Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கலைவாணியே. . .! என்ற பாடலும் அதன் சிறப்பும்! – வீடியோ

1985 ஆம் ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி என்கிற திரைப்படம் ஆகும். இதில் நடிகர்கள் சிவகுமார், டெல்லி கணேஷ், ஜனகராஜ்,  நடிகைகள் சுஹாசினி, சுலக்ஷனா உட்பட‌ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் அத்கித்ய, மகா கணபதிம், நீ தய ராதா, மரி மரி நின்னே, பாடறியேன் படிப்பறியேன், நான் ஒரு சிந்து,  மோகம் எனும், ஆனந்த நடனம், பூமாலை வாங்கி, யோச்சனா கமல லோச்சனா,  தண்ணி தொட்டி, கலைவாணியே! என்று மொத்த‍ம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ள‍ன• இந்த 12 பாடல் களும், தின்ன‍ தின்ன‍ தெகி ட்டாத சுவைதரும் தேனில் ஊறிய பலாச்சுளைகளே! இந்த 12 பாடல் களுக்கும் இசைஞானி இளைய ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த 12 பாடல்களில், இடம்பெற்ற‍ சில‌ கீர்த்த‍னைகளுக்கும் பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் என்ற பாடலுக்கு இளைய ராஜா இசையைத்துள் ளார். காவியக் கவிஞர் வாலி அவர்களின் யதார்த்த‍மான வரிகளை கொண்ட பாடல்களும் இடம்பெற்றுள்ள‍ன•

இன்று நாம் பார்க்க‍விருப்ப‍து, கலைவாணியே! என்ற பாடலின் சிறப்பை விதை2விருட்சம் இணையம் மூலமாக பகிர்கிறேன்.

புகழின் உச்சியில் இருக்கும் ஒரு சங்கீத வித்வான், விதி வசத்தால், குடிக்கு அடிமை யாகி, அதள பாதாளத்தில் விழுந்து விடுகிறார். பின்பு அதிலிருந்து மீண்டு, மீண்டும் சங்கீதம் பாட வருகிறார். அவர், தனது வாழ்க்கையில் இனி ஏற்ற‍ங்கள் மட்டுமே இருக்கும் என்பதை காட்டும் விதமாக, கலை வாணியே என்ற பாடல் அமைத்திருப்ப‍து இசையமை ப்பாளரின் திறமையை உயர்த்திக் காட்டுவதாக அமைந் திருக்கிறது.

கலைவாணியே என்ற‌ பாடல், கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல் ஆகும்.

இதில் இடம்பெற்ற‍ ஸ்வரங் கள் ஸ, ரி2 க2 ம2 ப த2 நி2 ஸ்,

ஸ்வரங்களை இடமிருந்து வலமாக (ஏறு வரிசையில்) பாடுவது ஆரோஹணம் என்றும் (ஸ, ரி2, க2, ம2, ப, த2, நி2, ஸ்)

வ‌லமிருந்து இடமாக (இறங்கு வரிசையில்) பாடுவது அவரோகணம் என்றும் (ஸ், நி2, த2, ப, ம2, க2, ரி2 ஸ) குறிப்பிடுவார்கள்

ஒரு பாடல் அமைக்கும் சில வார்த்தைகள் ஆரோஹணத்திலும், சில வார்த்தைகள் அவரோகணத்திலும் கலந்து மெட்டு அமை க்க‍ப் படுகின்றன• ஆனால் இந்த பாடலின் வரும் வார்த்தைகளுக்கு இசையமைக்கும் போது, ஆரோஹணத்தில் இடம்பெறும் ஸ்வரங்களை வைத்துக் கொண்டு, இந்த பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

ஜேசுதாஸ் அவர்களின் கணீர் குரலில் ஒலிக்கும் அந்த பாடலை நீங்களும் கேளுங்கள்

கலைவாணியே… கலைவாணியே…

உனைத்தானே அழைத்தேன்… உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும்

(கலைவாணியே…)

சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய்
மடிமீது மரித்தேன் மறுஜென்மம் கொடுத்தாய்
சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய்
இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்லவில்லை மறந்தாய்

முகம் காட்ட மறுத்தாய்.. ஆ….
முகம் காட்ட மறுத்தாய்.. முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள்
தெரிக்கிறது துடைத்துவிடு..

(கலைவாணியே..)

உள்ளம் அழுதது உன்னை தொழுதது உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை இடையினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டும் உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி

கண்ணீர் பெருகியதே… ஆ….

கண்ணீர்பெருகிய கண்ணில் உன்முகம் அழகிய நிலவென மிதக்கும்
உயிரே உயிரின் உயிரே அழகே அழகின் அழகே
இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை
இனியொரு பிரிவில்லை துயர் வர வழியில்லை.. வருவாய்..

-விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply