Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களை எந்தெந்த காலகட்டத்தில் எந்த விதமான பல் பிரச்னைகள் தாக்கும்?

பல்போனாலபோவது சொல் மட்டு மில்லை . அழகு, ஆரோக்கியம், இளமைத் தோற்றம். இப்படி இன்னும் எத்தனை யோவும் தான். பெண்களை  அதிகம் பாதிக்கிற பல்வேறு பிரச்னை களில் பல் தொ டர்பானவையும் விதி விலக்கல்ல. பெண்களை எந்தெந்த கால கட்டத்தில் எந்தவிதமான பல்பிரச் னைகள்  தாக்கும்? தீர்வுகள், முன்னெச்சரி க்கை விஷயங்கள் என் னென்ன? எல்லாம் விளக்குகிறார் பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவ நிபுணர்  எஸ்.எம். பாலாஜி.

பூப்பெய்தும் பருவத்திலே…

ஹார்மோன்களின் அளவு அதிக மாக இருப்பதால் இந்தப்பருவத்தில், பெண் களின் ஈறுகள் மிக மென்மையாக மாறி, ஈறு தொடர்பான நோய்கள்  வரலாம். உணவிலுள்ள பாக்டீரியா தாக்கத்தின் காரணமாக, ஈறுகள் வீங்கும். பல் மருத்துவரிடம் அதை முறையாக சுத்தம் செய்துகொள்வ தோடு,  தினம் சரியான முறையில் பிரஷ் செய்வதும், ஃபிளாஸ் செய்வ தும் அவசியம். கவனிக்காமல் விட் டால், பற்க ளைச்சுற்றியுள்ள எலும்புகளும் திசுக்களும் பாதிக்கப் படலாம்.
.
மாத விலக்கினிலே…
.
ஈறு அழற்சி எனப்படுகிற பிரச்னை இந்நாள்களில் மிகவும் சகஜம். ஈறுகள் சிவந்து, வீங்கி, மென்மையா கி இருக்கும். புரொஜெஸ்ட்ரோன் என ப்படுகிற ஹார்மோனின் அதீத சுரப்பு தான் இதற்குக் காரணம். சில பெண் கள் மாதவிலக்குக்கு 3-4 நாள்களுக்கு முன், ஈறுகளில் ரத்தம் கசிவதை உண ர்வார்கள். க்ளிப் அணிந்திருந்தாலோ, ஞானப்பல் முளைக்கத் தொடங்கியிரு ந்தாலோ இந்த இம்சை இன்னும் அதி கமாக இருக்கும். இது மாத விலக்குக் கு முன்பு வந்து, அது முடிந்ததும், தானாகச் சரியாகி விடு ம். முறையான பல் பராமரிப்பு தான் இதற்கும் அறிவுறு த்தப்படும்.  தேவைப்பட்டால், பல் மருத்துவரிடம் கேட்டு, ஆன்ட்டி மைக்ரோபய ல் மவுத்வாஷ் உபயோகிக்க லாம்.
.
கர்ப காலத்திலே…

.

ஹார்மோன் மாற்றங்களினால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய ஈறு அழற்சி பிரச்னை மிகவும் சகஜ ம். இது 2வது, 3வது மாதத்தில் தொ டங்கி, 8வது  மாதத்தில் தீவிரமாகி, 9வது மாதம் குறைய ஆரம்பிக்கும். இதற்கு கர்ப்பகால ஈறு அழற்சி என் று பெயர்.  ஈறுகளில் வீக்கம், சிவந் து, ரத்தம் வடிதல் போன்றவை இத ன் அறிகுறிகள். மற்ற ஈறு அழற்சி மாதிரிதான்  இதுவும். கவனிக்கப்படாவிட்டால், பற்களைச் சுற்றியு ள்ள எலும்புகளை பாதித்து, திசு இழப்புக்கு வித்திடும். அரிதாக சில நேரங்களில் வீங்கிய ஈறு திசுக் களானது, அந்த இடத்தில் கட்டிக ளைப்போன்று உருவாக்கலாம். அவை புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதால் பயப்படத் தேவையில் லை. அந்தக் கட் டிகள் வலியின்றி இருக்கும். சில வே ளைகளில் உண வுத் துகள்கள் அதன் அடியில் புகு ந்து கொண்டு, வலியை ஏற்ப டுத்த லாம். பிரசவத்துக்குப் பிறகு இது மெல்லக் குறையத் தொடங்குமே தவிர, முற்றிலும் சரி யாகாது. எனவே, பிரசவத்துக்குப் பிறகு, முழுமையான பல் பரி சோதனை அவசியம்.

.

முதல் 3 மற்றும் கடைசி 3 மாத ங்களில் பல் சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும். அவசர சிகிச் சை இல்லை என்கிற பட்ச த்தில், பிரசவமாகும் வரை  அதைத் தள்ளிப் போடலாம். நீங்கள் எடுத் துக் கொண்டிருக் கும் மருந்துகள், அவற்றின் அளவுகள் பற்றி பல் மருத்துவ ரிடம் சொல்ல வேண்டு ம்.  டெட்ராசைக்ளின் போன்ற சில மருந்து கள், கருவிலுள்ள குழந் தையின் பற்களைப் பாதிக்கும் என்பதால், அவை கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட  வேண்டும்.  எக்ஸ்ரே எடுப்பதும் தவிர்க்கப்பட வேண் டும்.

மசக்கை அதிகமுள்ள பெண்கள், அடிக் கடி வாயைக் கொப்பளிக்க வேண்டியது அவசியம். இல்லா விட்டால் வாந்தி எடுப்ப தால் உரு வாகும் ஒருவித  அமிலச்சுரப்பின் காரணமாக, பற்கள் பெரிய அள வில் பாதிக்கப்படலாம். பற்பசை கூட உபயோகிக்க முடியாத அள வு மசக்கை தீவிரமாக இருந்தால்,  மருத்துவரிடம் கேட்டு, சுவை யற்ற பற்பசை வாங்கி உபயோகிக்க லாம்.
.
கருத்தடை மாத்திரைகளிலே…
.
கருத்தடை மாத்திரைகளில் உள்ள ஹார்மோன்கள், பெண்களின் உடலில் புரொஜெஸ்ட்ரோன் அள வை அதிகரிக்கும். அதன் விளை வால் சின்னச் சின்ன  விஷயங்க ளால்கூட ஈறுகள் வீங்கி, ரத்தம் கசியும். கருத்தடை மாத்திரைகள் உண்டு பண்ணும் இந்தப் பக்க விளைவுகளைக் குறைக்க மருந்து கள்  உள்ளன. கருத்தடை மாத்தி ரைகள் எடுத்துக்கொள்வோருக்கு, பல் நீக்கிய பிறகு அந்தப் புண் ஆறுவதிலும் தாமதம் இருக்கும். அதை பல் மருத்துவரிடம்  சிகிச்சைக்குச் செல்லும்போதே சொல்ல வேண்டும்.
.
மெனோபாஸ் பருவத்திலே…

.

இந்தக் காலத்திலும் ஹார்மோன் மாற்றங்களின் பாதிப்பு தொடரு ம். ஈஸ்ட்ரோஜென் குறைபாடு காரண மாக, பற்களைத் தாங்கிப் பிடிக்கிற எலும்பு  பலமிழக்கும். பற்கள் விழு ம்.

.

மெனோபாஸ் காலத்தில் இருக்கிற பெண்களுக்கு…

.

உமிழ்நீர் சுரப்பு குறைந்து, வாய் உலர்ந்து, எரிச்சல் இருக்கும். பல் இழப்பு அதிகரிக்கும். அசாதாரண மான ருசி உணர்வு இருக்கும். ஈறு கள் வீங்கி, வலி  மற்றும் ரத்தக்கசி வுடன் இருக்கும். வாய் துர்நாற்றமு ம், பற்களுக்கு இடையில் சீழவடித லும் இருக்கும். தாடைப்பகுதியில் உள்ள தாதுக்களின் அடர்த்தி குறை ந்து, அந்தப் பகுதி எலும்புகள் பலமி ழக்கும். பல் மருத்துவரை அணுகி, அவசியமான சோதனைகளை மே ற்கொள்வதுடன், அவரது  அறிவுரையின் பேரில் தேவைப்பட்டால், தகுந்த நிபுணரிடம் ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபியும் எடுத் துக் கொள்ளலாம்.
.
இப்படித்தான் பல் துலக்க வேண்டும்…

.

1 முன் பற்களை கீழ் அசைவில், 45 டிகிரியில் பிரஷ்ஷை ஏந்தி, பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்ய வேண்டும்.

2 பின் பற்களை மெதுவாக மேலும், கீழுமாக பிரஷ் செய்ய வேண்டும்.

3 கீழ் கடவாய் பற்களை உள்புறமாக மேல், கீழ் அசைவோடு சுத்தம் செய்ய வேண்டும்.

4 மேல் மற்றும் கீழ் முன் பற்களை உள்ளிருந்து, வெளியே பிரஷ் செய்ய வேண்டும்.

5 கடவாய் பற்களின் மேல் பகுதியை முன்பின் அசைவோடு மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும்.

6 இறுதியாக நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுப் பொரு ள்களை அகற்ற மற்றும் துர்நாற் றம் ஏற்படாமலிருக்க பிரஷ் செய் ய வேண்டும்.

.

விளம்பரத்தில் காட்டுகிற மாதிரி பிரஷ் முழுக்க நிறைய பேஸ்ட் வைத்து பல் துலக்க வேண்டிய தில்லை. வேர்க்கடலை அளவுக்கு பேஸ்ட்  இருந்தாலே போதும். பேஸ்ட்டானது, பிரஷ்ஷின் உள் ளே இறங்கும்படி, அதன் அமைப்பு இருக்க வேண்டும். பல் துலக்கி முடித்ததும், விரல் நுனிகளால்,  ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்து விடலாம்.பற்களை மித மான அழுத்தம் கொடுத்துத் தேய் த்தால் போதும். ஆக்ரோஷமாக, அதிக அழுத்தத்துடன்  தேய்த்தால் எனாமல் பாதிக்கப்படும். எனா மல்தான் பற்களுக்குக் கவசம்.  3 மாதங்களுக்கொரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். வாய் துர்நாற்றம்  இருப்பவர்கள், பற்களில் கூச்சம் இருப்பவர்கள், ரத்தம் கசிவதை உணர்பவர்கள் எல்லாம், பல் மருத்துவரின் ஆலோசனை யின் பேரில், பிரத்யேக  பற்பசை மற்றும் மவுத்வாஷ் உபயோகிக் கலாம்.

.

குழந்தைக்கு உதடு மற்றும் அண்ணப் பிளவு ஏற்படக் காரணங்கள்?

.

கர்ப்பமாக இருக்கும் போது சிகரெட் பிடிப் பது, புகையிலை போடுவது, சட்டத்துக்கு ப் புறம்பான தடைசெய்யப்பட்ட மருந்து களை எடுத்துக் கொள்வது. வலிப்பு, புற்று நோய், ஆர்த்ரைடிஸ் மற்றும் டிபி போன்ற வற்றுக்கு எடுத்துக் கொள்கிற ஸ்டீராய்டு கலந்த மருந்துகளாலும், குழந்தையின் முக அமைப்பு  பாதிக்கப்படலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி, கன்னாபின்னா வென எடுத்துக் கொள்ளும் ஆபத்தான மருந்துகளும் இதற்குக் காரணம்.

கர்பம்தரித்தது தெரியாமல், கர்பத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளும் பெண் களுக்கும் பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிற க்கலாம்.

வயது கடந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும், ஃபோலிக் அமிலம், இரும்பு ச்சத்து, அயோடின் மற்றும் துத்தநாகக் குறை பாடுள்ள  பெண்களுக்கு பிறக்கும் குழந்தை களுக்கும் அண்ணப் பிளவு பாதிக்கலாம் என்கின்றன ஆய்வுகள்.

தினம் தினம் கவனம்!

வருடம் தவறாத பல் பரிசோதனை, பல் தொடர்பான எந்தப் பிரச் னையும் பெரிதாகாமல், ஆரம்பத்தி லேயே சரி செய்யப்பட உதவும். வரு டம் ஒரு  முறை அல்லது 2 முறைகள் பற்களை முறையாக சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

தினம் 2 முறை பல் துலக்குகிற அடி ப்படை சுகாதாரம் அவசியம்.  

பற்களின் இடையில் ஃபிளாஸ் எனப்படுகிற பிரத்யேக நூல் வைத்து சுத்த ம் செய்கிற பழக்கத்தைக் கடைப்பிடி ப்பதும் நல்லது.

சரிவிகித சாப்பாடு அவசியம்.

புகைப்பழக்கம் வேண்டாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் என்றால், பல் பரிசோதனையின் போது அதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

பல்லுக்கும் இதயத்துக்கும் தொடர்புண்டா?

உண்டு என்கிறது அறிவியல். பல் ஆரோக்கியத்தை நல்லபடியாகப் பராமரிக்கும் பெண்களுக்கு, இதய நோய்கள் வரும் அபாயம் குறைவாம். வாய்  வழியே ரத்தத் தினுள் கலக்கும் தொற்றின் காரணமாக உண்டா கக்கூடிய இதயநோய்களைத் தவிர்க்க, வாய் மற்றும் பற்களை சுத்தமாகப்பராமரிப்பது ஒன் றே வழி.

– நன்றி குங்குமம் தோழி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: