Saturday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாய் சுத்தம்

நம் செரிமான மண்டலத்தின் முதல் உறுப்பும் முக்கிய உறுப்புமாக இருப்பது வாய்தான். சமையல் அறையில் பிரியாணி தயாராகிக் கொண்டிருக்கிறது. ஹாலில் இருக்கு ம் நமக்குப் பிரியாணி வாசனை மூக் கைத் துளைக்கிறது. பிரியாணியைப் பார்த்த தும் நம் மூக்கும் கண்களும் மூளைக்குச் செய்தி அனுப்புகி ன்றன. உடனே, வாயில் உமிழ்நீர் சுரக்கிறது. வயிற்றில் ஹைட் ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. உணவைச் செரிப்பதற்குத் தேவையான அத்தனை நொதிகளும் சுரக்கத் தொடங்குகின்றன. உணவுச் செரி மானத்தின் முதல் கட்டம் வாயில்தான் தொடங்குகிறது. வாய்க்குள் போகும் உணவுப் பொருள்கள், தாடையாலும், பற்களாலும், நாக்காலும் நொறுக்கப்படுகின்றன; அரைக் கப்படுகின்றன. இவ்வாறு அரைக்கப்பட்ட உணவுடன் உமிழ்நீர் கலக்கிறது. உமிழ்நீரில் ‘அமைலேஸ்’ எனும் நொதி உள்ளது. இது உணவில் உள்ள ‘ஸ்டார்ச்’ எனும் மாவுப் பொருளை ‘மால்டோஸ்’ எனும் இரட்டைச் சர்க்கரைப் பொருளாக மாற்றி, உணவுச் செரிமானத்தை ஆரம்பித்து வைக்கிறது. ‘மியூசின்’ எனும் வேதிப்பொருள் உணவைக் கூழாக்குகிறது. இப்படிக் கூழான உணவானது தொண்டைக்குள் தள்ளப்படுகிறது. உணவை அரைப் பது, உமிழ்நீரைச் சுரப்பது, ஸ்டார்ச்சைச் செரி மானம் செய்வது, உணவை விழுங் குவது ஆகியவைதான் வாயின் முக்கியப் பணிகள். இப்பணிகளைச் செய்ய முடியா தபடி சில பிரச்னைகள் வாய்க்கு வரலாம். அவற்றுள் முதன்மையானது, வாய்ப் புண். 
 
நம் அனைவருக்கும் சாதாரணமாக ஏற்படக் கூடியதுதான், வாய்ப் புண். ஆனால், அதைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால் பிரச் னை பெரிதாகி விடும். கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்கு க் குழிப்புண்களாக மாறும். அப்புண்களி ல் வலி உண்டாகும். கழுத்தில் நெறிகட் டும். காய்ச்சல் வரும். நாக்கு எரியும். உண வைச்சரியாகச் சாப்பிட முடியாது.  வாய்ப் புண் வருவதற்கு முக்கியக் காரணம், ஊட்டச்சத்துக் குறைபாடு. இதிலும் குறிப் பாக, இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, வைட்டமின் – B2 மற் றும் B12 சத்து, புரதச் சத்து முதலியவை குறையும்போது ரத்த வெள்ளைய ணுக்கள் குறைந்து, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடும்; ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தி குறைந்து, ரத்த சோகை நோய் ஏற்படும். அப்போது வாய்ப்புண் வரும். அதிகமாகக் கவலை ப்பட்டாலும் வாய்ப் புண் வரும். தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதால் வாய்ப்புண் வருகிறது. கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத் தைக் குத்திப் புண்ணாக்கும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற கிருமிகள் வாயின் உறுப்புகளை ப் பாதிக்கும்போது வாய்ப் புண் வரும். ‘ஆன்டிபயாடிக்’ போன்ற சில மருந்துகள் மற்றும் சில ஒப்பனைப்பொருள்களின் ஒவ் வாமை காரணமாகவும் வாய்ப் புண் வருவதுண்டு. பல் ஈறுகளி ல் ஏற்படுகிற குறைபாடுகளும் வாய்ப்புண்ணுக்கு வழி அமைக்கும். புகைபிடிப்பதாலும் புகையி லைப் பொருள்களைப் பயன்படுத்துவதாலும் வாய்ப்புண் அடிக்கடி வரும். இரைப்பையில் புண் உள் ளோருக்கு அங்குச் சுரக்கும் அதீத அமிலம் படுத்துறங்கு ம் போது உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்து விடும். இதன் விளை வால் தொண்டை மற்றும் வாயில் புண்கள் ஏற்படுவதுண்டு. பற்களுக்குக் ‘கிளிப்’ பொருத் தப்படும்போது ஆரம்பத்தில் வாயில் புண்கள் உண்டாகும். செயற் கைப் பற்கள் சரியாகப் பொருந்தவில் லை என்றாலும் அடிக்கடி வாயில் புண்கள் வருவதுண்டு. உடலில் வைட்டமின் – B2 பற்றாக்குறை ஏற்படும்போது முத லில் பாதிப்படைவது, வாதான். அதிலு ம் குறிப்பாக உதடு, நாக்கு, வாய் ஓரங் களில் புண்கள் (Angular stomatitis) உண்டாகும். நாக்கு சிவந்து வீங்கும். நாக்கு பிசு பிசுப்பாக இருக்கும். இந்த நிலைமையில் சத்துள்ள உண வுகளைச் சாப்பிட்டு அல்லது வைட் டமின்- B2 கலந்த மருந்துகளைச் சாப்பி ட்டு இந்தப் பற்றாக் குறையைச் சரி செய் யவில்லை என்றால், உதட்டில் வெடிப் புகள் உண்டாகும். உதடும் நாக்கும் செந் நிறமாக மாறும். உதட்டின் மேற்புறம் வெடிப்புகளும் புண்களும் தோன்றும். 
 
இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் குறைபாடுகளைச் சரி செய்தா ல், சத்துக்குறைவு காரணமாக வரும் வாய்ப்புண்ணை நிச்சயம் தவிர்க்கலாம். குறிப்பாகச் சொன்னால் வெல்ல ம், பேரீச்சை, தேன், பச்சைநிறக் காய் கறிகள், கீரைகள், பச்சைப்பட்டாணி, சோயா பீன்ஸ், நிலக்கடலை, இறைச்சி ஆகியவற்றில் இரும்பு ச்சத்து மிகுந்துள்ளது. பால், வெண்ணெய், நெய் , பாலாடைக்கட்டி, கைக்குத்தல் அரிசி, தீட்டப் படாத கோதுமை, கேழ்வரகு போன்றவ ற்றில் வைட்டமின் – B2 மிக அதிகம். இறைச்சி, மீன், முட்டை, ஈரல் ஆகிய அசைவ உணவுகளில் வைட்டமின்- B12 அதிக அளவில் உள் ளது. முளைகட்டிய பயறுகள், பருப்பு வகை கள், பால் பொருள்கள் ஆகியவற்றில் புரதச்சத்து அதிகமுள்ளது. இந்த உண வுகளில் ஒன்று மாற்றி ஒன்றைத் தினமும் சாப்பிட்டால் வாய்ப்புண் வரு வதற்கு வாய்ப்பு குறையும். வாய்ப் புண் ணுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். நாள்பட்ட வாய் ப்புண்கள் புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்ற வை வாயில் நாற்றம் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணங்கள். பற்களில் சொத்தை இருந்தாலும், பல் ஈறுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வாய்ப்புண் இருந்தாலும் துர்நாற்றம் வரும். பற் களுக்கு இடையில் இடைவெளி அதி கமுள்ள வர்களுக்கு உணவுத்துகள் கள் பற்களுக்கு இடையில் சொருகிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் ‘இன்டர்டென்டல்’ பல்துலக் கியைப் பயன்படுத்தினால் உணவுத் துகள்கள் வெளியில் வந்துவி டும். தரமான ‘மவுத்வாஷ்’ கொண்டு வாயைக் கொப்பளித்தால், வாய்நாற்றம் மறையும். 
 
* உணவில் ஊட்டச் சத்துகள் உள்ள உணவுக ளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். 

 * வாய்சுத்தம் காத்தால் வாய்ப்புண் வருவதை நிச்சயம் தடுக்கலாம். சாப்பிட்டு முடிந்ததும் நன் றாக வாயைக் கொப்பளித்துச் சுத்தப்படுத்த வே ண்டும்.

* புகை பிடிக்கக்கூடாது. புகையிலை, வெற்றி லை போடக்கூடாது. பான்மசாலா ஆகாது.

* தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து உதடும் வாயும் வற ண்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுங் கள்.

*செயற்கைப்பல் செட்டினால் பிரச்னை என்றால் உடனே அதை மாற்றி விட வேண்டும்.

* மருத்துவரின் பரிந்துரை இல்லாம ல் நீங்களாகவே மருந்து, மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிரு ங்கள்.

* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று, ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

இது விதை2விருட்சம இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply