Tuesday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கடவுளின் அருளைப் பெற, நாம் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்கு நாம் நல்ல‍ நல்ல‍ பழக்க‍ங்களை சொல்லிக் கொடுத்து வருகிறோம் அந்த நல்ல‍ பழக்க‍ங்களில் மிகவும் முக்கியமானது இறைவனை வணங்குவது. குழந்தைகளுக்கு, இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும்? என்பதை  hindu kids world.org என்ற இணையத்தில் மிகவும் அரு மையாகவும் எளிமையாகவும்  விவரிக்க‍ப் பட்டுள்ள‍து. இக்கட்டுரையை படித்து, குழந் தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்!. (குறிப் பு – இந்தக் கட்டுரையின் நோக்க‍ம் நேரடியாக குழந்தைகளிடமே! சென்றுசேரும் வண்ண‍ம் இதன் வார்த்தைகள் வடிவ மைக்க‍ப்பட்டு ள்ள‍து. இதோ அந்த கட்டுரை!

அன்புக் குழந்தைகளே!

அமைதியான, ஆனந்தமான வாழ்வைப் பெறுவதற்காகக் கடவு ளின் அருளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?

கடவுளிடம் முழுமையான நம் பிக்கையுடனும், அன்புடனும், பக் தியுடனும் அவரை வண ங்க வேண்டும்; பிரார்த்தனை செய்ய வேண்டும்; கடவுளைப் போற்ற வேண்டும்; நமது தேவைகளை அவரிடமே கேட்க வேண்டும்.

நமக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை அவர் அறிவார். அதற் கேற்றபடி அவர் நமக்குத் தமது அருளைத் தருவார்.

கடவுளை வழிபடும்போது, நமது மனம் தூய்மை அடைகின்றது. நம் மனதில் உறைந்திருக்கும் தீய எண்ணங்கள் மறைந்து, நல் லெண்ணம் வளர்கிறது.

சகல உலகங்களுக்கும் தலை வராகிய கடவுளைப் போற்றிப் பிரார்த்தனை செய்வதன் மூலம் நமது கவலைகளையும், துன்ப ங்களையும் தணிக்க முடிகிறது.

கடவுளை நாம் ஆலயத்திலும் வழிபடலாம்; வீட்டிலும் வழிபட லாம். உள்ளத்தூய்மையுடனும், அன்புடனும் நாம் எங்கேயிருந் தும் கடவுளை வழிபடலாம்.

ஆலயத்திலும், வீட்டிலும் கடவுளை வழிபடும் முறைகளை இத் தொடர் விளக்குகிறது. படித்து, அதன்படி பிரார்த்தனை செய்து, கடவுளின் நல்லருளைப் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகின் றோம்.

சூழலில் உள்ள திருக்கோவில்

நீங்கள் பல கோவில்களுக்கு உங்கள் பெற்றோர்கள், உறவினர் களுடன் சென்று இருப்பீர்கள். பல விடயங்கள் உங்களுக்கு புரி யாமல் இருந்திருக்கும். தேவையான விளக்கங்கள் கிடைக்காம ல் இருந்திருக்கலாம்.

கீழே உள்ள விபரங்கள் உங்களுக்கு பல புதிய விபரங்களை தரு வதுடன் நீங்கள் அடுத்த முறை கோவிலுக்கு செல்லும்போது, இவை உங்களுக்கு உதவுவதுடன் மிகவும் வேறுபட்ட ஆனந்தமா ன அனுபவத்தினை தரும்.

ஆலயங்களின் வகைகள்
பல வகையான இந்த கோவில்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தெரு முனையில், அரச மரத்தடியில் அமைந்திருக்கும் சிறு கோ யிலில் தொடங்கி வான் உயர்ந்த கோபுரங்களை கொண்ட பெரிய கோயில்கள் வரை பல வகையான கோயில்கள் உள்ளன.

அங்கோர் வாற்: கம்போடியாவிலுள்ள உலகின் மிகப் பெரிய இந்துக் (விஷ்ணு) கோவில்

கோவிலின் கட்டிட கலையிலும் கூட வட இந்திய முறைக்கும், தென் இந்திய மற்றும் இலங்கை முறைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதனை நீங்கள் அவதானித்து இருக்கலாம்.

ஆனால் எல்லாக்கோயில்களுக்கும் அடிப்படைநோக்கம் ஒன்று தான். இறைவனுக்கும், மனிதனுக்கும் பாலமாக விளங்கி, இறைவனையும், மனிதனையும் ஒன்றாக இணைப்பதே கோவி ல்கள் ஆகும்.

கோவிலின் சிறப்பு:
நாம் இறைவனை நமது உள்ளத்தில் தியானித்து வணங்கலாம்.
நமது வீட்டிலேயே இறைவனின் திரு உருவப்படத்தினை அல்ல து சிலையினை வைத்து வணங்கலாம். இவ்வாறு இறைவனை நாம் எங்கு வேண்டு மென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் வணங்கலாம்.

ஆயினும் கோயிலுக்கு சென்று இறைவனை வணங்குவதே மிக வும் சிறந்தது.

”கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”

”ஆலயம் தொழுவது சாலமும் நன்று”

ஆகிய பழமொழிகள் கோயில்களின் சிறப்பை விளக்குகின்றது.

கடவுள் இல்லாத இடமே இல்லை. அவர் எங்கும் இருக்கிறார்.

பசுவின் உடலில் உள்ள ரத்தமே பாலாக மாறி நமக்கு கிடைக்கி றது. பசுவின் உடல் முழுவதும் அதன் ரத்தம் பரவி ஓடுகின்றது. ஆயினும் பசுவின் மடியில் இருந்து மட்டுமே எமக்கு பால் கிடை க்கிறது. அதேபோல எங்கும் பரவி நிறைந்திருக்கும் இறைவனி ன் அருளையும், அன்பையும் பெற நாம் கோயிலுக்கு செல்ல வேண்டும். கோவிலில் இறைவனின் கருணையும், அருளும் நிறைந்து இருக்கிறது.

கோவிலின் அமைப்பு:
சைவத் திருக்கோயில்கள் ‘சிவாகமம்’ எனும் நூலில் சொல்லப் பட்ட விதிமுறைகளின் படியே அமைக்கப் படுகின்றன. இதனா லேயே நாம் சென்று வணக்கும் திருக்கோயில்கள் ஒரே மாதிரி யாக இருப்பதனை காண்கிறோம்.

எனினும் சைவ கோயில்கள், இந்து சமயத்தின் ஏனைய உப பிரி வுகளின் கோயில்களில் இருந்து வேறு பட்டதாக காணப்படும். உதாரணமாக வைஷ்ணவ திருக்கோயில்கள், சைவத் திருக் கோயில்களிள் இருந்து வேறு பட்டதாக காணப்படும்.

வட இலங்கையில் ஒரு கோவில்: நல்லூர்
வட இந்தியாவில் ஒரு கோவில்: வாரணாசி
குஜராத்திலுள்ள சோமநாதர் சிவாலயம்
நான்கு கோபுரங்களுடன் மதுரை மீனாட்சி ஆலயம்
திருக்கோவில் ஒன்றில் காணக் கூடிய முக்கிய அம்சங்கள்

திருக்கோவில் ஒன்றில் நாம் காணக்கூடிய முக்கிய அம்சங்க ளை இப்போது பார்போம்.

திருக்கோபுரம்

திருக்கோயிலின் முக்கிய அம்சங்களில் திருக்கோபுரமும் ஒன்று. இது திருக்கோயிலின் முன் வாயிலின் மேலாக நெடிது யர்ந்ததாக அமைக்கபட்டிருக்கும். எத்திசையிலிருந்தும் , வெகு தூரத்தில் இருந்து பார்க்கும் போதும் நன்கு தெரிய கூடியதாக அமைக்கப்பட்டிருக்கும்.

திருகோபுரத்தில் பல அடுக்குகள் உள்ளன.

இதில் கடவுள் உருவங்கள் அழகான சிற்பங்களாக அமைக்கப் பட்டிருக்கின்றன. மேலும் உலகில் வாழும் மனிதர்கள், பறவை கள்,விலங்குகள் முதலியனவற்றின் உருவங்களும், தேவர்கள், தேவதைகள், வாயிற்காவலர்கள் முதலிய பல உருவங்களும் திருகோபுரத்தில் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

உலகில் உள்ள யாவும் கடவுளில் அடக்கம் என்ற உண்மையை எமக்கு புரிய வைப்பதற்காகவே, திருக்கோபுரம் இவ்வாறு அமைக்கப்படுகின்றன.

திருக்கோபுரம் ‘ஸ்தூலலிங்கம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.
தென்னிந்தியாவிலே தஞ்சாவூர் எனும் ஓர் இடம் உள்ளது. இது தமிழ்நாட்டிலே அமைந்து உள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சோழ பேரரசரான முதலாம் ராஜ ராஜசோழன், இங்கே கருங்கல்லினால் ஆனதோர் சிவன் கோயில் ஒன்றை கட்டுவித்தான்.

இக்கோயிலின் 66 மீற்றர் உயரமான திருக்கோபுரம், அதி உயர்ந்த கோயில் கோபுரமாக கருதப்படுகின்றது.

மிக அதிகமாக யாத்திரிகர்களை கவரும் இக்கோயிலின், முற்றி லும் கருங்கல்லினால் ஆன கோபுரம் பல சிறப்பு அம்சங்களை கொண்டது.

இக்கோவிலின் உச்சியில் 339.5kg எடையுள்ள கலசம் வைக்கப் பட்டு உள்ளது. இக்கலசத்தில் 1902 சவரின் நிறையுள்ள தங்க முலாம் இடப்பட்டு உள்ளது.

இப்போது கிடைக்கக் கூடிய பாரம் தூக்கிகள் போன்ற நவீன உப கரணங்கள் இல்லாத அக்காலத்தில். இத்தகைய பாரிய கலசம் எவ்வாறு கோபுரத்தின் உச்சிக்கு கொண்டுசெல்லப்பட்டு வைக் கப்பட்டிருக்க முடிந்தது என்பது இப்போதும் ஒரு பெரும் ஆச்சரி யத்துக்கு உரிய விடயம் ஆகும்.

திருக்கோபுரம் –  திருத்தேர்

வ்வொரு கோயிலிலும் ஓர் அழகிய தேர் இருப்பதனை நீங்கள் காணலாம். இது ரதம் என்றும் அழைக்கப்படுகின்றது. திருக்கோ புரத்தினை போலவே ரதமும் உயர்ந்ததாக அமைக்கப்பட்டிரு க்கும்.

ரதத்தில் பெரிய மரத்தாலான நான்கு சக்கரங்கள் பொருத்தப் பட்டிருக்கும்.

கோயில்களின் திருவிழாக்காலங்களில், இறுதி நாட்களில் வரு ம் தேர்த்திருவிழாவானது மிகவும் முக்கியமான பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இத்தேர்த்திருவிழாவன்று இறைவனின் திருவுருவ ச்சிலையினை தேரின் மைய பகுதியில் வைத்து தேருடன் இணைக்கப்பட்டிருக்கும் நீண்ட இரு கயிறுகளை பக்தர்கள் கூடி கோயிலை சுற்றி வலது புறமாக இழுத்து செல்வார்கள்.

இவ்வாறு தேரில் வீற்றுருக்கும் இறைவனை, தேர்க்கயிறு பற்றி இழுத்து செல்வதன் மூலம் இறைவன் பேரருளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

கோயில்களின் திருவிழாக்காலங்களில், இறுதி நாட்களில் வரும் தேர்த்திருவிழாவானது மிகவும் முக்கியமான பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இத் தேர்த்திருவிழாவன்று இறைவனின் திருவுருவச்சிலையினை தேரின் மைய பகுதியில் வைத்து தேரு டன் இணைக்கப்பட்டிருக்கும் நீண்ட இரு கயிறுகளை பக்தர்கள் கூடி கோயிலை சுற்றி வலது புறமாக இழுத்து செல்வார்கள்.

தேரில் வீ ற்றிருக்கும் தெய்வச்சிலை
தேரை இழுக்க தயார் நிலையில் பக்தர்கள்

இவ்வாறு தேரில் வீற்றுருக்கும் இறைவனை, தேர்க்கயிறு பிடி த்து இழுத்து செல்வதன்மூலம் இறைவன் பேரருளைப் பெறலா ம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். உலகின் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் தமக்கு பிடித்தமான கோயில் தேர்த் திருவிழாவ ன்று அக்கோயிலுக்கு யாத்திரையாக சென்று தேர்க்கயிறு பிடித் து இழுப்பதற்காக செல்லும் பக்தர்கள் பலரும் நம்மிடையே இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் திருவாரூர் இன்னும் இடத்தில் உள்ள சிவன்கோ யில் தேர்த்திருவிழாவன்று பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் பூரி எனுமிடத் திலுள்ள ஜெகநாதர்கோவில் தேர்திருவிழாவிற்கும் இதேபோல் பெருமளவில் பக்தர்கள் திரள்வார்கள்.

சாதாரண காலங்களில் தேர், கோயிலின் முன்னால் அமைக்கப் பட்டிருக்கும் தரிப்பிடம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக் கும்.

தேர் மனித உடலையும் அதன் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் இறைவன் ஆத்மாவையும் குறிக்கும்.

ஸ்தல விருட்சம்

ஒவ்வொரு கோயிலிலும் ஒரு குறிப்பிட்ட வகை மரம் ஸ்தல விருட்சமாக வைக்கப்பட்டிருக்கும். (விருட்சம் = மரம்).

ஸ்தல விருட்சம் ஒன்றினை சுற்றி வணக்கும் பக்தர்கள்

சிவன் கோவில்களில் வில்வமரம் அல்லது மாமரம் ஸ்தல விருட்சமாக வளர்க்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

தென் இந்தியாவிலே, தமிழ் நாட்டிலுள்ள காஞ்சிபுரம் எனும் இடத்தில், ‘ஏகம்பர ஈஸ்வரர்’ எனும் பெயருடன் சிவபெருமானு ம், ‘காமாட்சி’ எனும் பெயருடன் உமாதேவியும் வீற்றிருக்கும் ‘ஸ்ரீ ஏகம்பர ஈஸ்வரர்’ ஆலயம் அமைந்துள்ளது.

உமாதேவியாரின் திரு அவதாரமாக பிறந்த அன்னை காமாட்சி, சிவபெருமானை பிரிந்து இருப்பது குறித்து மன வருத்தம் அடை ந்து, அவரை மீண்டும் அடைவதற்காக, ஒரு மாமரத்தின் கீழ், மண்ணினால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதன் முன்னா ல் தவம் இருந்தார் என ‘ஸ்தல புராணம்’ சொல்கிறது.

‘ஸ்ரீ ஏகம்பர ஈஸ்வரர்’ ஆலயத்தில் காணப்படும் ஸ்தல விருட்ச மாக உள்ள மாமரம் இதற்கு சாட்சியாக விளங்குகிறது. நான்கு பக்கங்களிலும் கிளைகள் கொண்டதான இம்மாமரம் ஆண்டுக ள் பழமை வாய்ந்தது எனச் சைவ அறிஞர்களால் உறுதிப்படுத் தப்பட்டுள்ளது.

நான்கு வகையான சுவைகளை கொண்ட இதன் கனிகள் நான்கு வேதங்களை குறித்து காட்டுவதாக அமைத்திருக்கின்றன.

ஆலயமணி

ஆலயமணி திருக்கோவிலினுள்ளே அமைந்திருக்கின்றது. ஒரு சிறிய கோபுரத்திலும் ஆலயமணி அமைந்து இருக்கும்.

பூஜைகள் ஆரம்பமாகும் போதும், பூஜையின் இறுதியில் கற்பூர தீப ஆராதனை செய்யப்படும்போதும், ஆலயமணி ஒலிக்கின்ற து.

ஆலயமணியில் இருந்து கீழே தொங்கி கொண்டிருக்கும் கயிற் றினை இழுத்து பக்தர்கள் மணியோசையை உண்டாக்குகிறார் கள்.

இந்த கம்பீரமான, இனிய ஒலியினை கேட்டு கோயிலின் நாலா பக்கமும் இருக்கும் மக்கள் பூஜை ஆரம்பமாவதனை உணர்ந்து அதனை காண்பதற்க்காக கோவிலுக்கு வருவார்கள்.

பக்தர்களை ”வா…, வா..” என அழைக்கும் கடவுளின் குரலாக ஆலய மணி ஒலிக்கின்றது.

ஆலய மணிக் கோபுரமானது இலங்கை மற்றும் தென் இந்தியா வில் இருக்கக் கூடிய கோவில்கள்ளிடையே காணப்படும் ஒரு முக்கியமான வேறுபட்ட அம்சம் கொண்டதாக இருக்கிறது.

