Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை வளர்க்காதீர்கள்… வளரவிடுங்கள்!’

குழந்தைகளிடம் பெற்றோர் எப்படிப் பழக வேண்டும்:

‘குழந்தை வளர்ப்பு, ஒரு கலை மட்டுமல்ல… அறிவியலும்கூட!’ (Parenting is not only an art, it is also a science)என்பதுண்டு! அதற்காக, ‘அறிவியல் பூர்வமாக வளர்க்கிறேன் பேர்வழி’ என்று எத ற்கெடுத்தாலும் டாக்டரைத் தேடி ஓடுவது… நிபுணர்களிடம் போய் க்யூ கட்டி நிற்பது… என்று ஆட ஆரம்பித்துவிடுவார்கள் பலரும். ஆனால், குழந்தையை நாம் வளர்க்க வேண் டியது இல்லை என்பதுதான் உண்மை. இதற் காகவேதான் சமீபகாலங்களாக ‘குழந்தைக ளை வளர்க்காதீர்கள்… வளரவிடுங்கள்!’ என சத்தமாகக் கூற ஆரம்பித்துள்ளனர் உலகெங்கும் உள்ள குழந்தையியல் அறிஞர் கள். குழந்தைகளிடம் பெற்றோர் எப்படிப் பழக வேண்டும் என்பதற் கான பயிற்சிகள்கூட வெளிநாடுகளில் நடை பெறுகின்றன. அதன் ரத்தினச் சுருக்கமாக நெய்யப்பட்டுள்ள, குழந் தை வளர்ப்புக்கான இந்த நூறு டிப்ஸ் கள், உங்கள் குழந்தைகளை ‘குட் பாய்’, ‘குட் கேர்ள்’ ஆக்கிவிடும்!

அப்புறமென்ன… நீங்கள்தான் ‘பெஸ்ட் அம்மா – அப்பா’!

ஊட்டி வளர்க்காதீங்க!

1. ஒன்றரை வயதில் இருந்தே குழந்தைகளை அவர்களாகவே உண் ணப் பழக்குங்கள். இட்லி துண்டுகளிலிருந்து உருண்டை சாதம் வரை படிப்படியாகப் பழகட்டும். பிள்ளைகளின் உண்ணும் ஆர்வத் தை தூண்ட இதுவே முதல் படி.

2. குழந்தைகள் உங்களைப் போல வே ‘சுத்தபத்தமாக’ சாப்பிட வேண்டு ம் என எதிர்பார்ப்பதில் நியாயமில் லை. உணவு சிந்தும், உட லெல்லாம் அழுக்காகும், நேரம் எடுக்கும்… பர வாயில்லை. அதற் காகக் குழந்தை யைத் திட்டுவதோ, அடிப்பதோ தவறு . குழந்தைகள், உணவை வெறுக்க இதுவும் ஒரு காரணமாகி விடும்.

3. குழந்தைகளுக்குக் கொடுக்கும் உண வின் அளவு மிகவும் முக் கியம். எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு மட்டும் ஊட் டுங்கள். ‘இன்னும் ஒரு வாய் சாப்பிட்டா நல்லது தானே’ என்று திணிப்பது, சரியான அணுகுமுறைய ல்ல.

4. ‘கொஞ்சம் சோறு சாப்பிடும்மா… சாக்லெட் வாங்கித் தரேன்’, ”கொஞ்சம் கீரை சாப்பிடும்மா… ‘குர்குரே’ வாங்கித் தரேன்” என்று ஆசை காட்டி சாப்பிட வைப்பது, அம்மாக்கள் செய்யும் தவறு. அது, ‘இந்த சோற்றையும் கீரையையும் கஷ்டப்பட்டு (!) சாப்பிட்டுட்டா… சாக்லெட், ஸ்நாக் இதெல் லாம் கிடைக்கும்!’ என குழந்தைகளுக்கு உண வின் மீது இன்னும் சலிப்பையும், நொறுக்குத் தீனியின் மீது இன்னும் ஆசையையும் விதைக் கும்

5. ”என் பிள்ளைக்கு இனிப்பே கொடுக்க மாட் டேன்… உப்பே சேர்க்க மாட்டேன்” என்று கர்வப் படும் அம்மாக்களே, கவனம்! ஏனெனில், குழந் தைகளுக்கு இனிப்பு, உப்பு என எல்லா சுவையும், சத்தும் தேவைதா ன்! எனவே எந்தச்சுவையையும், அதன்மூலம் சத்தையும் அவர்களுடைய உண விலிருந்து முற்றிலுமாக நீக்கும் தவறைச் செய்து விடாதீர்கள்! கூடவே, இனிப்பே சாப்பிடாத குழந்தைக்கு பின்னா ளில் இனிப்பு அறிமுகமாகும் போ து, வட்டியும் முதலுமாகச் சேர்த் து சாப்பிட்டு உடலைக் கெடுத்து க்கொள்ளவும் வாய்ப்புள்ளது !

6. 90:10 முறையை உணவில் கடைபிடியுங்கள். அதென்ன 90:10? சிம்பிள்… 90 சதவிகிதம் உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத் துக்காக இருக்கட்டும். இனிப்பு, ஸ்நாக் ஸ் என 10 சதவிகிதம் அவர் களின் சுவைக்காக இருக்கட்டும். தப்பில்லை.

7. எப்போதும் குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருப் பது தவறு. குழந்தைகள் உணவு உண்ண வேண் டிய நேரத்தில்தான் உண்ண வேண்டும். சதா கொறித்துக் கொண்டே இருந்தால் அவர்கள் சரியான நேரத்தில் ஆரோக்கிய மான உணவு சாப்பிட முடியாது.

8. உணவு விஷயத்தில் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக நீங்கள் இருக்க வேண்டும். உங்களு க்கு ஒரு டைப் சாப்பாடு… குழந்தைகளுக்கு வேறு மாதிரி என்பது சரி வராது. அதாவது, நீங்கள் சிப்ஸ், குளிர்பானம் சாப்பிட்டால் குழந் தையும் அதையேதான் விரும்பும்.

9. ‘ஜர்னல் பீடியாட்ரிக்’ எனும் பத்திரிகையின் ஆய்வு என்ன சொல் கிறது தெரியுமா? பதப்படுத்தப்பட்ட பழச்சாறு, எனர்ஜி டிரிங்க்ஸ்… இதெல்லாம் குழந்தைகளுக்கு ஆபத்தானவை. 100% பழச்சாறு என்று ஜிகினா வேலை காட்டும் விளம்பரங்க ளிலும் உண்மை இல் லை. எனவே, நீங்களே பழங்கள் வாங்கி குழந்தைக ளுக்குக் கொடுங்கள். அதுவே பெஸ்ட்!

10. ஒரே மாதிரி சாப்பாடு கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடாது. குறைந்தபட் சம் அதன் ஸ்டைலையாவது மாற்றுங் கள்; கொஞ்சம் ஷேப்பை மாற்றுங்கள் . உதாரணமாக, குழந்தைக்கு எழுத்துக்கள் வடிவத்திலோ, படகு, பூ போன்ற வடிவங்களிலோ பூரி, சப்பாத்தி, தோசை ஆகியவற்றை சுட்டுக் கொடுங்கள். பிள்ளைகள் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார் கள்.

குழந்தைகளின் மனதை புரி்ந்துகொள்ள நீங்களும் குழந்தையாகு ங்க!

குழந்தைகளுக்குச் செல்லப்பெயர் சூட்டு ங்கள். அது ‘கரடிக்குட்டி ‘யாகவும் இருக் கலாம், ‘ராசா’வாகவும் இருக்கலாம். அந்தப் பெயர் கள், பெற்றோரின் மனதில் தனக்கு ஸ்பெஷல் இடம் உண்டு என குழந்தையை சிலிர்க்க வைக்கும் குழந்தைகளுக்கு டூரிஸ்ட் ஸ்பாட்களும் ஒன்று தான் தெருமுனை ‘பார்க்’கும் ஒன்று தான். அவர்கள் உற்சா கமாக விளையாடக்கூடிய ஓர் இடமாக இரு ந்தால் அவர் களுக்கு அது போதுமானது. எனவே, பெரிய பெரிய பிளா ன்களுடன் காத்திராமல், அடிக் கடி அவர்களை அருகிலுள்ள வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

 தினமும் ஒரு மணி நேரமாவது பிள்ளைகளுடன் செலவிடுங்கள். பேசி, சிரித்து, விளையாடி அவர்க ளிடம் ஸ்கூல் கதைகளைக் கேட்டு மகிழுங்கள். குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான இணைப்பை இது வலுவாக்கும்.

 ஆன்மிகத்தில் நம்பிக்கை உண்டா? தினமும் குடும்பமாக கூடி பிரார்த் தனை செய்யுங்கள். குழந்தைகளு க்கு வழிகாட்டவும், குடும்ப மாக நேரம் செலவிடவும் இது உதவும்.  குழந்தைகள் உங்களை   எப்போது வேண்டுமானாலும் தொலை பேசியில் அழைக்கலாம் எனும் அனுமதி கொடுங்கள். அவர்களு டைய அவசரத் தேவைக் கோ, மனம் சோர்வாக இருந்தாலோ, திடீர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவோ அவர்கள் உங்களை அழைக் கட்டும். அலுவலகம், மீட்டிங் எல்லாம் இரண் டாம்பட்சம்தான். குழ ந்தைகளுக்கு நீங்கள் எப்போதும் கூப்பிட்டதும் பேசுபவராக இருக் க வேண்டியது மிக முக்கியம்.

குழந்தைக்கு தன்னம்பிக்கை ஊட்டுங்க

1. உங்கள் அன்பை குழந்தைக்குத் தெரியப்படுத்துங்கள். ஆம்… ‘அப்பா, அம்மாவுக்கு என் மேல அவ் ளோ அன்பு’ என்று குழந்தை உணரும்படி யான உங்களின் நிபந்தனையற்ற அன்பே அவர்கள் தன்னம்பிக்கைக் கான முதல் தேவை.

2. சமையலில் உதவுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, படுக்கையை சரி செய்வது என வீட்டிலுள்ள சின்னச் சின்ன வேலைகளில் குழந் தைகளை ஈடுபடுத்துங்கள். இது, அவர்களின் தன்னம்பிக்கையை வெகுவாக வளர்க்கும்.

3. குழந்தைகள் எப்போதும் எதையாவது திறந்து, மூடி என்று நோண்டிக்கொண்டே தான் இருப்பார்கள். அதிலும் கிச்சன் கப் போர்டுகளும் கரண்டிகளும் அவர்களுடை ய ஃபேவரிட். இதெல்லாம் அவர் கள் தங்கள் தன்னம்பிக்கையைத் தானாகவே வளர்த்து க் கொள்ளும் வழிகள்தான். கரண்டியால் தட்டி சத்தம் எழுப்புவது. டம்ளர்களில் தண்ணீர் ஆற்றுவது… இப்படி ‘எனக்கும் தெரியும்’ என்று அவர்கள் செய்யும் இந்தச் சேட்டைக ளை ஆங்கிலத்தில் ‘பேபி புரூஃபிங்’ (Baby proofing) என்பார்கள். எனவே, இதற்கெ ல்லாம் அவர்களை அனுமதியுங்கள். கூட வே, அங்கு ஆபத்தில்லாத சூழலை உரு வாக்குங்கள்.

4. நல்ல வழிமுறைகள் காட்டுங்கள். எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் சில ஒழுங்குகளைப் புகுத்துங்கள். உதாரணமாக… வீட்டுப் பாடங்கள் செய்வது அல்லது விளையாட்டுகளில் சில விதிமுறைகள் தருவது. அவற்றை அவர்கள் கடைபிடிக்கப் பழக்குங்கள். சரியாகச் செய்யு ம்போது பாராட்டு ங்கள்.

5. கோயிலுக்குச் செல்லும் நேரம், அவுட்டி ங் செல்லும் இடங்கள் என சிலவற்றை குழந் தைகளைக் கலந்தாலோசியுங்கள். ”இதுக்கெ ல்லாம் எதுக்கு அதுககிட்ட கேட்டுகிட்டு..?” என இழுக்காதீர்கள். முடிவெடுப்பது நீங்கள் தான். ஆனால், அவர்களிடம் கலந்துரையாடு வது, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும். தனது கருத்தும் கேட் கப்படுகிறது என்பது அவர்களைப் பொறுப்புள்ளவர்களாக்கும்.

6. நண்பர்கள், உறவினர்கள் குடும்பத்தின ரோடு சேர்ந்து சுற்றுலா செல்லுங்கள். அந் தக் குடும்பங்களிலும் குழந்தைகள் இருந்தா ல் இன்னும் சிறப்பு. அருகிலுள்ள இடங்களு க்குச் செல்வதே போதுமானது. பிற குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் நேரம் செல விடுதல், உங்கள் குழந்தையின் வெளி உலகப் பழக்கத்தை வளர்க்கும்.

குழந்தைகளை தட்டிக் கொடுங்க

1. குழந்தைகளைச் சரியான நேரத்தில் தூங்கப் பழக்குங்கள். குழந் தைக்கு எப்போது தூக்கம் வருகிறது என் பது உங்களுக்கே தெரியும். கண்ணைக் கசக்கும், கொட்டாவிவிடும், தோளில் தொங்கும், சோர்வாய் இருக்கும். உடனே குழந்தையைப் படுக்க வையுங்கள். இப்படி கொஞ்ச நாள் பழக்கினாலே, தூக்கம் வரும்போது தானாகப் போய் படுத்துக் கொள்ளும்! படுக்கையறையில் கொஞ்சம் வெளிச்சம் இருக்கட்டும். அது குழந்தையை நீங்கள் கவனிப்பதற்காக! குழந்தையின் தூக்கத் தைக் கெடுக்கும் அளவுக்கு வெளிச்சம் வைக் காதீர்கள்.

2. குழந்தைகளின் விரல் சப்பும் பழக்கத்தை நீங்கள் மிகச் சின்ன வயதிலேயே நிறுத்திவிட முடியும். முயற்சி தான் தேவை. நன்றாகப் பழகி விட்டால் பின்னர் அதை நிறுத்துவது வெகு கடினம்.

3. சின்னதாக குழந்தை தவறினாலே பதறிய டித்துத் தூக்காதீர்கள். அவர்கள் தானாக எழுந்து வரப் பழக்குங்கள். நீங்கள் அருகில் இருந்து ஊக்கப்படுத்தினாலே போதும். நீங் களே வியக்கும்படி அவர்கள் வளர்வார்கள்.

4.”கரீஷ்மாவைவிட நீதான் சூப்பர்” என்றெல் லாம் பிதற்றாதீர்கள். குழந்தைகளுக்கு வரக் கூடாத ஒரு பழக்கம், பிறரைக்குறை சொல் லுதல். அதேபோல ”தமிழ்ச்செல்வி எவ்ளோ சூப்பரா டான்ஸ் ஆடறா… நீயும் இருக்கியே” என பிற பிள்ளைகளைப் பாராட்டி, உங்கள் குழந்தையைத் தாழ்த்தாதீர்கள். அது, உங்களை அறியாமலேயே அவர்களின் மனதைச் சிதைப்பதற்கு காரணமாகிவிடும்.

5. பிறருக்கு உதவுதல், பிறரை மதித்தல் என்று குழந்தைகளுக்கு நல்ல செயல்க ளைக் கற்றுக் கொடுங்கள். கூடவே, நீங்க ளும் அது போல் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் வேலைக்காரரைத் திட்டினால் உங் கள் குழந்தையும் அப்படியே திட்டும். அதை த் தவிர்த்து, அவர்களுடைய குணாதிசயங் களை நல்ல முறையில் கட்டி எழுப்புங்கள்.

குழந்தைகளைக் கண்டிக்கவும் மறந்துடாதீங்க!

1. குழந்தைகளைக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக வளர்க்க வேண்டி யது மிக முக்கியம். அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் சிறு வயதி லேயே செய்யுங்கள். குழந்தைகளைப் பெற் றோர் கண்டித்து, தண்டித்து வளர்ப்பதில் தவ றில்லை. ஆனால், எதற்கும் ஓர் எல்லையு ண்டு என்பதை மனதில் கொண்டு தண்டிக்க வேண்டும். ஆனால், அது சின்ன வயதிலே யே ஆரம்பிக்க வேண்டும். வளரும் வரை செல்லம் கொடுத்துவிட்டு, வளர்ந்தபின் தண்டிக்காதீர்கள். அது அவர்களை ரொம்ப வே பாதிக்கும்.

2. குழந்தையை அப்பா கண்டிக்கும்போது அம்மா தடுக்கக் கூடாது. இருவரும் ஒரேமாதிரி நடந்துகொள்ள வேண்டும். தப்பு செய்தால் இரண்டு பேருமே கண்டிப்பார்கள், தண்டிப்பார்கள் எனும் நிலை வே ண்டும். அதேபோல நல்லது செய் தால் இருவரும் பாராட்ட வேண்டு ம். அதுதான் குழந்தை குழம்பாமல் நல்ல செயல்களை விரைவில் கற்க உதவும்.

3. ஒரேயடியாகச் செல்லம், ஒரேயடியாகத் தண்டனை என இரண்டு எல்லைகளில் நிற்காதீர்கள். ஒரு பேலன்ஸ் இருக்கட்டும். முதல் முறை தவறு செய்யும்போதே தண்டிக்காதீர் கள். செய்தது தவறு என புரிய வையுங்கள். சில எச்சரிக்கைகள் செய்யுங்கள். இவை எல்லாம் மீறப்படும்போது தண்டியுங்கள்.

4. ‘மம்மி அடிக்க மாட்டாங்க, சும்மா மிரட்டிட் டேதான் இருப்பாங்க’ என குழந்தை நினைக் கக் கூடாது. தவறு செய்யும்போது அந்த நேரத் திலேயே கண்டித்து, தண்டிப்பது நல்லது… அப்பா வரும் வரை காத்திருந்து தண்டிப்பதை விட.

5. மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் பழக்கத்தை… செல்லமாக வோ, கண்டிப்புடனோ குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். தேவை ப்படுபவர்களுக்கு வழங்குவது நல்ல பண்பு என்பதை அவர்களுக் குப்புரிய வைக்க வேண்டும். அவர்கள் கை யால் வறியவருக்கு உதவிகள் செய்ய வை க்கலாம். அதற்கு முதல் கட்டமாக, கொடுக் கும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொள் வது முக்கியம்.

6. குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து, எதையாவது எடுத்துக் கொண்டு வருவது சகஜம். உண்மை யில் குழந்தைகளுக்கு ‘இது தன்னுடையதல்ல, எடுக்கக் கூடாது’ என்பதல்லாம் தெரியா து. அந்த அறிவை ஊட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. குழந் தையின் தன்மையை உணர்ந்து தெளிவாகப் புரிய வைக்க வேண் டும். தொடர்ந்தால், கண்டிக்க வேண்டும்.

7. காலம் தவறாமையை குழந்தைகளு க்குப் பழக்க வேண்டும். குறிப்பாக, நீங்க ளும் அதைக் கடைபிடியுங்கள். அரக்கப் பரக்க குழ ந்தையை ஸ்கூலுக்கு இழுத்து கொண்டு ஓடுவது… அப்படியும் பத்து நிமி டம் லேட்டாக கொண்டு விடுவது போன்ற பழக்கங்களை விட்டொழியுங்கள். குழந் தைக்கும் இதையெல்லாம் ஸ்ட்ரிக்டாகப் பழக்குங்கள்.

குழந்தைகளின் விருப்பத்தை வெறுக்காதீங்க!

1.குழந்தைகளிடம் ஏதேனும் கலை ஆர்வ ம் இருக்கிறதா என்பதை க் கவனியுங்கள். அந்த ஏரியாவில் குழந்தைக்கு வாய்ப்பு களை அதிகமாக உருவாக்கிக் கொடுங் கள். மேஸ்ட்ரோ இளைய ராஜாவோ, ஓவியர் எம்.எஃப். ஹ§சைனோ உங்கள் குழந்தைகளிடம் ஒளிந் திருக்கலாம் எனும் எண்ணம் கொண்டிருங்கள்.

2. இசை, குழந்தைகளின் கவனத்தையும், மனதையும் கூராக்கும். இசை உங்கள் குழந்தைக்குப் பிடிக்குமெனில் வீட்டில் அடிக்கடி இசை கேட்க வையுங்கள். குழந்தைகளின் இசை ஆர்வம் அதிகரித்தால் அவர்களு டைய கணித அறிவும் வளரும். ஆச்சர்ய மாக இருக்கிறதா? இரண்டையுமே நிர்ண யிப்பது மனிதனின் வலது மூளை தான்!

3. அவரவருக்குப் பிடித்தால்தான் அதன் பெயர் ‘ஹாபி’. எனவே, செஸ், ஷட்டில் என்று உங்களின் விருப்பத்தையே குழந்தைகளின் விருப்பமாகத் திணிக்காமல், அவர்களின் விருப்பமான ‘ஹாபி’யை தெரிந்து கொ ண்டு, சம்பந்தப்பட்ட வகுப்புகளில் சேர்த்து விடுங்கள். அதற்காக காலை, மாலை, சனி, ஞாயிறு என்று வாரத்தில் அவர்களை நான்கு ‘எக்ஸ்ட்ரா ஆக்கிவிட்டி’ வகுப்புக ளில் சேர்க்காமல், ஏதாவது ஒன்றில் சேர் த்து, அதில் அவர்களை முழுமையாக்குங் கள்.

உங்கள் குழந்தைகளை பாதுகாக்க மறந் துடாதீங்க

எக்காரணம் கொண்டும் உங்களுடைய அலுவல் டென்ஷனை யோ, பிறர் மேல் உள்ள கோபத்தையோ குழந்தைகளிடம் காட்ட வே காட்டாதீர்கள். நீங்கள் அவசரத்திலோ, கோபத்திலோ சொல் லும் ஒற்றை வார்த்தை போதும்… குழந்தையின் மனதைப் புரட்டிப் போட. குழந்தைகளுடன் பேசும்போது உலகிலுள்ள மற்ற அனைத்து பிரச்னைகளையும் தூர எறிந் துவிட்டுப் பேசுங்கள்.

 பெற்றோர், குழந்தைகளுக்கு போதிய நேரம் ஒதுக்க வேண்டும். இல்லையேல் குழந்தைகள் எதையாவது செய்து பெற்றோரின் கவனத்தைப் பெற முயல்வார்கள். அதிக குறும்பு செய்வது, எதை யாவது உடை ப்பது… இப்படி. குழந்தை விழுந்து அழுதால்தான் நீங்கள் ஓடிப் போய் எடுப்பீர்களெனில், குழந்தை அடிக்கடி தானா கவே போய் விழுந்து அழும் என்பது உளவியல் உண்மை.

 சரியான கவனம் பெற்றோரிடமிருந் து கிடைக்காத பிள்ளைகள் பள்ளிக் கூடங்களிலும் நன்னடத்தையுடன் இருப்பதில்லை. அடுத்தவர்களைக் கிண்டல் செய்தோ, தாழ்வாகப் பேசியோ கவனம் ஈர்ப்பார்கள். தங்கள் மனக்குறையை வேறு செய ல்களால் நிரப்ப முயலும் உத்தியே இது. எனவே, குழந்தைகளின் அடிப் படைத் தேவையை அறிந்து கொள் ளுங் கள்.

 குழந்தைகள் மீதான பாலியல் வன் முறை எங்கும் பரவியிருக்கி ன்றன. எனவே, குழந்தைகளைக் கவனமா கக் கண்காணியுங்கள். குழந்தைக ளிடம் அன்றைய நிகழ்ச்சிகளை முழுவதும் கேளுங்கள். அவர்க ளின் நடவடிக்கை, முகபாவம் இவற்றில் ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால் உஷாராகிவிடுங்கள்.

 ‘குட் டச்’, ‘பேட் டச்’… இரண்டையும் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக் கலாம். ”யாராவது ‘பேட்டச்’ பண்ணி னா மம்மிகிட்ட சொல்லணும்” என அறிவுறுத்தி வைக்கலாம். குழந்தை யை யாரும் தொந்தரவு செய்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து களைய இது உதவும்.

பெரும்பாலான பாலியல் தொந்தரவுகள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், தெரிந்தவ ர்கள் மூலமாகவே வரும்! இன்னொரு முக்கி யமான விஷயம், பாலியல் தொந்தரவுகள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமானதல்ல… ஆண் குழந்தைகளுக்கும்தான்!

உங்க குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்க

குழந்தைகள் தினமும் செய்தித்தாளைப் படி க்க ஊக்கப்படுத்துங்கள். நாளிதழ்களிலுள்ள செய்திகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளு ங்கள். தலைப்புச் செய்திகளை விவாதியுங்கள். அவை குழந்தை களின் பொது அறிவு த் திறனை வளர்க்கும். உதாரணமாக… நாட்டுத் தலைவர்கள், இடங்கள் போன்ற வ ற்றைப் பற்றி அதிகம் பேசலாம்.

புதிய புதிய நூல்களை வாசிக்க உற்சாகப் படுத்துங்கள். அவர்களை ஏதேனும் நூலகங் களில் இணைத்து விடுங்கள். வீட்டிலேயே அவர்களுக்குப்பிடித்தமான புத்தகங்கள் கிடைக்க வழி செய்யுங்கள். இவையெல்லா ம் வாசிப்பு ஆர்வத்தை அதிகரிக்கும்.

 பிள்ளைகள் எதிலும் கவனம் இல்லாமல் இருப்பது பெரும்பாலான பெற்றோரின் கவலை. குழந்தைகளுக்குக் கவனம் ஊட்டுவது ஒரு கலை. அவர்களுக்குச் சில பயிற்சிகளைக் கொடுப்பதன் மூலம் அவர்களின் கவனத் திறனை ஊக்குவிக்கலாம். பத்து நிமிடத்தில் பொம்மைகளை அடு க்கி முடிப்பது, பத்து நிமிடத்தில் பத்து கற்க ளைப் பொறுக்கி வருவது, பொருட்களை கொஞ்ச நேரம் பார்த்து விட்டு வந்து காகிதத்தில் அதன் பெயர்கள் எழுது வது… இப்படி உங்கள் கற்பனைக்கு ஏற்ப ஏதாவது!

பெரிய வேலையை சிறிது சிறிதாகப் பிரிக்கும் கலையை குழந்தை களுக்குச் சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக, வீட்டுப் பாடம் என்பது பெரிய வேலையென்றால் அதை சிறிது சிறிதாகப் பிரியு ங்கள். ‘இப்போது சயின்ஸ்… சாப்பிட்டதுக்கு அப்பறம் மேத்ஸ் …’ – இப்படி உங்களுக்கு வசதிப்படும் வகையில் பிரிக் கலாம். முக்கியமான ஒரு விஷயம், குழந்தைக்கு அடிக் கடி ‘பிரேக்’ கொடுங்கள். தொடர் ந்து மணிக்கணக்கில் குழந்தை படித்துக் கொண்டே இருக் கக் கூடாது!

குழந்தைகளுக்கு எதிர்கால விருப்பம் என்ன என்பதைக் கேளுங்கள். அவற் றை ஒரு படமாக வரையச் சொல்லலா ம். அப்படிச் செய்வதன் மூலம் குழந்தை யின் அறிவுத்திறன் கூர்மையாகும். அவர் களுடைய கற்பனை சக்தியும் அதிகரி க்கும்.

குழந்தைகளுக்கான ‘பஸில்’ விளையா ட்டுகள் இப்போதெல்லாம் கடைகளில் எக்கச்சக்கமாகக் கிடைக்கி ன்றன. எண்களை வரிசை ப்படுத்துவது, வார்த்தைகளை வரிசைப்படுத்துவது, எழுத்து க்களைக் கொண்டு வார்த் தைகள் அமைப்பது இப்படி நிறைய. அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க லாம்.

 பொருட்களை ஒரு கதை போல நினைவில் வைப்பது குழந்தைகளுக்கு மிகவும் எளிய செயல். எனவே, நினைவில் வைக்க வேண்டியவற்றை ஒரு கதை வடிவில் அவர்களிடம் சொல்லுங்க ள். உதாரணமாக, பத்து விலங்குக ளின் பெயர்களை நினைவில் வைத் திருக்க, அவற்றைக்கொண்டு ஒரு கதை உருவாக்குங்கள்.

மேற்கூறியதுபோல் உங்கள் குழந் தைகளை நீங்கள் வளர்த்தால், தன்ன‍ ம்பிக்கை உடையவனாகவும், எதிலு ம் சிறந்தவனாகவும் விளங்கிடுவான் என்பது திண்ண‍ம்!

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: