ரத்தக் குழாய் அடைப்பினால் இருதயம் பாதிக்கப்பட்டு அதற்கான அறுவை சிகிச்சையில்லாத “அஞ்சியோ – ப்ளாஸ்டி” செய்து கொண்டவர்கள், உடலுறவு கொ ள்ளும்முன் சில விஷயங் களை தெரிந்து கொள்ள வேண்டும். அவை
• நீங்கள் களைப்பாக இருக்கும் போதும், அதிக அளவு ‘விருந்து’ சாப் பாட்டிற்கு பிறகும் உடலுறவு வேண்டாம். ‘டென்ஷனாக’ இருக்கும் போதும் வேண்டாம்
• அணைப்பது, முத்தமிடுவது போன்றவைகள்கூட திருப்தியளிக்கு ம். உச்சக்கட்டத்தை அடைந்தால் தான் இன்பம் என்பதில்லை.
• இரண்டு மாடிப்படிகள் ஏறின பின் உங் களுக்கு ‘பெருமூச்சு’ அல்லது மூச்சு விடு வதில் சிரமம் இவை ஏற்படாமலிருந்தால் நீங்கள் உடலுறவு கொள்ளலாம்.
• முன்தொடுதல் (Foreplay) அவசியம். இதனால் உச்சக்கட்டத்திற்கு, இருதயம் மெதுவாக தயாராகும். எனவே முன்தொ டுதலில் அதிக நேரம் செலவிடவும்.
• உடலுறவுக்கான சரியான நேரம் நீங்கள் களைப்பில்லாமல், டென்ஷன் இல்லா மல் இருக்கும் போது. விடியற்காலை ஒரு வேளை உங்களுக்கு உறவு கொள்ள சரியான நேரமாக இருக்கலாம்.
• உடலுறவின் நிலைகள் (Positions) – எது உங்களுக் கு, மார்பு அழுத்தப்படாமல், சௌ கரியமாக இருக்கிற தோ, அந்த நிலையை மேற் கொள்ளவும்.
• வீரியமுள்ள இளைஞனை போல் செயல்படாதீர்கள். உங்களின் துணைவரை அதிக பங்கு ஏற்க வைத்து, நீங்கள் சாந்தமா க இருக்க வேண்டும்.
• பாலுணர்வு ஊக்கிகளை (வயாகாரா போன்ற மருந்துகள்) எடுத்துக் கொள் ளும் முன்பு கண்டிப்பாக உங்கள் டாக் டரை கேட்க வேண் டும்.
கீழ்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உட னே டாக்டரை அணுகவும்
• உடலுறவின் போது அல்லது பிறகு, மார்வலி ஏற்பட்டால்
• உடலுறவுக்கு பின் பெருமூச்சு ஏற்பட்டு, 15 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தால்.
•வேகத்தோடு ஏற்படும் இதயத்துடிப்பும் நாடித்துடிப்பும் உண்டானா ல்,
• உடலுறவுக்கு பின் தூக்கம் வராமல் போனால்
• உடலுறவுக்கு மறுநாள் அதீத களைப்பாக இருந்தால்
– ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்