தென் இந்தியாவில், கோவில்களில் ஆலய மணி கோவிலின் ஒரு மூலையில் சாதாரணமாக காணப்படலாம்.

இலங்கை போர்த்துகேயரின் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிரு ந்தபோது இந்து கோவில்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு, இந்து மத வழிபாடு தடை செய்யப்பட்டு இருந்தது.

அதே வேளை ஆலய மணிக் கோபுரத்துடன் கூடிய கத்தோலிக்க ஆலயங்கள் பல நிர்மாணிக்கப் பட்டன.

போர்த்துகேயரின் பின்னர் வந்த ஒல்லாந்தர்கள் தமது ஆட்சியி ன் இறுதியில், பிரித்தானியர்களின் அச்சுறுத்துதல்களை எதிர் கொள்வதற்காக, உள்ளூர் மக்களது ஆதரவினை பெறுவதற்கா க இந்து கோவில்கள் கட்டுவதற்கு அனுமதித்தனர்.

அவ்வாறு மீண்டும் அமைக்கப் பட்ட கோவில்கள், கத்தோலிக்க ஆலயங்கள் போன்று ஆலய மணிக் கோபுரத்துடன் அமைக்கப் பட்டன. இந்த ஐரோப்பிய கட்டிட கலை சேர்ந்த முறையானது பின்னர் பிரித்தானியர்களின் காலத்திலும், இப்போதும்கூட தொடர்கின்றது.

கிழக்கு மற்றும் வட இலங்கையில் உள்ள கோவில்கள்
இரு கோவில்களிலும் ஆலயமணிக்கோபுரம் காணப்படுகின்றது.
திருக்குளம்

திருகோயிலுக்கு வெளியே, கோயிலுக்கு அருகாமையாக திருக் குளம் அமைந்திருக்கும். இது தீர்த்தக்குளம் எனவும் அழைக்கப் படும்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோயிலினுள்ளே செல்லுமுன்ன ர் குளித்து அல்லது முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தமாக்கிக் கொள்ள இக்குளம் பயன்படுகின்றது. பக்தர்கள் குளத்தினுள் இறங்கி நீராடுவதற்கு வசதியாகத் திருக்குளத்தின் நாலா பக்கமும் படிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

சில திருக்குளங்களில் தாமரை, அல்லி முதலிய மலர்ச்செடிகள் வளர்ந்திருக்கும்.

திருவிழா காலங்களில் தேர்த்திருவிழாவிற்க்கு அடுத்த நாள் வரும் ‘தீர்த்த திருவிழா’ அன்று இறைவனின் திருவுருவச் சிலை இத் திருக்குளத்தில் நீராட்டுவார்கள்.

பின்னணியில் நான்கு கோபுரங்களுடன் மதுரை மீனாட்சி ஆலயத்தின் ‘பொற்தாமரைக்குளம்’.
திருமஞ்சன கிணறு

திருகோயிலினுள்ளே ஒரு கிணறு அமைந்திருக்கும். இது திரு மஞ்சன கிணறு எனப்படும்.

அந்தணர்களும், பக்தர்களும் தினமும் கடவுளுக்கு பூஜை, அபி ஷேகம் செய்வதற்கும், பிரசாதம் தயார் செய்வதற்கும் மற்றும் கோயி லினை சுத்தம் செய்வது தொடர் பான தேவைகளுக்கும் இக்கிணற்றி ல் இருந்துபெறும் தண்ணீரைப் பயன்படுத்துவார் கள்.

முற்றிலும் இறைகாரியங்களுக்கா கவே இக்கிணற்றுத் தண்ணீர் பயன் படுத்தப்படுவதனால் பொது மக்கள் இக்கிணற்று நீரை குளித்தல் போ ன்ற காரணங்களுக்காக பயன்படுத் துவதில்லை.

எனினும் குழாய் வழியாக தண்ணீர் பெறும் இன்றைய காலக் கட்டத்தில் நகர்புற கோவில்களில் இதுபோல் கிணறுகள் அவசியமில்லை. ஆயினும் கிராமங்க ளில் இருக்கக்கூடிய கோவில்களில் கிண றுகள் கட்டாயமாக காணப்படலாம்.

திருநந்தவனம்
திருக்கோயிலின் முக்கியமான அம்சமான திருநந்தவனம் கோயிலின் ஒரு பக்கத்தில் அமைந்து இருக்கும். இது பல வகை யான பூச்செடிகளும், பழ மரங்களும் வளரும் பூந்தோட்டம் ஆகும்.
பூந்தோட்டத்தில் அடியார்கள்

நறுமணம் மிக்க மல்லிகை, முல்லை, ரோஜா முதலிய பூச் செடிகளும் தோடை, மா, பலா, வாழை முதலிய பழ மரங்களும் இங்கு வளர்க்கப்படும். இங்கிருந்து பறிக்கப்படும் பூக்களை பூஜைக்குப் பயன்படுத்துவார்கள். அழகிய மாலைகளைத் தொடு த்து இறைவனுக்கு அணிவிப்பார்கள். பழ மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்யவும், பஞ்சாமிர்தம் தயாரிக்கவும் பயன்படும்.

தட்சனாமூர்த்தி மற்றும் பிள்ளையார் சிலைகளுடன்கூடிய அழகிய பூந்தோட்டம், இறைவன் திருக்கோவில், ஹவாய்.

உள்வீதி, வெளிவீதி

திருக் கோயிலில் மூலஸ்தானத்தினை சுற்றியதாக உள்வீதி அமைந்திருக்கும். இதனை அடுத்து உயரமான மதிற்சுவர் அமை ந்திருக்கும். இந்த மதிற்சுவருக்கு அடுத்ததாக கோயிலை சுற்றி வெளி வீதி அமைந்து இருக்கும்.

கோயில் வழிபாட்டின் கடைசியாக பக்தர்கள் உள்வீதியில், வலதுபுறமாக ஒருமுறையாயினும் அல்லது மூன்று முறையா யினும் வலம் வந்து வணங்குவது வழக்கமாகும்.

வெளி வீதி சுவாமி வலம் வருவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. திருவிழாக்காலங்களில் இறைவனின் திருவுருவச் சிலையை ரதத்தில் வைத்தோ, யானையில் வைத்தோ அல்லது பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்தோ இவ்வீதியில் வலம் வருவார்கள்.

பக்தர்கள் தங்கள் தோள்களில்….
யானையில்….

இறைவனுக்கு நேர்த்தி வைத்த, சில பக்தர்கள் தமது நேர்த்திக் கடனை நிறை வேற்றுவதற்காக பல முறை இந்த உள்வீதி வலம் வருவார்கள். (பார்க்க: நேர்த்தி வைத்தல்). மேலும் சிலர் வெளிவீதியில் சுவாமி வலம் வரும் போது, பின்னே பிரதட்டை எனும் நேர்த்கிக்கடன் செய்வார்கள்.

தேரின் பின்னே பிரதட்டை செய்கிறார்கள்

தமிழகத்தில் மதுரை எனும் புகழ் பூத்த நகரம், மீனாட்சி அம்மன் திருகோவிலினை மையப் புள்ளியாக கொண்டதோர் மிகப் பெரும் வெளிவீதியில் அமைந்ததாக காணப்படுகின்றது.

தமிழகத்தில் உள்ள இன்னுமோர் பெருமை மிக்க திருத்தலமான ‘திருவண்ணாமலை’ ஒரு மலை யின் அடிவாரத்தில் அமைந்து உள்ளது. ஒவ்வொரு முழுநிலா தினத்திலும் இரவில்பால் போன் ற நிலவொளியில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் இம் மலை யை சுற்றி 14 km நீளமான வெளி வீதியில் வலம் வருவார்கள்.

ஜில்லென்ற தென்றல் மென்மையாக வீச, முழுவட்ட பௌர்ண மி நிலவின் பால் ஒளியில் பரவசத்துடன் சுற்றிவரும்போது மலையை மிகப் பெரிய சிவலிங்கமாக கருதி வணங்கி வலம் வருவார்கள். இது ‘கிரிவலம்’ என அழைக்கப்படுகின்றது.

‘கிரிவலம்’ வரும் பக்தர்கள்

உட்கோவில்
திருக்கோபுரத்துக்கு கீழே கோயிலின் முன் வாசல் அமைந்து இருக்கிறது. வாசலினைத் கடந்து முன்னே சென்றால் வாயிலு க்கு நேர் முன்னதாக, வாயிலினை நோக்கியவாறு கர்பகிரகம் அமைந்து இருக்கும். இது மூலஸ்தானம் எனவும் அழைக்கப் படும்.

அங்கே, அக்கோவிலுக்கு உரிய கடவுளின் திருவுருவச்சிலை அமைந்து இருக்கும்.

சிவன் கோவிலாயின் சிவபெருமானின் திருவுருவச்சிலை அல் லது சிவலிங்கம், விஷ்ணு கோவிலாயின், மஹா விஷ்ணுவின் திருவுருவச்சிலையும், விநாயகர்கோவிலில் விநாயகப்பெருமா னின் திருவுருவச்சிலையும், முருகன் கோவிலில் வேல் அல்ல து முருகப்பெருமானின் திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டு இருக்கும்.

கோவிலின் வெவ்வேறு பகுதிகளில், நவக்கிரகங்கள், சண்டேசு வரர், துர்க்கை போன்ற விக்கிரகங்களையும் (உருவச்சிலைக ள்) காணலாம். மேலும் கோவிலில் அர்த்த மண்டபம், சபா மண் டபம் போன்றனவும் காணப்படும். இவற்றில் பல்வேறு இயல், இசை, நாட்டிய நிகழ்வுகளும் நடைபெறும். கோவிலில் காணப் படக்கூடிய கல்யாண மண்டபத்தில், பக்தர்களின் கல்யாண விழா க்களும் நடைபெறும்.

கர்ப்பக்கிருகத்திலுள்ள மூலவிக்கிரகத்துக்கு எதிரே, அக்கடவு ளின் வாகனம், கர்ப்பக்கிருகத்தையே நோக்கியபடி அமைந்திரு க்கும்.

சிவன் கோயிலாயின் எருது வாகனம் ( நந்தி தேவர் ), முருகன் கோயிலாயின் மயில் வாகனம், விஷ்ணு கோயிலாயின் கருட வாகனம், அம்பாள்கோயிலில் சிங்க வாகனம், விநாயகர்கோயி லில் மூஞ்சூறு வாகனத்தையும் நாம் இவ்வாறு காணமுடியும்.

மடப்பள்ளி

கோவிலின் பிறிதொரு பகுதியில் மடப்பள்ளி அமைந்து இருக்கு ம். இது சமையல் செய்யும் அறையாகும். இறைவனுக்கு நைவே த்தியம் செய்வதற்க்காக, பொங்கல், சுண்டல், அவல், லட்டு போ ன்றன இங்கே தயார் செய்யப்படும்.

கோயிலில் வளர்க்கப்படும் மிருகங்கள், பறவைகள்

பிள்ளைகளே,

இதுவரை நாம் பார்த்தது, ஒரு கோவிலில் நாம் பார்க்கக் கூடிய பொதுவான அம்சங்கள் ஆகும். இந்தியாவிலும், இலங்கையிலு ம் உள்ள பெரிய கோவில்களில் நாம் இவற்றை எல்லாம் பார்க்க முடியும்.

மேலை நாடுகளில் உள்ள திருக்கோவில்களில், இட வசதி குறைவுகாரணமாக, மேலே உள்ள எல்லா அம்சங்களையும் நாம் காண முடியாது. எனினும், எச்சிறு கோவிலாயினும், அங் கே கட்டாயமாக, மூலஸ்தானம் அமைந்து இருப்பதனை காண முடியும்.

நாம் அடுத்து கோவிலுக்கு செல்லும் முறை மற்றும் அங்கு வழி படும் முறை பற்றியும் பார்ப்போம்.

கடவுள் வழிபாடு – ஆலயம்
சிறுவர், சிறுமிகளே,நாம் கடவுளை வணக்கப் பல வழிகள் இருகின்றன.இங்கே ஒரு ஆலயத்தில் இறைவனை வணக்கும் முறை பற்றி பார்ப்போம்.

ஆலயத்தில் கடவுளை வழிபடும் முறை

அன்புத் தம்பி, தங்கைகளே!

நம்மையும், நாம் வாழும் இந்த உலகத்தையும், உலகத்தில் வாழும் சகல உயிர்களையும், சூரியன், சந்திரன் மற்றும் கிரகங் கள், நட்ச்சத்திரங்களையும், இவை யாவற்றையும் உள்ளடக்கிய அகன்ற பிரபஞ்சத்தையும் படைத்து, காத்து, அழித்து…… ஓர் ஒழுங்கு முறைப்படி இயக்கி வருபவர் கடவுள்.

கடவுள் எங்கும் நிறைந்து இருக்கிறார். அவர் இல்லாத பொருளோ, இடமோ இல்லை.

அவர் எல்லாப் பொருட்களின் உள்ளேயும் இருக்கின்றார்; அந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் கடந்தும் இருக்கின்றார். ( கட + உள் = கடவுள் ).

நம் சிந்தனை, சொல், செயல் யாவற்றையும் அவர் கண் காணித்துக் கொண்டேயிருக்கின்றார்.

கடவுளை வணங்குதல்

இப்படியாக, எங்கும் நீக்கமற நிறைந்து நின்று நம்மைக் காத்து ரட்சிக்கும் கருணைக் கடவுளை நாம் வணங்க வேண்டும் அல் லவா? அவரை எப்படி வணங்குவது? …. எங்கே வணங்குவது ?

கடவுளை நாம் எங்கும் வணங்கலாம். நம் உள்மனதுக்குள் அவ ரைத் தியானித்து, அன்புடன் வணங்கலாம்.

நாம் வாழும் வீட்டிலேயே ஒரு பூஜை அறையை அமைத்து, அங்கேயும் கடவுளை வணங்கலாம்.

ஆயினும், திருக்கோயிலுக்குச் சென்று, ஏனைய பக்தர்களுடன் சேர்ந்து கடவுளை வணங்குவதில் உள்ள நன்மைகள் ஏராளம். இதற்கு ஓர் உதாரணம் சொல்லட்டுமா?

சூரிய ஒளி + பஞ்சு = நெருப்பு ?

சூரிய ஒளி சக்தி மிக்கது என்பது உங்கள் எல்லாருக்கும் நன்கு தெரியும். ஒளிச்சக்தி, வெப்ப சக்தி என்னும் இரண்டு வகையான சக்திகள் சூரிய ஒளியில் உள்ளன. ஆனால், வெட்ட வெளியில், சூரிய ஒளி படும்படி சிறு பஞ்சை வைத்துப் பாருங்கள். அது எரிகிறதா? இல்லை. எவ்வளவு நேரம் சூரிய ஒளியில் வைத்தா லும், அது எரிவதில்லை.

ஆனால், ஒரு கண்ணாடி வில்லையை (லென்ஸ்)ச் சூரிய ஒளி க்கு நேரே பிடித்து, அதன் கீழே அந்தப் பஞ்சை வைத்துப் பாருங் கள். என்ன நடக்கிறது ? சூரிய ஒளி ஒரு புள்ளியாகக் குவிந்து அப்பஞ்சிலே படும்போது, சிறிதுநேரத்தில் அந்தப்பஞ்சு தீப் பற்றி எரிகிறது.

கோயில்கள் அருள் நிலையங்கள்:

கோயில்களும் இப்படித்தான். எங்கும் நிறைந்திருக்கும் கடவுளி ன் சக்தியைக் குவித்து, நமக்குத் தரும் அருள் நிலையங்களாகத் திருக்கோயில்கள் விளங்குகின்றன.

கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்; உள்ளன்புடன் கடவுளை வணங்குகின்றனர். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, கடவுளின் திருப்பெயரைச் சொல்லி, அவரது புகழைப்பாடிப் பக்தியுடன் வணங்கும்போது, அந்த இடத்தில் கடவுளின் சக்தியு ம், அருளும் அதிகமாக வெளிப்படுகின்றன.

திருக்கோயிலின் அமைப்பைப்பற்றி இதற்கு முன்னர் படித்தீர்க ள். இப்போது, திருக்கோயிலுக்குச்செல்ல வேண்டியமுறை, திரு க்கோயிலில் கடவுளை வணங்கும் முறை முதலிய விபரங்க ளைத் தெரிந்து கொள்ளலாமா?

கோயிலுக்குச் செல்ல வேண்டிய நாட்கள்

எந்தெந்த நாட்களில் நாம் கோயிலுக்குச் செல்ல வேண்டும்?

