Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அட இது நல்ல டெக்னிக்காக இருக்கிறதே…? – முன்னணி நடிகர் நடிகைகளை வியக்க‍ வைத்த‍ நடிகை அனுஷ்கா

சில நாட்களுக்குமுன் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் சூர்யாவின் ‘சிங்கம்-2′ திரைப்படத்தில் நடித்திருந்த அனுஷ்கா சம்பளம் போக அப்படத்தின் புரமோஷன் விழாக்களுக்கு வரவேண்டும் என்றால் தனக்கு தனியாக ஒரு தொகை தரவேண் டும் என்று தயாரிப்பாளரிடம் அடம்பிடித் தா ராம். இயக்குநரும், தயாரிப்பாளரும் எவ்வளவோ சொல்லியும் நோ! என்ற ஒற்றை வரியையே திரும்ப திரும்ப சொன்னாராம் அனுஷ்கா. இதனால் வேறு வழியில்லாமல் அவர் கேட்ட தொகையை தருவதாக ஒப்புக் கொண்டாராம் தயாரிப்பாளர். அந்த வகையில் அனுஷ்கா விமானத்தில் வந்து போனது, சொகு சு ஹோட்டலில் தங்கிய செலவு, அவருடைய உதவியாளர்களுக்கு சம்பளம் என பெரும் தொகையை அழுதாராம் தயாரிப்பாளர். இதைக் கேள்விப்பட்ட சில முன்னணி நடிகர் நடிகைக ளும் “அட இது நல்ல டெக்னிக்காக இருக்கிற தே…? என்று வியந்து பாராட்டி அதே வழியை தாங்களும் பின்பற்ற முடிவெடுத் திருக்கிறார்களாம்.

Leave a Reply