Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ந‌மது சமுதாயத்தின் அறிவின் நிலை எப்ப‍டி உள்ள‍து?

ஒரு எஜமான் குதிரைமேல் போனான். ஆள் ஒருவன் பாதுகாப்புக்கு ப் பின்னே போனான். குதிரைமீது உள்ள மூட்டை ஒன்று விழுந்து விட்டது; அது எஜ மானனுக்குத் தெரியாது. ஆனால் வேலை யாள் பார்த்தும் எடுக்காமல் வந்து விட்டா ன்.

எஜமான் கேட்டான் எங்கே மூட்டை என்று, எஜமான் மூட்டை அங்கேயே விழுந்து விட் டதே என்றான். அட மடையா ஏண்டா விட்டு விட்டு வந்தாய்? ஏன் எடுத்துவரவில்லை? என்றான் எஜமான். நீங்கள்தான் எடுத்து வரும் படி சொல்லவில்லையே என்று வேலையாள் சொன்னான். மடை யா இனி எது விழுந்தாலும் எடுத்து  என்றான். வேலையாளும் சரி ஆகட்டுங்க என்றான்.

மற்றொரு தடவை எஜமான் குதிரையில் போகும்போது குதிரை லத்தி போட்டது. உட னே வேலையாள் அவைகளை யெல்லாம் வேட்டியில் மூட்டைகட்டிக்கொண்டு போய் எஜமான்! கீழே விழுந்த இவைகளை எல்லாம் கொண்டு வந்து இருக்கின்றேன் என்றான்.

அதற்கு எஜமானன் ஏண்டா மடப் பயலே இப்படி இதை யெல்லாம் கட்டிக் கொ ண்டு வந்து இருக்கின்றாய்? என் றான். அதற்கு அவன் ஏனு ங்க எஜமான் நீங்கள் தானே விழுகின்ற எதையும் விடா மல் எடுத்து வாடா என்று கூறினீர்கள் என்றா ன்.

அதற்கு எஜமானன் மூட்டை விழுந்தத ற்குச் சொன்னால் அதற்காக இப்படியா செய்வது போடா மடையா என்று கூறி னான்.

அவன் என்ன பண்ணுவான் அவன் புத்தி அப்படி. அவன் புத்தி வளர்ச்சி யடையும்படியான பக்குவம் அவ னுக்கு அளிக்கப்படவில்லை.

அதுபோலத்தான் இன்று நமது சமுதாயத்தின் அறிவின் நிலையும் உள்ளது.

ந‌மது சமுதாயத்தின் அறிவின் நிலை எப்ப‍டி உள்ள‍து என்பதை, சுட்டிக்காட்டி  தந்தை பெரியார் அவர்கள்  சொன்ன கதை இது

– தந்தை பெரியார் (விடுதலை)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: