Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பருவப்பெண்களே! உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

Poly Cystic Ovarian Syndrome (PCOS) என்றால் என்ன?

ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களி ன் சூலகம். இதுதான் முட்டைகளை உரு வாக்கி அந்த முட்டைகள் கருக்கட்டியே குழந்தைகள் உருவா கின்றன.

cyst எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டிகள், poly என்பது பல என்பதைக் குறிக்கும்.

ஆக ஒரு பெண்ணின் சூலகத்திலே பல திரவக் கட்டிகளின் உருவாக்கமே poly cystic ovarian syndrome எனப்படுகிறது.

இந்நோயானது பெண்களிலே பொதுவான ஒரு நோயாகும். நிறையப் பெண்களுக்கு இந்த நோய் இருந்தாலும் அது எல்லா பெண்களி லும்தன்னை வெளிக் காட்டிக் கொள்வதில் லை.

இந்த திரவக் கட்டிகளை கொ ண்ட சூலகங்கள் அசாதாரண மாக ஹோர்மொன்களை சுரப் பதன் மூலமே ஒரு பெண்ணுக்கு பிரச்சி னைகளைக் கொடுக்கிறது

இந்த நோயின் அறிகுறிகள் எவை?

1.அளவுக்கதிகமான பரு( முகப் பரு)

2.உடற் பருமன் அதிகரித்தல்.

3.அசாதாரண இடங்களிலே பெண்களுக்கு மயிர் வளர்தல், அதாவது முகம், மார்பு, தொடை போன்ற இடங்களில் மயிர் வளர்தல்.

4.ஒழுங்கற்ற மாதவிடாய்

5.மலட்டுத் தன்மையை ஏற்படுத்தல்.

இவை எல்லாம், எல்லா பாதிக்கப்பட்ட பெண்களிலேயும் இருக்கும் என்றில் லை. இந்த‌ நோய் இருக்கும்போதே பல பிள்ளைகளைப் பெற்றுவாழ்பவர் கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட பதினைந்து பெண்களுக்கு ஒரு பெண் இந்த நோயினா ல் பாதிக்கப்பட்டவளாக இருக்கிறார்கள்.

மற்றும் இந்த நோயினால் பாதி க்கப்பட்ட பெண்களுக்கு சீனியை க் கட்டுப்படுத்தும் இன்சுலின் என்ற ஹோர்மொனின் திறன் குறைவதா ல் அவர்கள்நீரழிவு நோயினால் பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங் கள் அதிகரிக்கி ன்றன.

இப்போது இப்பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக நிறைய மருத்துவ வசதிகள் வந்து விட் டன. அதிலும் எவ்வளவு விரைவாக மருந்து ஆரம்பிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன்பின் விளை வுகள்தீர்மானிக்கப் படுகி ன்றன.

ஆகவே, பருவப்பெண்களே!

1. 14 வயதாகியும் மாதவிடாய் ஆரம்பி க்கா விட்டால்.

2.மார்பு , முகம் போன்ற இடங்களிலே மயிர் வளர்ந்தால்.

3. ஒரு வருடத்திலே எட்டுக்கும் குறை வான மாதவிடாய்கள் தான் ஏற்படு கிறது என்றால்.

4.அளவுக்கு அதிகமான கட்டுப் படுத்த முடியாத முகப் பரு ஏற்பட்டால்.

5.உங்கள் கழுத்து மற்றும் கமக்கட்டுப் பகுதிகளிலே கறுப்புப் படிவுகள் காணப்பட்டால்.

6. அதிக தாகம், அதிக சிறுநீர் கழித்தல் , அதிக பசி போன்ற நீரழிவு நோய்க் கான குணங் குறிகள் ஏற்பட்டால்.

7.உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித் தால்.

மேற்காணும் அறிகுறிகளில் உங்களுக்கு ஏதாவது இருந்தால்,  உடனே மருத்துவரை, அணுகி அவர் தரும் ஆலோசனைகளையும் அதற்கான சிகிச்சைக ளை எடுத்துக் கொள்ளுங்கள்

நன்றி – சுலாக்ஸி

2 Comments

Leave a Reply