Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கை நிறைய சோழி . . – என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

சில தினங்களுக்குமுன், தொலைக்காட்சியில், வெள்ளி விழா திரைப்படத்தில் இருந்து கை நிறைய சோழி கொண்டு வந்தேன் தோழி என்ற பாடலை ஒளிபரப்பினார்கள். எத்த‍னை அற்புதமான வரிகள், எவ்வ‍ளவு ஆழமான கருத்துக்கள! பாடல் அமைந்த சூழலை அப்ப‍டி வரிகளாக வடித்து நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த பாடலை பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் விதை 2விருட்சம் இணையத்தில் பகிர்கிறேன்.
 
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1972ஆம் ஆண்டு வெளிவந்த வெள்ளி விழா தமிழ்த் திரைப்படம் ஆகும். இத் திரை ப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி, வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித் துள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள‍ பாடல்கள் அனைத்தும் அருமை. அவற்றுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாடலான கை நிறைய சோழி கொண்டு வந்தேன் தோழி ஆகும்.

பாடல் இடம்பெற்ற‍ சூழல்:

ஜெமினி கணேசன் ஒரு விளையாட்டு வீரராவார். அவரது மனைவி ஜெயந்தியோ ஒரு அப்பாவிப்பெண். கணவனும் மனைவியும் மிகுந்த அன்யோ ன்யமாக வாழ்கிறார்கள். இவர்களது வாழ்க்கையில் வாணிஸ்ரீ குறுக்கிடுகிறா ர். ஒரு சந்தர்ப்ப‍த்தில், அதாவது எந்தவித மான தவறான நோக்க‍மும் இல்லாமல் நட்பு ரீதியாக ஜெமினி கணேசனுடன் பழகி வரு வார். ஜெமினியும் அவ்வாறே நட்பு ரீதியாக வே பழகி வருவார். இவர்களது களங்க மில்லாத நட்பினை, ஜெயந்தியும் புரிந்து கொண்டு, கணவன் மீதோ அல்ல‍து வாணிஸ்ரீ மீதோ எந்தவிதமான சந்தேக மும் இல்லாமல் பழகி வருவார்.

இருப்பினும், இவர்களது நட்பு ரீதியான பழக்கத்தை பார்க்கும் பலர் ஜெயந்தியிடம், அவளை உன் கணவனோடு பழக விடாதே! அப்புறம் மனைவி என்ற ஸ்தானம் பறி போகும் என்ற பலவாறு புறஞ் சொல் லி, ஜெய்ந்தியின் மனதை கெடுக்க‍ பின்பு என்ன‍, களங்க மில்லாத மனதில் சந்தேகத் தீ பற்றி எரியத் தொடங்குகிறது.

இதை எப்ப‍டி வெளிப்படை யாக கேட்பது? யாரிடம் கேட் பது? தன் கணவனிடம் கேட்டால், எங்கே கோபித்துக் கொள்வாரோ என்ற பயம் வேறு, சரி வாணிஸ்ரீயிடம் கேட்டுவிடலாம் என்றால், ஒரு கன்னிப்பெண்ணிடம் எப்ப‍டி கேட் பது என்ற தயக்க‍ம் வேறு தொற்றிக்கொள்கிறது ஜெயந்தியிடம்.

இத்தருணத்தில், கணவனும், அவரது தோழியான வாணிஸ்ரீயும், ஒரு அறையில் சதுரங்கம் (செஸ்) விளை யாட்டு விளை யாடிக்கொண்டிருக்க‍, அதே நேரத்தில், மற்றொரு அறையில், ஜெயந்தி, தனது மாமியாருடன் சோழி விளையாட்டு ஆடிக் கொண்டிருக்கிறார் கள்.

ஆட்டத்தையே தனக்கு சாதகமாக வை த்து, தனக்கு இருக்கும் கேள்விகளை, ஒவ்வொன்றாக வாணிஸ்ரீயிடம் கேட்பதாகவும் அதை சரியாக புரிந் துகொண்ட வாணிஸ்ரீயும் அதற்கு, “எப்போதும் உன் கணவனை பறித்து செல்ல‍மாட்டேன், அந்த கணவன் உன்னுடையவன் தான் உனக்கு உரியவன்தான்” என்பதையும், “எங்களது நட்பின் மீது சந்தேகம் வேண்டாம்” என்பதையும் குறிப்பிட்டு பதில் அளிப்ப‍ தாக இந்த பாடலை அமைத்திருப்ப‍து சிறப்புக்குரியதே!

 
கீழுள்ள‍ வீடியோவில் பாடலை கேளு ங்கள், பின்வரும் வரிகளை சற்று கவன மாக படித்துப்பாருங்கள் என்ன ஒரு அற்புதமான வரிகள் என்று நீங்களே சொல்வீர்கள்.
– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி
 
அந்த அற்புத பாடல் ஒளி(லி)க்கும் வீடியோ இதோ   
 
 
பாடல் வரிகள் இதோ . . .
 
கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி
காயை வெட்டலாம கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி
(கை நிறைய)
தவமிருந்து நானே தாயம் ஒன்று போட்டேன்
வெட்டுப் பட நானும் விட்டு விட மாட்டேன் விட்டு விட மாட்டேன்
(கை நிறைய)
 
அங்கிருக்கும் மங்கை சொந்தமுள்ள‌ ராணி
இங்கிருக்கும் கன்னி சொக்கட்டான் ராணி
கலக்கமென்ன தோழி கண் விழிக்கும் நாழி
விதி என்று விளையாட்டை நினைப்பதும் ஏனோ சந்தேகம்தானோ
(கை நிறைய)
 
பன்னிரெண்டு போட்டாலும் கன்னிரெண்டும் அங்கே
மன்னவனும் ஆட்டத்திலே மாட்டிக் கொண்டான் இங்கே
ஒன்னு விழும் இடத்தினிலே ரெண்டு விழலாமோ!
பந்தயத்தை வாழ்க்கை என்று எண்ணி விடலாமோ!
(கை நிறைய)
 
நாண‌மென்றும் அச்சமென்றும் நாளு கட்டம் பெண்மைக்குண்டு
நான் ஆடும் ஆட்டமெல்லாம் ஆட வேண்டும் அதற்குள் நின்று
தாண்டி வர மாட்டலாம்மா தோழியவள் எல்லை!
மங்கையவள் நாலு குணம் மறந்தவள் இல்லை!
(கை நிறைய)
 
– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: