Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அழுது அடம்பிடித்துச் சாப்பாடு வாங்கிச் சென்ற‌ காமராஜர்!”

காமராஜர் விருதுநகர் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தபோது அப்பள்ளி அவருடைய வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அதனால் மதிய உண வுக்கு சிறுவன் காமராஜ் வீட்டுக்கு வந்து விடுவார். வீட்டில் அம்மா அவருக்கு உணவ ளிப்பார். அச்சமயத்தில் அவரது பாட்டியும் அவர்களோடு வசித்து வந்தார். பாட்டிக்குக் காமராஜர் மீது கொள்ளைப் பிரியம்.

ஒருநாள் பாட்டியிடம் காமராஜர், “இனிமேல் மதிய உணவைக் கட்டிக் கொடுத்து விடுங்க ள். பள்ளியில் வைத்து சாப்பிட்டுக் கொள்கி றேன்’ என்று கேட்டார். பாட்டியோ, வீடு அருகில் இருப்பதால் அப்ப டித்தர முடியாது, வீட்டுக்கு வந்துதான் சாப்பிட்டுச்செல்ல வேண்டு ம் எனக் கண்டிப்புடன் கூறினார். ஆனாலும் காமராஜர் அழுது அடம்பிடிக்கவே, கோபமுற்ற பாட்டி அவரை அடித்துவிட்டார்.

அடிவாங்கினாலும் காமராஜர் சாப்பாடு கட்டித் தரவேண்டும் என்ப தில் பிடிவாதமாக இருந்தார். செல்லப் பேரனின் பிடிவாதத்தைக் கண்டு மன மிரங்கிய பாட்டி , தினமும் மதிய உண வைக் கட்டிக் கொடுக்க ஆரம்பித்தார்.

நாட்கள் சென்றன. பாட்டி, ஒருநாள் பள்ளிக்குச் சென்று மதியவேளையில் பேரன் எப்படிச் சாப்பிடுகிறான் என்ப தை மறைவாக நின்று கவனித்தார்.

அங்கே, கிழிந்த அழுக்குச் சட்டை யுடன் இருந்த ஓர் ஏழைச் சிறுவ னோடு தனது உணவைப் பகிர்ந்து உண்டுகொண்டிருக்கும் காம ராஜரைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனார். இவ்வளவு நல்ல மனம் கொண்டவனை அடித்து விட்டோமே என்று பாட்டி க்கு மிகவும் கவலையாகப் போய் விட்டது.

காமராஜரின் உணவைப் பகிர்ந்து கொண்ட அந்தச் சிறுவன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந் தவன். தினமும் தண்ணீர் குடித்துப் பசி தீர்த்துக் கொ ள்பவன். அவனைக் கண்ட காமராஜரின் மனம் பதை பதைக்கவே அவனுக்காக வீட்டிலிருந்து அழுது அடம்பிடித்துச் சாப்பாடு கொண்டு வருவதை வழக்க மாக்கிக் கொண்டார். இதனால் அவரது மனம் நிறை வு பெற்றது. இதுதான் அவர் பின்னாளில் தமிழக முதல்வரானபோது மதிய உணவுத் திட்டத்தைச் செம் மையாகச் செயல்படுத்த வித்தாக இருந்தது.

காமராஜர் விருதுநகர் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தபோது நடந்த சம்பவம் இது.

குழந்தைகளின் பசிப்பிணி போக்கிய மருத்துவர் காமராஜர்! என்றும் அவர் நாமம் வாழ்க! ஓங்குக!

-என்.நவநீதகிருஷ்ணராஜா, இராஜபாளையம்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: