Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களிடம் பழகும் பெண்களே!

ஆண்களிடம் பழகும் பெண்களே, நீங்கள் கவனிக்க வேண்டியவை அல்ல‍து தவிர்க் க‍ வேண்டியதை சிலவற்றை பார்ப்போம்.

ஒரு ஆணிடம் நீங்கள் பேசும்போது, அவன து கண்களையே பார்த்துப் பேசுங்கள், அப் போதுதான் அவனது பார்வையை வைத்து அந்த ஆண் எப்ப‍டிப்பட்ட‍வன் என்பதை அறி ய முடியும். அந்த ஆணிடம் நீங்கள் எப்போ து பேசினாலும் எங்கள் கண்களை யோ அல்ல‍து வாயையோ மட்டுமே பார்த்து பேசினால், அந்த ஆண் ஓரளவு நம்பிக்கைக்குரியவனே! அதை வி டுத்து, உங்களது கூந்தல் அழகு, உங் களது கழுத்துக்கு கீழான பகுதி, மற் றும் இதர அந்தர ங்கப் பகுதிகளை பார்த்துக் கொண்டு பேசுபவனாக இருந்தால், அவனிடம் பழகுவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்க ள். பேச அல்ல‍து பழகவேண்டிய சூழல் ஏற்பட் டாலும் ஓரிரு வார்த்தைகளோடு நிறுத்திக்கொள்வது நல்ல‍து.

உணவு விடுதியில் நீங்கள் சாப்பிடுவதற்கு ஆகும் பணத்தை, ஒவ் வொரு முறையும் அந்த ஆணே, கொடுக்க‍ முன் வந்தால், அதை நீங்கள் தடுத்து மறுத்துவிடுங்கள். நீங்கள் சாப்பிட்ட‍தற்கு ஆன தொகை யை நீங்களே செலுத்துங்கள்.

நீங்கள் பழகும் அந்த ஆண், வலிய வந்து, நான் வெளிநாடு போய்வ ந் தேன். உங்களுக்காக இந்த விலையு யர்ந்த பொருளை தேடிக் கண்டு பிடி த்து வாங்கி வந்தேன். எடுத்துக் கொ ள்ளுங்கள் என்று கொடுத்தால், அதை வாங்காமல் நாகரீகமாக தவிர்த்துவிடுங்கள்.

நீங்கள் இருசக்க‍ர வாகனம் வைத்திரு ப்ப‍வராக இருந்தால், அந்த வண்டி பஞ்சரோ அல்ல‍து வேறு ஏதேனும் பழுதோ ஏற்பட்டால், நீங் கள் பழகும் அந்த ஆண், வலி வந்து வாங்க உங்களை நானே உங்க வீட்டில் டிராப் செய்கிறேன். நாளை ஒரு மெக்கானிக் கை கூட்டி வந்து, உங்க வண்டியை சரிபண்ணிக்க‍லாம் என்று சொன்னால், அந்த உதவியை நோ தேங் க்ஸ் என்று சொல்லி நாகரீகமாக மறுத்து விட்டு, உங்களது கணவ ருக்கோ அல்ல‍து உங்கள் அப்பாவையோ அல்ல‍து அண்ண‍ன் தம்பிக்கோ போன் செய்து அவர்களை வரச்சொல்லு ங்கள். அல்ல‍து  ஒரு ஆட்டோவையோ அல்ல‍து ஒரு கால் டாக்ஸி யை பிடித்து உங்கள் வீட்டுச்செல்லுங்கள். ஒரு நாளும் அவர் களை நம்பி செல்லாதீர்கள்.

மேடம் எனக்கு பிறந்தநாள் வருது அதுக்கு உங்களுக்கு உங்க வீட்டு க்கே வந்து பத்திரிக்கை வைக்க‍ னும் உங்க வீட்டோட விலாசத் தை கொடுங்க! உங்க வீட்டுக்கே வந்து பத்திரிகை வைத்து, நீங்களும் உங்க கணவரையும் அல்ல‍து குடும்பத்தா ரையும் அழைத்து வாங்கள் என்று சொல்லி, உங்கள் வீட்டு விலாசம் கேட்டால், அதை தயவுசெய்து, உங்களது வீட்டு முகவரியை கொடு க்காதீர்கள், பரவாயில்லை சார், இங்கேயே கொடுங்க, ஆபிஸ்ல எல்லோரும் வரும்போது நானும் கட் டாயம் வரேன். என்று சொல்லி மறுத்து விடு ங்கள்.

* ஆண்கள், உங்களிடம் பேசும் போ து தனது மனைவியை உங்களோ டு ஒப்பிட்டு பேசுவதையோ அல்ல து அவளுக்கு ஒண்ணுமே தெரியா து என்று மதிப்பை குறைத்துப் பேசு வதையோ அனுமதிக்காதீர்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்கா தீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத் தை ஏற்படுத்த தூண்டும்.

* உங்கள்வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்திற் காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில் லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணை யில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.

* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக் காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்க ள். அழும்பெண்களை சுலபமாக ஆண் கள் திசை திருப் பிவிடுகிறார்கள்.

* ஆண் எந்நோக்கத்திற்காக உங்க ளிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளி லும், கண்களிலும் இருந்து பெண்க ள் புரிந்துகொள்ளவேண்டும். அதை ப்பொறுத்தே ஒரு பெண், ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத் தில் வைக்கலாம் என்று வரைமுறை ப்படுத்திக் கொள்ள வேண்டு ம்.

* அலுவலகத்தில் உடன் வேலைசெய்யும் ஆண்களை தொட்டு பேசாதீர்கள். அதே போல் உங்களையும் தொட்டு பேச அனும திக்காதீர்கள். இதை பயன்படுத்தி ஆண்க ள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியு ள்ளது.

முதல் 5 பத்திகள் விதை2விருட்சம் இணையத்திற்கு உரிமையானவை 
அடுத்த‍ 6 பத்திகள் விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply