Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போதும் இந்த துயரம்! (தலையங்கம்)

ஜூலை 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்

இயற்கையின் கொலைவெறி கொடூரத் தால் உத்தரகாண்ட் மாநிலத்தின் மலை ப்பகுதிகள் உருவமிழந்து உடைந்து போ யுள்ள‍ன• உயிரிழந்தவர்களின் எண்ணி க்கை ஆயிரங்களைத் தாண்டியிருக்கிற து. தொலைந்தவர்களைத் தேடுவது தொ டர்கதையாகி யிருக்கிறது. உத்ரதாண்ட வமாடிய மழையின் மரணப் படியில் மாண்டுபோன அனைத்து மனித உயிர்க ளுக்கும் நம் கனத்த‍ இதயத்திலிருந்து அஞ்சலி செலுத்துவோம்.

குளிரையும் மழையையும் பனிப் பொழிவையும்மீறி, உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு பல்லா யிரம் யாத்ரிகர்களை உயிருடன் காப்பாற்றிய நம் இந்திய மற்றும் திபெத்திய இராணுவ வீரர்களு க்கு ராயல் சல்யூட். சாதி மத இன மொழி கடந்த‍து மனிதநேயம் என்ப தை மரத்துப்போன மகா ஜனங்களின் மண்டையிலடித்தா ற் போல் செயலாற்றி வருகிறவர் கள் இருக்கும் திசை நோக்கி இரு கரம் கூப்பித் தொழத் தோன்று கிறது.

இந்த நேரத்திலும் கூட பிணக்குவியலின் மீது நின்றபடி இறப்பை யும் இழப்பையும், மொழி, மாநிலம், கட்சி என்று அரசியலாக்குகிற அரசியல் கட்சிகளைப் பார்க்கவே அவமானமாயிருக்கிறது. இவர்க ளைப் பற்றி சிந்திப்பதையே இனி நிறுத்திக்கொள்வோம்.

ஆண்டவனைத் தேடிச்சென்றவர்கள் ஆண்டவனிடமே சென்றுவிட் ட‍ அவலம் எப்ப‍டி நிகழ்ந்தது? இயற்கையே இறைவன் என்று வழி பட்ட‍ இந்திய தேசத்தில் இயற்கை யே எமனாகியப் போனது என்ன‍ நியாயம்? இந்தியாவின் இந்தத்  துயரம் மனிதனின் தவறா? அல்ல‍து தெய்வத்தின் தண்டனையா? என்ற கேள்விகள் நம்மை துளைத் தெடுக்கின்றன•

மலைமுகடுகளிலும், நதியோரங் களிலும், மரங்களை வெட்டி வீடு களை வளர்த்ததும். பருவமழை காலத்தில் அளவுக்கதிகமாக பயணிகளுக்கு யாத்திரை அனுமதி வழங்கியதும் பேரிடர் மையம் ஒன்று இருப்பையே இந்த இடி பாடுக ளுக்கிடையே தான் கண்டு பிடித்ததும் காரணம் என்கிறார் கள்.

ஆண்டுக்கு இவ்வ‍ளவு பக்தர்க ளுக்கு மட்டுமே அனுமதி என்ற வரம்பு வேண்டும். மலைப்பகுதிக ளில் வீடுகள் கட்டினால், மரண தண்டனை வழங்க வேண்டும். பேரிடர் மையம் வேகத்துடன் செய லாற்ற‍ உடனடி வழிகாண வேண் டும். இயற்கைச் சீற்ற‍த்தை எதிர் கொள்ளும் தகவல் தொழில் நுட்பத்தை மலைப் பிரதேசங்களு க்கு முன்னுரிமை தந்து வழங்க வேண்டும். அதைவிட, இருக்குமிட த்தி லேயே இறைவனைக் காணும் மனப்பக்குவம் மக்க‍ளிடையே வளர வேண்டும் அப்போதுதான் தேசத்தின் துயரம் துடைத்தெறியப் படும்.

இயற்கையை மதிப்போம்! இன்னுயிர் காப்போம்!!

இந்த வைர வரிகளின் உரிமையாளர் 
உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை) => கைபேசி 94440 11105

One Comment

  • Sundara Raju

    Well written Article. General public and Govt should take serious steps to prevent such tragedies in future. But after some time, every body forgets and the same is repeated again and again.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: