த்ரீ ரோஸஸ் தேனீர் விளம்பரத்தில் சமீப காலமாக வித்தியாசமான காட்சி அமைப்புகள் வசனங்களுடன் விக்ரம் திரிஷா ஜோடி தோன்றி நடித்து வருகின்றனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் த்ரீ ரோஸஸ் தேனீர் விளம்பர த்தில், வரும் காட்சிகள்
நடிகர் விக்ரம் வருகிறார். திரிஷாவிடம் சில கேள்வி களை கேட்கிறார். அதற்கு நடிகை திரிஷாவும் பதிலளிக்கிறார்.
கடைசியாக, நடிகர் விக்ரம் ஹெல்தி . . . என்று பாதிலேயே விடுவார்.
அதற்கு திரிஷா, மெதுவாக விக்ரமின் சட்டைப்பையில் கைவிட்டு, ஒரு 10 ரூபாயை எடுத்துக்காட்டுவார்.
இதை பார்த்த விக்ரம், 10 ரூபாயா? என்று கேட்பார்?
அதற்கு திரிஷா, ஆம்! ஹெல்தியான த்ரீ ரோஸஸ் டீயின் விலை வெறும் 10ரூபாய்தான் என்பார்.
அத்துடன் த்ரீ ரோஸஸ் விளம்பரம் நிறைவடையும்.
இதில் வேடிக்கை என்னவென்றால்,
திரிஷா, ஒரு பத்து ரூபாய்க்கூட இல்லாமலா? இருப்பார். இதை யாரை கிண்டல் செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. கோடி கோடியாக சம்பளம் வாங்கும் திரிஷாவையா?
அல்லது
பெண்களே! இப்படித்தான், தங்களுக்கு பணம் தேவைப்படும் போது, ஆண்களின் அனுமதி யின்றி அவர்களது சட்டைப் பைக்குள் கை விட்டு, ரூபாய் எடுத்து செலவழிப்பது போல் காட்டுகிறார்களா?
அல்லது
பெண்களிடம் பணமே இல்லையென்று சொல்லி பெண்களை கொச்சைப்படுத்துகிறார்களா?
போன்ற கேள்விகள் எழுகின்றன•
இதே நிறுவனத்தின் பழைய விளம்பரத்தில், திரிஷா உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பார். அப்போது அங்கு வரும் விக்ரம், திரிஷா விடம் நான் ஒரு புதிய எக்ஸ்ஸைஸ் சொல்லித் தருகிறேன். நான் செய்வது போலவே நீயும் செய் என்று கட்டளை இடுவார்.
அதற்கு திரிஷாவும் உடன்பட்டு, விக்ரம் சொல்லும் சில அடிகளை செய்வார் பின்,
இறுதியாக விக்ரம் தனது பாக்கெட்டில் கைவிடுவார். அதேபோல் திரிஷாவையும் அவரது (திரிஷாவின்) பாக்கெட்டில் கைவிடச் சொல்வார் அவரும் அவ்வாறே செய்வார்.
பாக்கெட்டில் கைவிட்ட விக்ரம் பின் அதிலிருந்து 10 ரூபாயை எடுப் பார்.
உடனே திரிஷா என்னது 10 ரூபாயா? என்று கேட்பார்.
அத்றகு விக்ரம் ஆமாம்! 10 ரூபாய் தான். 10 ரூபாய்க்கு ஹெல்த் கிடைக் குதுலே என்று முடிப்பார்.
இந்த பழைய விளம்பரத்தில் விக்ரம் தனது பாக்கெட்டில் இருந்து 10 ரூபாயை எடுத்தது போலவே, புதிய விளம்பரத்திலும் திரிஷாவை யும் அவரது பாக்கெட்டில் லோ, அல்லது கைப்பியில் இருந்தோ தனது சொந்தப் பணமான இந்த 10 ரூபாயை எடுப்பது போல காட்சி அமைத்திருக்கலாமே!
– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி
படங்கள் கூகுள்