உலகெங்கும், குறிப்பாக நம் இந்தியாவை மிக வாட்டும் ஒரு நோய் அனீமியா என அழைக்கப்படும் `ரத்தசோகை’. இந்த சோ
கை என்னும் சொல்லியே ஒரு சோகம் ஒளிந்திருப்பதை கவனிக்கவும். வளம் குறைந்த நலிந்த சிவப்பு அணுக்கள் தேவையான அளவு பிராண வாயுவை திசுக்களுக்கு கொண்டு செல்ல முடியாத ஒரு சோகமே அனீமியா எனப்படும்.
இதன் அறிகுறிகள் என்னென்ன?
தளர்ச்சி, தோல் வெளுத்துப்போதல், இதய துடிப்பு அதிகமாதல், அடிக்கடி மூச்சு வாங்குதல், தலை சுற்றல், தலைவலி, கை,கால்
ஜில்லிட்டுப் போதல். நோயின் கடுமை யைப் பொருத்து மேற்கூறிய அறிகுறி களின் தாக்கம் அமையும். மேற்கூறிய வற்றுள் ஏதேனும், தொடர்ந்து இருந்து வந்தால் டாக்டரை உடனே ஆலோ சிப்பது மிகவும் முக்கியம்.
ஒரு எளிய ரத்தப் பரிசோதனை மூலம் இதை உடனே கண்டு பிடி த்து சிகிச்சை அளிக்க முடியும். ரத்தத்தில் இருக்கும் ப்ளாஸ்மா, சிவப்பு, வெள்ளை அணுக்கள், சத்துப் பொ
ருள்கள், வைட்டமின் கள் பற்றி பார்த்தோம். சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையான அல்லது ஹீமோ க்ளோபினின் அளவோ குறைவதால் அனீமியா ஏற்படுகி றது.

இவை உற்பத்தியாகும் இடம் எலும்பு மஜ்ஜை. வலு குறைந்த சிவப்பணு க்கள் மரிக்கையில், மேலும் மேலும் இதுபோன்ற செல்களையே உடலின் எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டு, நோய் கடுமையாகிறது. (உரமிடாத நிலத்
தில் தொடர்ந்து பயிரிடும் போது, அடு த்து வரும் பயிர்கள் வளம் குறைந்து விளைவது போல!) இவைகளால் அதிக அளவில் பிராணவாயுவைச் சுமக்க முடியாததால் திசுக்கள் வலு விழந்து சோர்வு ஏற்படுகிறது. இப் போது அனீமியாவின் வகைகளைப் பார்ப்போம்.
1. இரும்புச்சத்து குறைவால் வரும் ரத்த சோகை:
மாதவிலக்கு அதிகமாகப் போகும் பெண்கள், குடல் புண் எனச்
சொல்லப்படும் அல்ஸர் நோய், குடல் புற்றுநோய் போன்ற நோய்க ளால் ரத்தம் உடலில் இருந்து வீணாகும் பொது இந்த வகை ரத்த சோகை ஏற்படும். இரும்புசத்து குறைந்த உணவாலும் ரத்த சோகை ஏற்படும். கர்பமுற்ற காலத்தில் வள ரும் கருவும் தாயின் ரத்தத்தில் இரு ந்து இரும்புச்சத்தை எடுத்து கொள் வதாலும் இது வரும்.
2. வைட்டமின் குறைவால் வரும் அனீமியா:
போலேட் பி.12 வைட்டமின்கள் வலுவான சிவப்பு அணுக்கள் உரு வாகத் தேவையா னவை. உணவில் மூலமே இவை நமக்கு கிடை க்கின்றன. சிறுகுடலில் உறிஞ்சப் படும் இந்த வைட்டமின்கள், குடல் நோ யால் அவ்வாறு நிகழாமல், இவ்வகை அனீமியா வருகி றது.
3. நீண்டகால நோய்களால் வரும் அனீமியா:
4. ஏப்ளாஸ்டிக் அனீமியா:
5. எலும்பு மஜ்ஜை நோயால் வரும் அனீமியா:
6. ஹிமோலைக் அனீமியா:
7. சிக்கில் செல் அனீமியா:
இன்னும் பல வகையான அனீமியாக்கள் இருக்கின்றன. இவை மிக வும் அரிதானதால் சொல்லாமல் விடுகிறேன் என்கிறார் டாக்டர் எம்.எஸ்.திவ்யா.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
Fine your posting good things