக்கும். இது நாள் தோறு ம் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரியும். அதேநேரம், ஃபெலோப்பி யன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பையை நோக்கி நகரும். கடைசியில் கருப் பையில் போய் அது உட்காரும் போது கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந் திருக்கும்! ஆரோக்கி யமான கர்பம் என்பது இதுதான்.

உயிருக்கு ஆபத்து

சில சமயங்களில், கரு கருப்பையை நோக்கி நகராமல், ஃபெ லோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பிக்கும். இதைத் தான் ‘ஃபெலோப்பியன் குழாய் கர்பம்’ என்கிறார்கள். ஃபெ லோப்பியன் குழாயில் நோய் தொற்று இருந்தால்தான் இப் படி ஆகும். பொதுவாக கரு, தானாக நகராது. ஃபெலோப்பி யன் குழாயின் தசைகள் சுருங் கி விரிந்து, அதன் மூலம்தான் கரு நகர்த்தப்படுகிறது.

நோய்தொற்று காரணமாக சேதமடைந்த ஃபெலோப்பியன் குழாய் என்றால் சுருங்கி விரி யாது. அல்லது ஃபெலோப்பிய ன் குழாய் சுருங்கி கருவின் இயக்கத்தை தடுக்கலாம். சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் குழா யின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கும். இப்படிப்பட்ட குழாய்களால் ‘கரு’வின் இயக் கம் நிச்சயம் தடைபடும். இதனா ல் உயிருக்கே ஆபத்து வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

கருக்குழாய் வெடிக்கும்

ஊசி நுழையும் அளவுள்ள மெல்லி ய ஃபெலோப்பியன் குழாயில் கரு வளர ஆரம்பித்தால் முடிந்த வரை கருவை தாங்கி, முடியாத நிலை வரும்போது வெடித்துவிடும். உட னே கடுமையான வயிற்று வலியு ம், ரத்தப்போக்கும் ஏற்படும். உடன டியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகவேண்டும் என்கின் றனர் மருத்துவர்கள்.

முத்துப்பிள்ளை கர்பம்

அதேபோல் கருப்பையில் கரு ஒரேயொரு உருண்டையாக திர ண்டிருக்காமல் குட்டிக்குட்டி உருண்டைகளாக மாறி, ஒன்றோ டோன்று ஒட்டியபடி கருப்பை முழுக்க நிறைந்திருப்பது தான் ‘முத்துப் பிள்ளை’ கர்பம். இது குழந்தையாக உருவெடுக்க முடியாது. இதனை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து சுத்தம் செய்து விட லாம்.

கர்பம் என்று உறுதியானதுமே டாக்டரிடம் அடிக்கடி பரிசோதனை செய்துகொண்டால் இத் தகைய ஆபத்துக்களை சந்திக்காமலே தவிர்க்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply