Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை????

சென்னை அருகே வங்கக் கடலுக்கு அடியில் எரிமலை இருக்கிற தா என்பது குறித்து 3 நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாக அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரி வித்துள்ளது. கல்பாக்கம் அருகே வங்க க் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்! சென்னையில் இருந்து 100முதல் 110 கி.மீ தொலைவில் கடந்த 1757ஆம் ஆண்டில் எரிமலை ஒன்று வெடித்து லாவாவை கக்கியது.. இதனா ல் கடல் நீரின் நிறம் மாறியது என்று ஒரு மாலுமி தமது பயணக் குறிப்பில் பதிவு செய்தி ருந்தார். மேலும் சில விஞ்ஞானிகளும் இணையதள பக்கங்களில் இதைப் பதிவு செய்திருப்பதுடன் வங்கக்கடலின் அடியில் பெயரிடப்படாத 0305 =01 என்ற எண்ணால் குறிப்பிடப் படுகிற எரிமலை இருக்கிறது என் றும் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணை யத்திடம் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் விவரம் கேட்டிருந்த னர். ஆனால் இதை அணுசக்தி ஆணையம், எரிமலை இருக்கிறது என்பது நிரூபிக்கப்படவில்லை. இந்திய புவியியல் ஆய்வு நிறு வனம், தேசிய கடலியல் ஆய்வு நிறு வனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் ஆகிய வை வங்கக் கடலில் எரிமலை இருக்கி றதா? என்பதை அறியும் ஆய்வில் ஈடு படுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.

சென்னையில் இருந்து 100 முதல் 110 கிலோ மீட்டருக்குள்தான் கல் பாக்கம் அணுமின் நிலையமும் அமைந்திருக் கிறது. ஒருவேளை கடலுக்கடியில் எரிமலை இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது சென்னை முதல் புதுச்சேரி வரையில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.
-tamiloneindia

One Comment

  • Raju, Scientist, Hyderabad

    There is no truth in this report. No threat to the places adjoining Bay of Bengal. Some time back, there was similar news item in Times of India. I have given reply to the news item saying that there is no threat of volcanic eruption in this region.

Leave a Reply