பிரசாந்த் ஜோடியாக வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காவேரி. தொடர்ந்து சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடி த்து வந்தவர், தற்போது சின்னத்திரையில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக் கிறார். இந்நிலையில் நடிகை காவேரிக்கு ம், கேரளாவை சேர்ந்த ராகேஷ் என்பவரு க்கும் காதல் மலர்ந்துள்ளது. ராகேஷின் சொந்த ஊர் கேரளா மாநிலம் உடுப்பி. இவர் சென்னை வேளச்சேரியில் பார்மெசி ஏஜென் டாக உள்ளார். தொழில் ரீதியாக காவேரி யின் அண்ணன் மார்க் மூலம் ராகேஷ்க்கு, காவேரியிடம் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப் படுகிறது. இதனையடுத்து காவேரி-ராகேஷ் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன் படி இன்று(07.07.13) விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தில் உள்ள பிரசித்திபெற்ற அர்த்த நாரீஸ்வரர் கோயிலில் இருவரு ம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். காவேரிக்கு தெரி ந்த விழுப்புரத்தை சேர்ந்த வக்கீ ல் செந்தில் குமார் என்பவரது உதவியுடனும், ராகேஷின் நண்பர் ஒருவரது உதவியுடனும் இந்த திருமணம் நடந்துள்ளது.
தான் ஏன் வீட்டை விட்டு வந்து ரகசியமாக, கோயிலில் திருமணம் செய்து கொண்டேன் என்ற விஷயத்தை நடிகை காவேரி கூற மறுத்துவிட்டார்.
நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி
What can we do. She is crossing more than 35 years old.