Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனசே வியாதிதான்!

லோக வாசனைகளில் நன்றாகத் தடிப்பேற்றிக்கொண்டு ஒழுங் குக் கெட்டுப்போன நாம் முதலில் லோக கார்யங்களை ஒழுங்காகச் செய்து அந்தத் தடிப்பைத் தேய்த்துத் தேய்த்துக் கரைத்து விட்டு அப்புறந் தான் லோகத்தை விட்ட ஆத்மாவுக்குப் போக வே ண்டும். அதாவது, முதலில் தர்ம மார்க்கத்தில் போய், அப்புறம் தான் ப்ரஹ்மத்துக்கு முயல வேண்டு ம். தர்மம் என்பது ஸத்கர்மம் வழியா கவே ஆற்றப்படுவது. அதனால்தான் இன்னாருக்கு இன்ன கர்மம் என்று பக்குவம் பார்த்து, அதிகார பேதம் பார்த்துப் பிரித்துக் கொடுத்திருக்கும் போது அப்படிப்பட்ட கர்மத்தையே அவரவருக்கும் ஸ்வகர்மம் என்று சொல்லாமல் ஸ்வதர்மம் என்று சொல்லியிருப்பது.
 
வியாதிபோன பிற்பாடுதான் விருந்து சாப்பிட முடியும். ஆத்மான ந்தமாகிய அம்ருத போஜனம் பண்ணணுமென்றால் முதலில் கர்ம வியாதியையும் மனோ வியாதி யையும் போக்கிக் கொள்ள வேண்டும். (மனோ வியாதி என்றால் மனஸுக்கு ஏற்படும் க்லே சம், ப்ரமை போன்ற வியாதியைச் சொல்லவில்லை. மன ஸே ஒரு வியாதியாக ஆத்மாவிலே தோன்றி யிருப்பதைத் தான் சொல்கி றேன்.)
 
மனஸின் உயர்ந்த பண்புகளோடு கலந் து சரீரத்தின் வேலைகளை அதிகமா கக் கொண்டிருக்கும் தர்ம கர்மாக்கள் மூலமும், சரீரத்தின் வேலைகள் குறைவாகவும், மனஸின் உத்தம குணங் களே அதிகமாக இருக் கும் பக்தி உபாஸனையினாலும் கர்ம வியாதி, மனோ வியாதிக ளைப் போக்கிக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் சரீர ப்ரக்ஞை மிகவும் அதிகமாதலால் கர்மாவுக் கு முக்கியத்துவம். அப்புறம் பக்திக்கு முக்கியத்துவம். அப்புறம் தான் ஆத்ம விசாரமே முக்கி யமாகிற நிலைக்குப் போவது.

– ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

One Comment

Leave a Reply