Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீமான், “தனது திருமணத்தை, ரகசியமாக வைத்திருப்பது ஏன்?” – நலம் விரும்பிகள் கேள்வி

கோலிவுட்டின் பிரபல இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங் கிணைப்பாளருமான‌ சீமான் ரகசியத்திருமணம் செய்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளன‌.

பாஞ்சாலங் குறிச்சி, இனியவளே, வீர நடை, தம்பி, வாழ்த்துகள் போ ன்ற பல பிரபல படங்களின் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளருமான சீமானின் திருமணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே வதந்திகள் அவ்வ‍ப்போது கிளம்புவது பின் அடங்குவதுமாக இருந் த‍து. இவர் ஏற்கனவே ஈழத்தைச் சேர்ந்த விதவைப் பெண் போராளி ஒருவரை திருமணம் செய்யப் போவதா கவும் கூறப்பட்டது இதுவும் பொய்யாகிப் போனது

தமிழீழ தேசியத்தலைவர்  பிரபாகரன் – மதிவதனி திருமணம் நடந்த தினமான‌ அக்டோபர் 1 ந் தேதி அன்று முன்னாள் அமைச்சர், முன் னாள் சபாநாயகர், சிறந்த தமிழறிஞர், பேச்சாளர் என்று மக்களால் பாராட்டப்பட்ட அமரர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைதான் சீமான், திருமணம் செய்துள்ளதாக செய்திகள் கசிகிறது.

இந்த திருமணத்தை ஏன் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்? மக்க ளுக்கு அறிவித்துவிட வேண்டியதுதானே என்று அவரது நலம் விரு ம்பிகள் தொடர்ந்து சீமானை வலியுறுத்தி வருகிறார்கள்.

இதைய டுத்து, ஆகஸ்ட் 27 ந் தேதி திருமண வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

இது உண்மையா என்பது குறித்து சீமான்தான் விளக்கமாக கூற வேண்டும்!

tamil*

Leave a Reply