Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெரும்பாலான இளைஞர்கள், படித்து வேலை பார்க்கும் பெண்ணையே மணக்க‍ விரும்புவது ஏன்?

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணைவியாக வரும் பெண் படித்து – வேலை பார்ப்பவராக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்க்கையை எதிர்கொ ண்டு சமாளிக்கும் ஆற்றல் நிறைந்த வர்களாகவும், உலக அனுபவம் கொ ண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
 
வேலை பார்க்கும் பெண்களுக்கு வெளி உலக அனுபவங்கள் நிறைய கிடைக்கின்றன. அந்த அனுபவங்களும் குடும்பத்திற்கு அவசி யம் என்பதால், வேலைக்குச் செல்லும் பெண்களை திருமணம் செய்து கொள்ள ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
 
வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை யைப் பற்றி நன்றாக திட்ட மிடுகிறார்கள். காலையில் விழிக்கும் நேரத்திலிருந்து அவர்கள் ஒவ்வொரு வேலை யையும் திட்ட மிட்டு அந்தந்த நேரத்தில் செய்து முடிக்கிறார் கள்.
 
இதனால் திட்ட மிடுதல், சுறு சுறுப்பாக செயல்படுதல், தனது வேலைகளை முடிக்க நிறைய சிந்தித்தல் ஆகிய மூன்று சிறப்புகள் அவர்களிடம் இணைகின் றன. இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத் திலிருந்து தான் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருக்கி றார்கள்.
 
இதனால் பயணம், அதில் சிக்கல் ஏற்பட்டால் உடனடி யாக மாற்று வழி கண்டுபிடிக்கும் ஆற்றல், பயணத்திற்கான முன்னேற்பாடுகள், நெருக்கடி யான நேரத்திலும் தகவல் தொட ர்பு கொள்ளும் ஆற்றல் போன் றவை இவர்களிடம் வளர்கிறது.
 
வேலை பார்க்கும் இடத்தில் பல தரப்பட்ட சக பணியாளர்களோடு பழகுதல், குழுவாக உழைத்தல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடு த்து அனுசரித்து செல்லுதல், பல் வேறு நெருக்கடிகளில் வரும் பொது மக்களை சந்தித்தல், உயர் அதிகாரி – தன் சம பொறுப்பில் பணியாற்று கிறவர்கள் – தனக்கு கீழ் பணியாற்று கி றவர்கள் ஆகிய ஒவ்வொருவ ரிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவம் போன்ற வை வேலை பார்க்கும் பெண்களுக்கு கிடைக்கிறது.
 
இதனால் பலதரப்பட்ட மனிதர்களை புரிந்துகொண்டு அனுசரித் து வாழும் பக்குவத்தை அவர்கள் பெறுகிறார்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: