முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூர்ணா வித்தகன், துரோகி, கொடைக்கானல் உள்ளிட்ட சிலத் திரைப்படங் களில் நடித்திருக்கிறார். தற்போது, நடிகர் சக்திக்கு ஜோடியாக நடித்து வரும் ‘படம் பேசும்‘ ஆகும் இத்திரைப்படத்தை ராகவா இயக்குகி றார்.
இதில் நடிப்பது பற்றி பூர்ணா கூறியதாவது: இய க்குனர் ராகவா எனக்கு மெயிலில் இப்படத்தின் கதையை அனுப்பி 2வது ஹீரோயி னாக நடிக்க கேட்டிருந்தார். அந்த கேரக்டரை படித்ததும் வித்தியாசமாக இருந்தது. 2வது ஹீரோயின் பாத்திரமாக இருந்தாலும் நடிக்க சம்மதித்தே ன். இதைவிட ஹீரோயின் வேடம் நன்றாக இருந்தது. அந்த கதா பாத்திரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மனதுக்குள் பிரார் த்தனை செய்தேன். ஷூட்டிங் சென்று சில காட்சிகளில் நடித்தேன். பிறகு இயக்குனர் என்னை அழைத்து, ‘நீங்கள் முதல் ஹீரோயின் வேடத்தி லேயே நடியுங்கள்‘ என்றார். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இது வரை நான் தமிழில் 6 படங்களில் நடித்திருக்கி றேன். எல்லாமே சுமா ராக ஓடிய படங்கள் தான். ஆனால் இந்த படம் எனக்கு ஹிட்டாக அமை யும். இனி எந்த படமாக இருந்தாலும் அதில் வலுவான கதா பாத்தி ரம் இருந்தால் தொடர்ந்து 2வது ஹீரோயினாககூட நடிக்கத் தயார்.