Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“உடல்களை பகிர்ந்துகொண்ட அளவிற்கு உள்ளங்களை பகிர்ந்துகொள்ளாததே!” விவாகரத்துக்கு காரணம்

ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமா கவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத் தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும் இனிப்பாக்க வல்லது இவ்வுறவு. புதுப்புது உறவுகளை உருவாக்கக்கூடியது. இதை விடப்புனிதமான உறவும் இல்லை நெருக்கமான உறவும் இல் லை, இது ஒரு தெய்விகமான உறவு.

இன்றைய காலகட்டத்தில் நமது அறியாமை யால், நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்கின்ற பொருளாதார சிக்கல்களினால், ஆளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளா ல், தனது ஆதிக்கமே நடைபெற வேண்டுமென்ற தன்முனைப்பால் உண்மை யான உறவுகள் பல உடைந்து போகி ன்றது .

ஒருவரின் பெருமையை ஒருவர் உணராத சிறுமையால் இன்று பரவலாக பல இல்லங்க ளில் கணவன் மனைவி உறவு தன் புனிதத்தை இழந்து புழுதியாகி விட்டது. இந்த உறவின் வீழ்ச்சியால் தான் உருவா கிறது சமூகதின் அத்தனை வீழ்ச்சிகளும்.

உடல்களை பகிர்ந்து கொண்ட அளவிற்கு உள்ளங்களை பகிர்ந்து கொள்ளாததே! பெரு கிவரும் விவாகரத்துக்களுக்கு முழுக்காரண ம். எந்த வீட்டில் ஒரு பெண்ணை அடக்கி ஆண் வெற்றி பெறுகிறானோ, அங்கே வெல்வது ஒரு மிருகம். எந்த வீட்டில் ஆணை அடக்கி பெண் ஜெயிக்கிறாலோ அங்கே ஒரு பிடரி ஜெயித்ததாகப் பொருள் .

தலை தாழ்ந்த பெண்ணும் தலை உயர் த்திய ஆணும் என்பதை விட இல்லத் தில் இருமனம் அன்பாலும் நம்பிக்கை யாலும் இணைந்து இன்ப துன்பங்க ளை இணைந்து பகிரும்போதே வாழ்வு இருபாலரு க்கும் மகிழ்வாகும்..

– திவ்யா கோபாலன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: