அவளுக்கு சதுரங்க சேனா நாயிகா என்றொரு திருநாமம் உண்டு.
அதாவது அம்பிகையின் நால் வகைப் படைகளுக்கும் சேனாதி பதியாகத் திகழ்பவள் என்று அர்த் தம். இவளை, தண்டினி என்றும் சொல்வர். சப்த மாதர்களில் ஒரு வரான இவள்…ஸ்ரீவாராஹி! சிறந்த வரப்பிரசாதி.
நம் மனத்துள் எண்ணங்கள் தோன் றினால் மட்டும் போதாது. அது காரி யமாக, செயலாக மாறவேண்டும் அல்லவா? அப்படி எண்ணத் தைக் காரியமாக மாற்றும் சக்திதான், ஸ்ரீவாராஹி தேவி. ஒட்டு மொத்த பிரபஞ்ச சக்தியைக் குறிப்பவளுக்கு நம் மனத்தை அறிந்து கொள் வதெல்லாம் எம்மாத்திரம்?
ஸ்ரீவாராஹிக்கு உகந்த சிவப்பு, நீலம் மற்றும் பச்சை புடவையைச் சார்த்தி வழிபடுவது, கூடுதல் பலனைத் தரும்.
தேஹி மே சகலான் காமான் வாராஹி ஜகதீஸ்வரி
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:
இது, ஸ்ரீவாராஹியின் மூலமந்திரம். இதனை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மனம் ஒரு மித்து, முடிந்தவரைக்கும் சொல்லி வழிபட்டால், வீட்டில் உள்ள பிரச்னைகள் காணாது போகும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழலாம்!
ஸ்ரீவாராஹி தாயே… உன் திருவடி சரணம்!
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!