Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – சுவையான “ரவா லட்டு”

தேவையான பொருட்கள்
.
ரவை – 3/4 கிலோ
சர்க்கரை – 1/2 கிலோ
முந்திரி – 10
ஏலக்காய் – 5 (பொடி செய்தது)
பால் – 1/4 லிட்டர்
நெய் – 50 கிராம்
திராட்சை – 10
.
செய்முறை
.
1. ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
.
2. சர்க்கரையையும், ஏலக்காயையு ம் மிக்ஸியில் தனித்தனியே பொடி த்துக் கொள்ளவும்.
.
3. பிறகு சர்க்கரையையும், ரவையை யும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
.
4. இந்த கலவையில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
.
5. பிறகு காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
.
குறிப்பு

1. சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக் கவும். அப்போது தான் உருண்டை உதிராமல் இருக்கும்.

 

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍!

Leave a Reply