Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

WiFi என்றால் என்ன?

“WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாம ல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட் வொர்க் இணைப்பு(wireless நெட் வொர்க்). இந்த இணைப்பு wired நெட் வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக உள்ளது. phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப் யூட்டர்-ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாக வும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல கணினிகளை இணைக்க அனுமதிக்கிறது

WiFi Hotspots என்றால் என்ன?

WiFi ஹாட்ஸ்பாட் என்பது WiFi ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக் கூடிய குறிபிட்ட பகுதி.ஒரு வயர்லெஸ் ரவுட்டர் கொண்டு WiFi இனைப்பை உங்க ள் கணினியில் செயல்படுத்தி விட்டால், சுமார் 20 மீட்டர் (65 அடி) (உள்புறம் மற்று ம் அதிக அளவு வெளிப்புறங்களில்) WiFi  ஹாட் ஸ்பாட்டாக(access point) இருக்கு ம்.

வயர்லெஸ் நெட்வொர்க் அமைக்க என்ன தேவை?

1. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரிக்கும் ஒரு இயக்க அமைப்பு (Operating system)

2. Broad band (DSL அல்லது கேபிள்) இணைய இணைப்பு.

3. ஒரு கம்பியில்லா திசைவி (wire less router), ஒரு டிஎஸ்எல் மோடம், அல்லது உள்ளமைக்கப்பட்ட (inbuilt) வயர்லெஸ் நெட்வொர்க்கிங் support கேபிள் மோடம்.

4. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரவு அல்லது ஒரு வயர்லெஸ் நெட்வொர்க் adapter உள்ளமைக்கப்பட்ட கணினி.

5. உங்கள் திசைவி அமைப்பு அறிவுறுத்தல் கள் (router setup instructions) ஒரு நகல்.

வயர்லெஸ் நெட்வொர்க் அமைப்பது எப்படி?

1. இணையத்துடன் இணைக்கவும்

2. கம்பியில்லா திசைவி (wireless router)இணைக்கவும்.

3. கம்பியில்லா திசைவி(wireless router) யை configure செய்யவும்.

4. வயர்லெஸ் நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர் கள், பிரிண்டர்கள், மற்றும் பிற சாதனங்களை இணைக்கவும்.

5. இறுதியாக கோப்புகள், அச்சுப்பொறிகள், போன்றவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

******************************************************

கண்காணிப்பு (சி.சி.டி.வி)உங்கள் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ பொருத்த‍ வேண்டுமா? இன்றே தொடர்புகொள்ளுங்கள் 

AANINFOTECH

சிசிடிவி கேமராவை பற்றிய விரிவான தகவல்களுக்கு மேலுள்ள‍ வரியினையோ அல்ல‍து இந்த வரியினை சொடுக்குக (கிளிக் செய்க•)

Leave a Reply