நாம் தினமும் கோயிலுக்குப் போய் கடவுளை வணங்குவது நல்லதுதான். ஆனால், இது எல்லாராலும் இயலாதே. நமக்குப் பலவிதமான வேலைகள். பிள்ளைகள் பாடசாலைக்குப் போக வேண்டும். பெரியவர்கள் வேலைக்குப் போக வேண்டும்.

அம்மா வேலைக்குப் போகாவிட்டாலும்கூட, வீட்டில் சமைத்த ல், குழந்தைகளைக் கவனித்தல், துணி துவைத்தல், வீட்டை அழகுபடுத்துதல் முதலிய பலவித வேலைகளைக் கவனிக்க வேண்டும். ஆகவே, தினமும் கோயிலுக்குப் போக நேரம் இருப்ப தில்லை.

ஆகவே, செவ்வாய், வெள்ளி, சனி போன்ற கிழமை நாட்களிலு ம், பிரதோஷம், பூரணை, அமாவாசை, திருவாதிரை, கார்த்தி கை (கிருத்திகை ), மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, சூரிய கிரகண ம், சந்திர கிரகணம், சிவராத்திரி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி , கந்த சஷ்டி, தீபாவளி முதலிய விசேட நாட்களிலும் கோயிலுக் குச் சென்று கடவுளை வழிபட வேண்டும். மேலும், நமது பிறந்த நாளிலும் கோயிலுக்குச்சென்று கடவுளின் அருளை வேண்டுவ து நல்லது.

காலையும், மாலையும் கோயிலுக்குச்செல்வதற்கான சிறப்பா ன நேரங்களாகும்.

கோயிலுக்குப் போக முன்னர் செய்ய வேண்டியவை:

கோயில் கடவுளின் சக்தியும், அருளும் நிறைந்திருக்கும் இடம்.

கடவுள் தூய்மையே உருவானவர். ஆகவே, அவரை வணங்கச் செல்லும்போது, நாம் சுத்தமான நீரில் குளித்து, நமது உடலைத் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

உடலை மட்டும் தூய்மையாக்கிக்கொண்டால் போதுமா? நமது உள்ளத்திலும் தூய்மையான எண்ணங்களை நிரப்பிக் கொள்ள வேண்டும். பின்னர், சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

நெற்றியிலே திருநீறு இட்டுக்கொள்ள வேண்டும். ( சைவர்கள் திருநீறும், வைஷ்ணவர்கள் திருமான் நாமமும் இட்டுக் கொள்ள லாம். திருநீறு அல்லது திருமான் தரிக்கும்போது, கடவுளின் திரு நாமத்தைப் பக்தியுடன் உச்சரிக்க வேண்டும்.

காணிக்கைப் பொருட்கள்:

கோயிலுக்குப்போகும்போது வெறுங்கையாகப் போகக்கூடாது. ‘

பெரியவர்களையும், குழந்தைகளையும் சந்திக்கச் செல்லும் போ து, வெறுங்கையாகப் போகக்கூடாது ‘என்பது முதுமொழி. ஆக வே, எல்லாருக்கும் பெரியவரான கடவுளை வணங்கச் செல்லு ம்போது, வெறுங்கையாகப் போகாமல் காணிக்கைப் பொருட்க ளை எடுத்துச் செல்ல வேண்டும்.

பால், இளநீர், தேங்காய், பூ, பழங்கள், வெற்றிலை, பாக்கு, கற் பூரம், ஊதுபத்தி முதலிய காணிக்கைப் பொருட்களைக் கொண் டுசெல்ல வேண்டும். இவற்றில், இளநீர், தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றைச் சுத்தமான நீரில் கழுவி, ஏனைய பொருட்களுடன் சுத்தமான ஒரு தட்டில் அல்லது கூடை யில் வைத்துக் கொண்டுசெல்ல வேண்டும். அந்தக் கூடை இடுப்புக்குக் கீழே வராதவாறு தூக்கிச் செல்ல வேண்டும்.

ஏராளமான காணிக்கைப்பொருட்களைக்கொண்டுசெல்ல வசதி யில்லையா ? பரவாயில்லை. உள்ளன்புடன் ஒரு கற்பூரத் துண் டையோ, பூ ஒன்றையோ எடுத்துச் சென்றாலே போதும். கடவுள் அன்புடன் ஏற்று, அகமகிழ்ந்து அருள்புரிவார்.

தைப்பொங்கல், தீபாவளி, முதலிய விசேட பண்டிகை நாட்களி ல், காணிக்கைப் பொருட்களுடன் கடவுளுக்கு நைவேத்தியம் செய்வதற்காக தூய்மையாகத் தயாரிக்கப்பட்ட பொங்கல், அவ ல், சுண்டல், வடை, மோதகம் போன்றவற்றை எடுத்துச் செல்ல லாம். கடவுளுக்குப் படைத்தபின்னர், பூஜை முடிந்ததும், ஏனைய பக்தர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழலாம்.

கோயிலுக்கு வெளியே செய்ய வேண்டியவை:

திருக்கோயிலை நெருங்கும்போது, தூரத்தே தெரியும் ஸ்தூல லிங்கமாகிய திருக்கோபுரத்தைக் கண்டவுடன், இரண்டு கைக ளையும் தலைக்கு மேலே உயர்த்திக் குவித்து, கடவுளின் திரு நாமத்தை உச்சரித்தபடியே வணங்க வேண்டும்.

கோயிலின் அருகே திருக்குளம் அல்லது தண்ணீர் கிடைக்கக் கூடிய இடங்கள் ( உ-ம்: கிணறு அல்லது தண்ணீர்க்குழாய் ) இருப்பின், அத்தண்ணீரில் கை, கால்களைக் கழுவிக் கொண்டு கோயிலின் உள்ளே செல்ல வேண்டும்.

கோயிலின் உள்ளே..

கோயிலுக்குள்ளே, திருக்கோபுர வாயிலைத் தாண்டியவுடன், கர்பக்கிருகத்துக்கு எதிராக சபா மண்டபத் துக்கு வெளியே, கொடிமரம் ( இது துவ ஜஸ்தம்பம் என்றும் அழைக்கப்படும்), பலி பீடம், தீபஸ்தம்பம், வாகனம் என்பன வரி சையாக அமைந்திருப் பதைக் காணலாம்.

கர்பக்கிருகத்தில் வீற்றிருக்கும் கடவுள் அல்லது தேவியின்  வாகனம் தனது தலை வர் அல்லது தலைவியின் உத்தரவுக்கா கக் காத்திருப்பது போல், கர்பக்கிருகத் தையே நோக்கியபடி அமைந்திருக்கும்.

( சிவன் கோயிலாயின் எருது வாகனம் ( நந்தி தேவர் ),

முருகன் கோயிலாயின் மயில் வாகனம், விஷ்ணு கோயிலாயின் கருட வாகனம், அம்பாள் கோயிலி ல் சிங்க வாகனம், விநாயகர் கோயிலில் மூஞ்சூ று வாகனம்……… )

நாம்முதலில், பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் செய்யவேண் டும். அப்போது, நாம் எவற்றைப்பலியிட வேண்டும்,தெரியுமா?

நமது அகங்கார, மமகாரங்களை, அதாவது, நம்மிடமுள்ள எல் லா வகை ஆணவங்களையும், எல்லாவகையான பற்றுக்களை யும் கடவுளுக்குப் பலியாகச் செலுத்திவிடவேண்டும். அப்போது தான், கடவுளிடத்தில் நமக்கு உண்மையான அன்பு உதிக்கும்.

நமஸ்காரம் செய்வதற்கான விதிமுறைகள்:

நமஸ்காரம் செய்வதற்காகச் சில விதிமுறைகள் உள்ளன. அவற் றை முதலில் தெரிந்து கொள்வோமா ?

கோயிலில் கடவுள் சந்நிதி கிழக்குத் திசை அல்லது மேற்குத் திசை நோக்கி அமைந்திருந்தால், நாம் வடக்குத்திசை நோக்கித் தலைவைத்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.

தெற்குத்திசை நோக்கிய, அல்லது வடக்குத்திசை நோக்கிய சந் நிதியாயின், கிழக்குத்திசை நோக்கித்தலை வைத்து நமஸ்கார ம் செய்ய வேண்டும்.

ஒருபோதும் கிழக்கு அல்லது வடக்குத் திசைகளை நோக்கிக் கால் நீட்டி நமஸ்காரம் செய்யக்கூடாது.

ஆண்களுக்கான அட்டாங்க நமஸ்காரம்

ஆண்கள் அட்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். ( அட்ட = எட்டு ; அங்கம் = உறுப்பு ). தலை, கைகள் இரண்டு, காதுகள் இர ண்டு, மோவாய் ( நாடி ), தோள்கள் இரண்டு ஆகிய எட்டு உறுப்பு க்களும் நிலத்திலே படும்படி குப்புற வீழ்ந்து வணங்குவதே அட்டாங்க நமஸ்காரம் எனப்படும்.

நிலத்திலே குப்புறப் படுத்து, தலை பூமியில் படும்படி வைத்து, மார்பு பூமியிலே படும்படி வலது கையை முதலிலும், பின்னர் இடது கையையும் நேரே நீட்டி. அதே முறைப்படி மடித்து, வலது தோளும் இடது தோளும் நிலத்திலே படும்படி கைகளை இடுப் பை நோக்கி நீட்டி, வலது காதை முதலிலும், இடது காதைப் பின்னரும் பூமியிலே படும்படி செய்து வணங்குவதே அட்டாங்க நமஸ்காரம் செய்யும் முறையாகும்.

பெண்களுக்குரிய பஞ்சாங்க நமஸ்காரம்:

பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்தால் போதும். ( பஞ்ச = ஐந்து ). தலை, கைகள் இரண்டு, முழந்தாள்கள் இரண்டு ஆகிய ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் படும்படி வணங்குவதே பஞ்சா ங்க நமஸ்காரம் ஆகும்.

வலம் வரும் முறை:

நமஸ்காரம் செய்த பின்னர் எழுந்து, நாம் வணங்கும் கடவுளின் திருநாமத்தைப் பக்தியுடன் உச்சரித்தபடியே கடவுளின் சந்நிதி யை வலப் புறமாகச் சுற்றிவர வேண்டும்.

குறைந்தது மூன்று முறைகளாவது இவ்வாறு வலம்வர வேண் டும். வலம்வரும்போது, சிறுசிறு நாமாவளிகள், பக்திப்பாடல் கள், ஸ்தோத்திரங்கள் முதலியவற்றைச் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும்.

கடவுளின் சன்னதியில் வணங்க முன்னர்:

கடவுளின் சன்னதியில் வணங்க முற்படும்போது, முதலில் துவார பாலகர்களை வணங்கி, பின்னர் வாகனத்தை வணங்கி அவரது அனுமதியை வேண்டிக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும்.

உள்ளே போய் முதலில் விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமானுக்கு முதல் வணக்கம் செய்ய வேண்டும்.

நாம் அறிந்தோ, அறியாமலோ ஏதாவது தவறு செய்திருந்தால் அதனை மன்னிக்கும்படி அவர்முன் தோப்புக்கரண மிட்டு வண ங்க வேண்டும்.

தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்கும் முறை:

விநாயகப் பெருமானை வணங்கும்போது, முதலில் கைகள் இர ண்டையும் முட்டியாகப் பிடித்துக்கொண்டு நெற்றியிலே மூன்று முறை குட்டிக்கொள்ள வேண்டும்.

பின்னர், நமது வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் மாறிப் பிடித்துக்கொண்டு, மூன்று முறை தாழ்ந்து எழுந்து தோப்புக்கரணம் போட்டுக் கும்பிட வேண்டும்.

மூலத்தான தெய்வத்தை வணங்கும் முறை:

பின்னர், கர்ப்பக்கிருகத்திலுள்ள மூலத்தான தெய்வத்தை வணங்க வேண்டும்.

அங்கே பூஜைசெய்யும் அந்தணரிடம் நமது காணிக்கைப்பொருட் களைக் கையளித்து, அவர் அர்ச்சனை செய்யும்போது பக்தியுட ன் கவனித்து, தெய்வத்தின் திருநாமங்களை உச்சரித்து வணங் கி நிற்க வேண்டும்.

அந்தணர் இறைவனுக்குக் கற்பூர தீபம் காட்டும்போது, தலை க்கு மேலே கைகளை உயர்த்திக் குவித்து தெய்வத் திருநாமத் தைச்சொல்லி வணங்க வேண்டும்.

அர்ச்சனைகள் முடிந்து அந்தணர் கொண்டுவரும் தட்டில் எரிந்து கொண்டிருக்கும் கற்பூர தீபத்தை மூன்றுமுறை தொட்டுக் கண் களில் ஒற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னர், அவர் தரும் தெய்வப் பிரசாதங்களான திருநீறு, சந்த னம், (அம்பாள் கோயிலாயின் குங்குமம்) முதலியவற்றைப் பய பக்தியுடன் இடது உள்ளங்கைமேல் வலது உள்ளங்கையை வைத்துப்பெற்று, பின் இடது கையில் சேர்த்து, வலது கை விரல் களால் தொட்டு நெற்றியிலே தரித்துக்கொள்ள வேண்டும்.

அந்தணர் தரும் தீர்த்தத்தை வலது உள்ளங்கையில் பெற்று அருந்த வேண்டும்.

ஏனைய தெய்வ சன்னதிகளை வணங்குதல்

அர்ச்சனை வழிபாடு முடிந்ததும், உள் வீதியில் வலம் வந்து, தட்சிணா மூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திர சேகரர், சுப்பிரமணி யர், துர்க்கை, லிங்கோத்பவர் முதலிய தெய்வ சன்னதிகளை வணங்க வேண்டும்.

சன்னதிகளைத் தரிசனம்செய்த பின்னர், சண்டேசுரர் சன்னதி யை அடைந்து, கும்பிட்டு, வணங்க வேண்டும். சண்டேசுரரைச் சுற்றிவந்து வணங்கக் கூடாது.

சண்டேசுரரை வணங்கிய பின்னர், மீண்டும் பலிபீடத்தருகில் வந்து, அங்கே நின்று தெய்வ சன்னதியை நோக்கிப் பக்தியுடன் நமஸ்காரம் செய்து, பின்னர் கோயிலின் ஒருபுறத்தில் அமைதி யாக அமர்ந்து கடவுளின் திருநாமத்தைத் தியானம் செய்ய வேண்டும்.

இவ்வேளையில், தெய்வத்தைப்போற்றும் அருபடல்களை மெது வாகப் படியும் வணங்கலாம்.

இவ்வாறு மனத்தை ஒருநிலைப்படுத்தி தெய்வத்தை வணங் கிய பின்னர், நாம் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பலாம்.

இதுவே, திருக்கோயிலில் கடவுளை வழிபடும் முறையாகும்.

கோயிலில் செய்யத்தகாத செயல்கள்:

திருக்கோயில் ஓடி விளையாடுவதற்குரிய இடமல்ல.

இங்கே ஓடி விளையாடுதல், பேசுதல், சிரித்தல், சத்தமிட்டு மற் றவர்களை அழைத்தல், கடவுள் வணக்கத்தில் ஈடுபட்டிருப்ப வர்களைத் தொந்தரவு செய்தல், துப்புதல், திட்டுதல் முதலியன கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். தெய்வத்தின் திரு உரு வச் சிலைக்கு முதுகைக் காட்டியவாறு அமர்ந்திருக்கக் கூடாது.

அர்ச்சனை வேளையில், நமக்குப்பின்னால் மேலும் பல பக்தர்க ள் கடவுளை வணங்குகின்றார்கள் என்பதை உணர்ந்து, அவர்க ளுக்கு மறைக்காதவாறு நின்று, தலையைச் சாய்த்து அமைதி யாக வணங்க வேண்டும்.

திருக்கோயில் பூஜை முறைகள்:

பூஜை வேளைகள்:

திருக்கோயிலில் பூஜைகள் ஆகம விதிகளின்படி நடை பெறுகி ன்றன. தினமும், ஆறு வேளை பூஜைகள் நடைபெற வேண்டு மென்பது ஆகம விதி. ஆயினும், அது முடியாமையால், மூன்று வேளைகள் (காலை, மதியம், மாலை) பூஜைகள் நடைபெறுவது வழக்கம். சிலகோயில்களில், தினமும் ஒருவேளை மட்டும் பூஜை நடைபெறுவதும் உண்டு.

திருக்கோயிலில், பூஜைக்குரிய நேரம் நெருங்கியவுடன் ஆலய மணிகள் ஒலிக்கின்றன. அந்த இனிய மணியோசை பக்தர்கள் எல்லாரையும்’ கோயிலுக்கு வாருங்கள்,. வாருங்கள்…. ‘ என்று அழைப்பதுபோல் ஒலிக்கின்றன.

அபிஷேகம்

கோயிலின் கர்ப்பக்கிருகத்தினுள் வீற்றிருக்கும் தெய்வத்தின் மூல விக்கிரகத்துக்கு முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. தண்ணீர், இளநீர், பன்னீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் ( ஐந்து வித பழங்கள் மற்றும் தேன் சேர்ந்த கலவை) முதலிய பொருட்க ளைக் கொண்டு மூலவிக்கிரகமான தெய்வத்துக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது.

அலங்காரம்:

அதன் பின்னர், சன்னதிக்கு முன்பாகத் திரை போடப்பட்டு, உள் ளே மூலத்தான தெய்வத்துக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. தங்க, வெள்ளி நகைகள், மலர் மாலைகள், பட்டுத்துணி முதலி யவற்றைக்கொண்டு அழகாக அலங்காரம் செய்து, விபூதி அல் லது திரு நாமம் , சந்தனம், குங்குமம் என்பன பூசப்படுகின்றன.

தீப ஆராதனை:

அலங்காரம் முடிந்ததும், திரைச்சீலை விலக்கப்பட்டுத் தீப ஆராதனை ( ஆரத்தி ) காண்பிக்கப்படுகின்றது.

இச்சந்தர்ப்பத்தில், கோயிலில் கூடியிருக்கும் பக்தர்கள் அனை வரும் பக்தியுடன் கைகளை உயர்த்திக் கும்பிட்டுத் தெய்வத்தின் திருநாமத்தை உச்சரித்து வணங்குகின்றார்கள்.

தீபாராதனை முறையிலும் ஓர் அழகிய தத்துவம் விளக்கப்படு கிறது.

முதலில், தெய்வத்துக்கு ஏராள மான நெய் விளக்குகளைக் கொ ண்ட அடுக்குத் தீபத்தினால் ஆரத் தி காண்பிக்கிறார்கள். அடுத்தடு த்துக் காண்பிக்கும் தீபங்களில், நெய் விளக்குகளின் எண்ணிக் கை படிப்படியாகக் குறைகிறது.

இறுதியில், கும்பத்தின்மேல் வைக்கப்பட்ட ஒரேயொரு பெரிய தீபத்தை வைத்து அழகாக ஆரத்தி காண்பித்து வணங்குகின்றா ர்கள்.

(தமிழ்நாட்டில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இவ்வகையான தீப ஆராதனை மிக அழகாக நிறைவேற்றப்படுகின்றது.)

கடவுள் பலவித உருவங்களிலே வணங்கப்பட்டாலும், முழு முதற் கடவுள் ஒருவரே என்னும் உயர்ந்த தத்துவத்தை இத்தீப ஆராதனை முறை அழகாக விளக்குகிறது.

நாம் விறகு, காகிதம், துணிமுதலி ய பொருட்களை எரிக்கும் போது, இறுதியில் சாம்பல் எஞ்சுகிறது. ஆனால், கற்பூரத்தை எரிக்கும்போ து சாம்பல் எஞ்சுவதில்லை. கற் பூரம் முழுவதுமாக எரிந்து காற்று டன் கலந்து விடுகிறது. அதே போல், நாமும், நம்மை முழுவது மாக கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற தத்துவ மும் கற்பூர தீப ஆராதனையில் பொதிந்துள்ளது.

தீப ஆராதனையின்பின்னர், கற்பூர தீபம் ( அல்லது நெய் தீபம் ) உள்ள தட்டு பக்தர்கள் முன் கொண்டு வர ப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் ஒவ்வொருவராக, தீபத்தை தம் இரு கைகளாலும் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு வணங்குகிறார்கள். ( மூன்று முறை தொட்டு வணங்குவது சிறந்ததாகும் )

கடவுளுக்குத் தீபம் காட்டி வணங்குவதில் மற்றொரு தத்துவ மும் அடங்கியுள்ளது. தீப தரிசனம் நமக்கு உள்ளத் தூய்மையை த் தருகிறது. நம் மனத்திலுள்ள அக இருள்களான அச்சம், வெறு ப்பு, பொறாமை, தாழ்வு மனப்பான்மை, உள்ளச்சோர்வு, வறுமை யை நினைத்துப் பயப்படுதல் போன்றவைகள் நம்மைவிட்டு விலக நாம் தீபாராதனையைக் காண வேண்டும்.

தீபாராதனை முடிவில், தீபத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ளும்போது, ” தெய்வமே, இந்த ஒளி என் அக இருளைப் போக்கட்டும் ” என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

பிரசாதம்:

தீபாராதனையின் பின்னர் விபூதி பிரசாதம், சந்தனம், குங்குமம் என்பன வழங்கப்படும். ( வைஷ்ணவ கோயில்களில் துளசி தீர்த் தம் வழங்கப்படும் ). நமது வலது கரத்தை இடது கரத்தின் மீது வைத்து, மரியாதையுடனும், பக்தியுடனும் பிரசாதத்தை வாங்க வேண்டும்.

அதனை இடது உள்ளங்கையில் சேர்த்து, வலது கையின் நடு விரல்கள் மூன்றினால் எடுத்து நெற்றியில் பூசிக்கொள்ள வே ண்டும். திருநீறு பூசிக்கொள்ளும்போது, தலையை அண்ணாந்து, கடவுளின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.

சந்தனம், குங்குமம் ஆகியவற்றை மோதிர விரலால் எடுத்துப் புருவ மத்தியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வீடு நோக்கி…

இவ்வாறு பயபக்தியுடனும், உள்ளன்புடனும் பூசையிற் கலந்து கொண்டு கடவுளை வழிபட்ட பின்னர் வீடு திரும்பும்போது, நமது உள்ளத்தில் ஒருவித இனிய பரவசமும், ஆனந்தமும் நிறை ந்திருப்பதை நம் அனுபவத்தில் உணரலாம்.

நம் வாழ்க்கையின் ஏனைய கடமைகளைச் செவ்வனே செய்து முடிக்க இந்த ஆன்மிக நிம்மதி உதவுகின்றது. நமது முயற்சிகள் யாவும் வெற்றிபெற கடவுளின் தனிப்பெரும் கருணை உதவுகின் றது.

இத்தகைய நிம்மதியும், தெய்வீக ஆனந்தமும் உங்கள் எல்லா ரது வாழ்வில் நிறைந்து விளங்கவும், கடவுளின் பேரருளினால் நீங்கள் கல்வியிற் சிறந்து விளங்கவும் வாழ்த்துகின்றோம்.

கடவுள் வழிபாடு – வீடு:

பிள்ளைகளே,

இங்கே நாம் வீட்டில் கடவுளை வணங்கும் முறை குறித்து பார்க் கலாம். இதனை வாசித்த பின்னர் நீங்களும் தினமும் இறைவ னை உள்ளன்புடன் வணங்குவீர்கள் என நம்புகின்றோம்.

உங்கள் வீட்டில் இறைவனை வணங்கும் முறை:

இறைவன் இல்லாத இடமேயில்லை. அவர் எங்கும் நிறைந்தி ருக்கிறார். பக்தர்கள் ஒன்றாகக் கூடி இறைவனை வணங்குவ தற்குரிய இடம் திருக்கோயில் ஆகும். திருக்கோயிலில் இறைவ னின் பிரசன்னம் நிறைந்திருக்கின்றது.

அமைதியான ஆற்றங்கரை, கடற்கரை, திருக்குளத்தின் கரை, பூங்காவனம் முதலியவற்றிலும், ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து கடவுளை வழிபடலாம்.

ஆயினும், நாம் நினைத்த நேரத்திலெல்லாம் திருக்கோயில் சென்று வழிபட முடியாது.

நாம் அமைதியாக கடவுளை வணங்க விரும்புகிறோம். எனினு ம் அன்று கோவிலில் திருவிழா நாளாக அல்லது ஒரு விசேட நாளாக இருந்து மிக அதிக பக்தர்கள் வருவதன் மூலம் நீங்கள் விரும்பும் அமைதி அங்கே கிடைக்காது.

சிலவேளைகளில் சிலரது வீடுகளில் நிகழக் கூடிய பிறப்பு, இறப்பு போன்ற காரணங்களால் உண்டாகக் கூடிய ‘தொடக்கு’ எனப்படும் புனிதம் இல்லாத காலப்பகுதியில் கோவிலுக்கு செல்ல முடியாது.

இந்த காலப் பகுதி அவரவர் குடும்ப, சமுக பாரம்பரிய வழக்க த்தின பொறுத்து மாறுபடும். (இந்த ‘தொடக்கு’, ஒரு அந்தணர் வீட்டிற்கு வந்து பூஜை செய்வதன் மூலம் முடிவுக்கு வரும்)

ஆகவே, திருக்கோயிலுக்குச் செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் நமது வீட்டிலேயே தினமும் இறைவனை வணங்குவது நல்லது. முக்கியமான தினங்களில் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்.

கடைப் பிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்

நமது வீடுகளில் இறைவனை வணங்கும்போது சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவை பின்வருமாறு:

பூஜை அறை

நாம் குடியிருக்கும் வீட்டின் நடுப்பகுதியில், கடவுள் வணக்கத்து க்குரிய ஒரு பூஜை அறையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. பூஜை அறையை ஏற்படுத்திக் கொள்ள வசதியில்லாதவர்கள், வீட்டில் சுத்தமான பகுதியில், ஒரு சுவரில் கடவுள் படங்களைத் தொங்கவிட்டு வழிபடலாம். தவறில்லை.

பூஜை அறையில், மரத்திலான அல்லது ஏதேனும் உலோகத்தி லான இறை விக்கிரகங்கள், படங்கள் போன்றனவைகளை பயன்படுத்தலாம். கருங்கல்லினால் ஆனா விக்ரகங்கள் கோவி ல்களில் மட்டுமே பயன்படுத்தப் படுவதனால் வீடுகளில் பயன் படுத்தக் கூடாது.

ஒரு பூஜை அறை (சாமி அறை)

பூஜை அறை அமைப்பதில் ஒரு கட்டாயமான கட்டுப் பாடுகள் எதுவும் இல்லை எனினும் சில அறிவுப்பூர்வமான செயல்பாடு கள் தேவை. உதாரணமாக நாம் மாமிச உணவு சமைக்கப் படும் சமையல் அறைக்கு பக்கமாக, பூஜை அறை அமைக்காமல் தவிர்க்கலாம். மேலும் மாமிச உணவு உண்டால், பூஜை அறை கோ, கோவிலுக்கோ அடுத்தநாள் குளித்து சுத்தமாகும் வரை போவதனை தவிர்க்கலாம்.

பூஜை அறை விக்ரகங்கள், சாமி படங்கள்

பூஜை அறையில், சுவரில் இறைவன் திருப்படங்களை அல்லது திரு உருவச் சிலைகளைக் கிழக்குத திசையைப் பார்த்த வண் ணம் அமைக்க வேண்டும். இறைவன் உருவங்கள் கிழக்குத் திசையைப் பார்த்தவண்ணம் இருக்க, வணங்கும் பக்தர்கள் வட க்குத் திசையாக நின்று வணங்க வேண்டும்.

குறிப்பு: பூஜையறையில் எந்தத் தெய்வத்தின் படத்தை வைக்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். இந்து சமயத்தின் தத்துவ ங்களின்படி, இறைவனை நாம் பல உருவங்களில் வழிபட முடி கிறது. இறைவன் பலவிதமான குணங்களை, சக்திகளை உடை யவர்.

அந்தக் குணங்களுக்கும், சக்திகளுக்கும் ஏற்றபடி அவரது உரு வங்கள் வேறு வகைப்படுகின்றன. ஆகவே, நம் தேவைக்கும், வேண்டுதலுக்கும் ஏற்ற விதத்தில் தெய்வத்தை வணங்குகின் றோம்.

உதாரணமாக, புதிதாக ஒரு முயற்சியைத் தொடங்கும்போது, விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமானை வணங்குகி ன்றோம்; கல்வியில் வெற்றியை வேண்டும்போது, சரஸ்வதி தேவியை வணங்குகின்றோம்; பணம் வேண்டும் என்று விரும்பு ம்போது, லக்ஷ்மி தேவியை வணங்குகின்றோம். ஆனால், சரஸ் வதியும், லக்ஷ்மியும் ஒரே தேவியின் இரு வடிவங்களே.

நாம் உளமார, மனமுருகி எந்தத் தெய்வத்தை வழிபடுகின்றோ மோ, அதே உருவத்தில் இறைவன் தோன்றி நமக்கு அருள் புரி வார் என்பது பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் சொன்ன வேதம்.

தீப விளக்கு (குத்து விளக்கு)

பூஜையறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். விளக்கில் சுத்தமான பஞ்சினாலான திரியை இட்டு, நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது இலுப்பெண்ணெய் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபமும் கிழக்கு முகமாக நோக்கி வைக்க வே ண்டும். ஆனால், அந்த விளக்கின் நிழல் கடவுள் படங்களின் மீதோ, சிலைகளின்மீதோ படக்கூடாது.

காலை, மாலை என இரு வேளைகளிலும் பூஜை செய்யலாம். அதற்கு நேரம் இல்லாதவர்கள் காலையில் தூய நீர் கொண்டு பூஜை செய்து, மாலையில் திருவிளக்கேற்றி வணங்கலாம்.

பூஜை, பிராத்தனை நேரங்கள்

எமது வீடு என்பதால் நாம் விரும்பும் எந்நேரத்திலும் இறைவ னை வணங்கலாம். பூஜை செய்யலாம். 

பூஜை அறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமா ன தண்ணீரால் பூஜை அறையைக் கழுவி, பின் மஞ்சள் கலந்த நீர் தெளித்து விடலாம்.

தினமும், காலையில் சுத்தமாகக் குளித்து, திருநீறு அல்லது திரு நாமம் தரித்துக்கொண்டு, பின்பு பூஜைக்குரிய இடத்தைச் சுத்தம் செய்து, திருவிளக்கு ஏற்றிப் பூஜை செய்ய வேண்டும்.

இறைவனின் திரு உருவச்சிலை அல்லது படத்துக்குரிய ஆடை, சந்தனம், நறுமண மலர் முதலியவற்றை அணிவிக்க வேண்டு ம். மலர் மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்.

சாம்பிராணி தூபம் அல்லது நறுமண ஊதுபத்தி ஏற்றி வைக்க வேண்டும்.

இறைவனுக்கு நைவேத்தியமாக வெல்ல உருண்டை, கற்கண் டு, பொங்கல், திராட்சை, வாழைப்பழம், துளசி இலை (மஹா விஷ்ணுவுக்கு), வில்வ இலை (சிவபெருமானுக்கு) முதலியவற் றுள், அந்தந்தத் தெய்வங்களுக்கு உகந்த பொருட்களைச் சமர்ப் பிக்க வேண்டும்.

குறிப்பு: கனன்று கொண்டிருக்கும் நெருப்புத்தணல் மீது தூவப்ப டும் சாம்பிராணி தூள், எழுப்பும் நறுமணம்மிக்க மெல்லிய புகை, அறை முழுவதும் படர்ந்து அற்புதமான ஒரு அனுபவத் தினை தரும்.

பின்னர், இறைவனுக்குரிய வழிபாட்டு மந்திரங்களை அல்லது பக்திப்பாடல்களை மனமுருகப் பாடி வணங்க வேண்டும்.

இறைவனுடன் ஆத்மார்த்தமான உறவு:

நீங்கள் உங்கள் பூஜை அறையினுள் இருகின்றீர்கள். உங்கள் கண்கள் மூடி இருகின்றன. பின்னனியில் தெய்வீக பாடல்கள் கேட்கின்றன. அறை தீப விளக்கினால் மட்டும் ஒளியூட்டப்படு கின்றது.

நீங்கள் இறைவனுடன் பேசுகின்றீர்கள், பிரார்த்தனை செய்கின் றீர்கள், சிரிக்கின்றீர்கள் அல்லது அழுகின்றீர்கள். உங்கள் பிரச் சினை ஒன்றிற்கு இறைவனிடம் தீர்வு கேட்கின்றீர்கள். அல்லது உங்கள் வேண்டுதல் நிறைவேறியதனால் நன்றி கூறுகின்றீர் கள்.

இது ஒரு சுகானுபவம் மிக்கதோர் பரவச உணர்வு ஆகும்.

இவ்வாறான ஆத்மார்த்தமான உறவு ஒன்றினை இறைவனுடன் வளர்ப்பதன் மூலம் எங்கும், எதிலும் வெல்லக் கூடிய வகையி ல் உங்கள் ஆன்மிக பலம் பெருகும். இதன் காரணமாகவே நீங் கள் தினமும் வீட்டில் இறைவனை வணங்க வேண்டும் என வலி யுறுத்துகின்றோம்.

இறைவனின் பேரருள் உங்களுக்கு கிடைக்க மனதார வேண்டு கின்றோம்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: