Tuesday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீரிழிவு (சர்க்க‍ரை) நோய் – விரிவான அலசல்

 நீரிழிவு நோய்

நமது உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியம். தேவையான இன்சுலினை உடல் உற் பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு எனப்படுகிறது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட் டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடை வில் அடைபடுதல் இதயத் தசைகளுக்கு இரத்த‍ம்,  வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பக்க‍ வாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது.

நீரிழிவில் மூன்று வகைகள்:

முதலாவது வகை நீரிழிவு(Type I Diabetes):

நீரிழிவானது குழந்தைகள் சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொ ண்டுதான் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் இவர் களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந் திருக்கின்றன. முதலாவதுவகை நீரிழிவு உதா ரணமாக 10%தினருக்கு ஏற்படு கின்றது.

இரண்டாவது வகை நீரிழிவு (Type II Diabetes)

இன்சுலின் சுரப்பிகள் போதியளவு இன்சுலின் சுரக்காதாலோ அல் லது அப்படி சுரக்கப்படும் இன்சு லின் தகுந்த முறையில் செயல் பட முடியாத தன்மையாலோ ஏற்படு கின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத் தட்ட 90 விகித்த தினரில் காணப்படுகிறது. இந்த வகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறு வார்கள். இந்த வகை அதிக உடற் பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரழிவை நிறைகுறைவதாலும் சாப்பாட்டுக கட்டுப்பாட்டா லும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டு ப்படுத்தலாம்.

மூன்றாவது வகை நீரிழிவு (Type III Diabetes):

மூன்றாவது வகையான கர்பகால நீரிழிவானது 2% முதல 4%மான பெண்களுக்கு கர்பகாலத்தின்போது ஏற்படுகி றது. குழந்தை பிறந்தவுடன் மறைந்து விடுகி றது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கை யில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். நமது இரைப் பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத் திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதி யில் கலக்கிறது.

நீரிழிவு நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பரம் பரையில் நீரிழிவு நோய் இருப்பவர் கள் எடை அதிகமாக இருப்பவர்கள் ஆகிய வர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

நீரிழிவு நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?

பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது.

சில பொதுவான அறிகுறிகள்:

1. அடிக்கடி சிறுநீர் கழிப்பது

2. அடிக்கடி தாகம்

3. அதிக பசி

4. மிக வேகமாக எடை குறைதல்

5. அதிகமாக சோர்வடைவது

6. கண்பார்வை மங்குதல்

7. வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்

8. திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்

நீரிழிவை கவனிக்காததால் விளைவு கள் என்னென்ன?

இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படக்கூடியவை. நீரிழிவை துவக்கத் திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகி விடு ம். கட்டுக்குள் இல்லாத நீரிழிவு, பல முக்கியமான உடல் உறுப்பு களையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும்.

பார்வை இழப்பு

மாரடைப்பு

சிறுநீரகக் கோளாறு

பக்கவாதம்

கால்களை இழத்தல்

கோமா மற்றும் இறப்பு

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோயின் சிகிச்சையில்:

1. உணவுமுறை

2. உடற்பயிற்சி

3. நோயின் தீவீரத்தைத் தவறாமல் கண் காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல்

4. இன்சுலின் பயன்படுத்துதல்

மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கொள்வதால் நீரிழி வைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந் தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச் சொல் லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் விரதம் இருக்கலாமா?

நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நீங்கள் விரதம் கடைப் பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள் மருத் துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைக ளையும் மருந்துகளையும் தெரிவிக்க லாம்.

நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்

ங்கள் மருத்துவரிடம் உங்களுக் காக ஒரு உணவு அட்டவணை யைத் தயார் செய்யச் சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக் கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உண வு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.

1. உணவு முறை:

1. சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ- ஹைட் ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைக ளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங் கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்தி விடுங் கள்..

2. கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பி டவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப் பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.

3. கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன் படுத்தவும்.

4. சமையல் முறையை மாற்றி, வேக வைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்க ளைச் சாப்பிடு ங்கள்.

5. கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்த ங்களான நெய், வெண்ணெய், பொறித் தவைகளான பூரி, சமோசா போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். கொழுப் பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைக ளைத் தவிர்க்க வேண்டும்.

6. சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், கேக்கு கள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

7. மீன், கோழி, பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண் டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: