Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நமது அழகையும் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடி, கால்கள்தான்! (கால்கள் பராமரிப்பு)

நமது உடல் அழகையும் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண் ணாடி, கால்கள்தான்! ஆம்! நம் உடலிலுள்ள அத்தனை முக்கிய உறுப்புகளின் நரம்பு முனைகளும் முடிகிற இடம் நமது கால்கள்.

அவை அழகாக, ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உடலுறுப்புகளி லும் ஏதோ பிரச்னை எனத் தெரிந்து கொ ள்ளலாம். அவ்வளவு முக்கியத் துவம்  வாய்ந்த கால்களைப் பராமரி ப்பதில், பலருக்கும் ஏனோ அக்கறை இருப்பதி ல்லை. ‘‘முக அழகும் ஆரோக்கியமும் ஒருத்தருக்கு எவ்வளவு முக்கியமோ,  அதே மாதிரிதான் கால்க ளோட அழகும் ஆரோக் கியமும். ஆயிரக் கணக்குல செலவு பண்ணி பட்டுப் புடவையும், டிசைனர் புடவை யும் வாங்கி  உடுத்துவாங்க. ஆனா, பாதங்கள்ல உள்ள வெடிப்பும் சுருக் கங்களும் அந்தப் புடவை யோட அழகை எடுபடாமப் பண்ணி டும்.

அதுவே கால்கள் வழவழப்பா, அழகா இருந்தா, உங்களையும் அறி யாம உங்க தன்னம்பிக்கை அதிகரிக்கிறதை நீங்க உணர்வீங்க’’ என்கிறார் ‘அனுஷ்கா  பியூட்டி ஸ்பா மற்றும் சலூன்’ உரிமையாளர் ஷிபா னி.  அழகான கால்களுக்கு ஆலோச னைகள் சொல்கிறார் அவர்.

எங்கே போனாலும் செருப்பு போடாம, வெறும் கால்களோட நடக்காதீங்க. கால்கள்ல உண்டாகிற வெடிப்பு, நகப் பிரச்னைகள்னு பலதுக்கும் அதுதான்  காரணம். கோயில் மாதிரி யான சில இடங்களுக்கு செருப்பு போடாம போக வேண்டியிரு க்கும். போயிட்டு வந்ததும், முதல் வே லையா கால்களை  நல்லா கழுவிடு ங்க. பாதப் பிரச்னைகளுக்குக் காரண மான ஒருவிதமான வைரஸ், ஒருத்தர் கிட்டருந்து இன்னொருத்தருக்குப் பரவும். ஜாக்கிர தை!

குளிக்கும்போது கால்களையும் பாதங்களையும் தேய்ச்சு, சுத்த ப்படுத் தணும். உங்க பாத்ரூம்ல எப்போதும் பியூமிஸ் ஸ்டோன் இருக்கட்டும். குளிக்கும்  போது, இந்தக் கல்லால பாதத்தோட கடின மான பகுதி களைத் தேய்ச்சுக் கழுவினா, இறந்த செல்க ளும், வறட்சியும் நீங்கி, பாதம் வழவழ ப்பாகும்.

வெடிப்பு அதிகமிருந்தா, நல்லெண் ணெய் வைத்தியம் ட்ரை பண்ணுங்க. சில துளிகள் நல்லெண்ணெயை எடு த்து, வெடிப்புள்ள இடத்துல தடவி, கொஞ்ச  நேரம் ஊறித் தேய்ச்சுச் கழு வணும். தொடர்ந்து செய்து வந்தா, வெடிப்புகள் மறையும்.

வெந்நீர்ல கல் உப்பைப் போட்டு, கால்களைக் கொஞ்ச நேரம் ஊற வச்சுத் தேய்ச்சுக் கழுவலாம். இது களைப்பான கால்களுக்குப் புத்து ணர்வு கொடுத்து,  பாதங்களை மென்மையாக்கும்.

கால்களை ஈரப்படுத்திக்கிட்டு, கொஞ்சம் தூள் உப்பை எடுத்து, ஈரமான கால்கள் மேல மென்மையா தேய்க்கணும். உப்பு கரையற வரைக்கும் தேய்ச்சுக்  கழுவினா, இறந்த செல்கள் நீங்கி, வெடிப்பும் சரியாகும்.

கடற்கரை மணல்ல நடக்கிறது, கடல் தண்ணீர்ல கால்கள் நனைய நிற்கறதுன்னு எல்லாமே பாதங்களுக்கு நல்லது.

வீட்டுத் தரை சுத்தமா இல்லைன் னாலும் உங்க கால்கள்ல பிரச்னை வரலாம். தரையில கிருமிகள், அழு க்குகள் இல்லாம சுத்தமா இருந்தா ல்தான்,  அதுல நடக்கற உங்க கால் களும் சுத்தமா இருக்கும். சரியான கிருமி நாசினி உபயோகிச்சு, அடிக்கடி உங்க வீட்டுத் தரையை சுத்தப் படுத்தவும்.

மாதம் ஒரு முறையோ, இரண்டு முறை யோ பெடிக்யூர் செய்ய வேண்டியது அவ சியம். பார்லர்போக நேரமில்லாத வங்க, கடைகள்ல கிடைக்கிற  பெடிக் யூர் செட் வச்சு, வீட்லயே செய்துக்கலாம்.

அழகு தரும் மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடி ப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின்னர் தண் ணீரில் கழுவி  வர நாளடைவில் குணமாகும். இதை தொடர் ந்து சில நாட்கள் செய்து வந்தால் வெடிப்பு மறைந்துவிடும். விளக்கெ ண்ணெய், தேங் காய் எண்ணெய்யை  சமஅளவு எடுத்து இத னுடன் மஞ்ச தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர பித்த வெடிப்பு குண மாகும்.  

பப்பாளி பழத்தை நைஸாக அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்து போனதும் மறுபடி யும்  பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு நாளை க்கு மூன்று வேளை செய்து வந்தால் பித்த வெடிப்பு எளிதில்  குணமாகும்.
       
காலில் ஊற்ற போதுமான அளவு தண்ணீரை சூடுபடுத்தி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை  சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பான பொருளால் தேய்த் து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட  செல்கள் உதிர்ந்து விடும். இத னால் பித்த வெடிப்பு ஏற்படுவது தவி ர்க்கப் படுவதோடு பாதம் மென்மையா கவும் மாறும்.

வேப்பிலை, மஞ்சள் ஆகிய வற்றுடன் சிறிதளவு சுண் ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன் விள க்கெண்ணெய் சேர்த் து பித்த வெடிப்பு உள்ள  இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு நீங்கும். தரம் குறை வான கால ணிகளை பயன்படுத்துவதா லும் சிலருக்கு பித்த வெடி ப்பு ஏற்படும். ஆதலால்  காலணிகளை வாங்கும் போ து அது தரமா னதுதானா என பார்த்து வாங்க வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: