Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“கச்சத்தீவு” இலங்கைக்கு தானம் கொடுக்கப்பட்டதன் உண்மையான காரணம்

“காலத்தின் கட்டாயம் அது. இந்தியா வின் பூகோள அமைப்பு இயற்கையாக வே தமிழனுக்கு எதிரியாக அமைந்து விட்டது. 1971-ம் ஆண்டு இந்தியா-பாகி ஸ்தான் போரின்போது வங்கதேசம் உரு வானது. அதை விரும்பாத `உலக போலீ ஸ்’ அமெரிக்கா, இந்தியாவை அச்சுறுத் த எண்டர்பிரைஸ் என்ற அணு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பியது. கொல்க த்தாவைத் தாக்குவது அவர்களது திட் டம். அப்படித் தாக்கியிருந்தால் இன்னொரு நாகசாகியாக கொல்கத்தா மாறியிருக்கும். அந்தச் சமயத்தில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சோவிய த் ரஷ்யா, நமக்கு ஆதரவாகக் களமி ற ங்கியதால் அமெரிக்கா பின் வாங் கியது.

அதன்பின் ஐ.நா.வில் உலகநாடுகள், `இந்துமாக் கடலில் நின்று கொண் டோ அல்லது பறந்து கொண்டோ எந் த நாடும் கடலோரப் பகுதி நாடுக ளை அச்சுறுத்தக் கூடாது’ என தீர்மானம் நிறைவேற்றின. இந்த நிலையில் இந்தியா யோசிக்கத் தொடங்கியது. இந்தியாவின் வட க்கே தரைப்பகுதி. அங்கே பாகி ஸ்தானும், சீனாவும். கிழக்கும், மேற்கும் கடல்பகுதிகள். ஆபத் தில்லை. தெற்கில் உள்ள ஒரே தரைப் பகுதி இலங்கைதான். வங்கதேசப் போருக்குப்பின் இலங்கையில் விமானதளம் அமைக்க இடம் கேட்டுக் கொ ண்டிருந்தது பாகிஸ்தான். அதைத் தடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கைப் பிரதமர் சிறீமா வோ பண்டாரநாயகாவிடம் பேசி தாஜா செய்ய முயன்றார். `கச்சத்தீவை எங்களுக்குத் தந்து விட்டால் தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு இடம் தர மாட்டோம்’ என்று பண்டார நாயகா கேட்டபோது, இந்திராவால் மறுக்க முடிய வில்லை.

எனவே, இந்தியாவைப்பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமிழனின் நிலத்தை, உணர் வை பலிகொடுத்தாலும் பரவாயில் லை எ ன்று நம்மை பலிகடாவாக்கி, கச்சத்தீவு 1974 -ல் இலங்கைக்குத் தாரை வார்த்துத் தரப்பட்டது. பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 76-ல் மீண்டும் ஓர் ஒப்பந்தம். `தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்கி ஓய்வெ டுக்கலாம். வலைகளை உலர்த்தலாம். ஆண்டுக்கு ஒரு முறை அங்கே நடக்கு ம் அந்தோணியார் கோயில் திருவிழா வில் பங்கேற்கலாம்’ என்பது அந்த ஒப் பந்தத்தின் சாரம். ஆனால் ஏற்கெனவே இருந்த உரிமைகளும், சலுகைகளும் சுத்தமாகப் பறிபோயின என் பதே நிஜம்!”

புலமைப்பித்த‍ன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகள்

Leave a Reply