Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹோட்ட‍ல் சாப்பிடுவோருக்கான எச்ச‍ரிக்கை பதிவு

இட்லி:

பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனி யா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக் கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக் கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக் கமா… எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச் சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!

சோறு:

தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச் சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய் யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே… அதுக் காகத் தான் பெரும்பாலான ஹோட்ட ல்ல முக்காப் பதத் துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இரு க்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணி யில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந் தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப் பிடவே முடியாது!

புரோட்டா:

பல ரோட்டுக்கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவா ங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!

சால்னா :

சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட் டோம். அதேபோல மட்டன் கடை யில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக் கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட் டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சு வெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச் சுப் பாருங்க. ‘ஹோட்டல் கார ங்க மொத் தமா வாங்கிட்டுப் போயிடு வாங்க’ னு அவரும் யதார்த்தமா சொல்லிடு வார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத் தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்த மல்லித் தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜி னாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக் கான சால்னா ரெடி!

ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க…

தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டு ம் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கை யான விஷயம்தான். வீடுகளுக் கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள் ளாட்டுத் தலைதான் வாங்கு வோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினா லும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டு ட்டு, அப்புறம் அதை எடுத்து தரை யில தட்டோ தட்டுன்னு தட்டி புழு வை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பா ங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடு வோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல் லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டா ங்க. அப்படியே கைமாதான்.

எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல் களுக்கு சப்ளை செய் யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்த மல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதி ரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண் ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.

சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்ப டின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறி ப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக்கணும்!

பொது நலன் கருதி…. தகவல்: டி.எல்.சஞ்சீவ்குமார்

வேடந்தாங்(ல்)லில் தேடாமல் கிடைத்த‍ தகவல்

ப‌டங்கள் கூகுள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: